உள்ளடக்கத்துக்குச் செல்

செயற்கைக்கோள் அட்டவணை எண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செயற்கைக்கோள் அட்டவணை எண் (Satellite Catalog Number, அல்லது NORAD Catalog Number, NASA catalog number, USSPACECOM object number அல்லது சுருக்கமாக Catalog number) எனப்படுவது புவியைச் சுற்றி வரும் செயற்கைக்கோள்கள் அனைத்துக்கும் அவற்றை அடையாளப்படுத்துவதற்காக USSPACECOM என்ற நிறுவனத்தினால் வழங்கப்படும் ஓர் 5-இலக்க எண் ஆகும். முன்னர் இந்த அட்டவணை NORAD அமைப்பினால் வழங்கப்பட்டு வந்தது. இவ்வட்டவணையில் முதலாவது இலக்கமான 00001 என்பது 1957 அக்டோபர் 4 ஆம் நாளில் சோவியத் ஒன்றியம் ஏவிய இசுப்புட்னிக் 1 செயற்கைக்கோளை அடையாளப்படுத்துகிறது.

2012 டிசம்பரில் நாசா வெளியிட்ட தரவொன்றின் படி, 1957 ஆம் ஆண்டு முதல் 6,916 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளன.[1]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. NSSDC Master Catalog. Note: In searching all satellites, a few near-future satellites are included in the results. Retrieved: 2010-10-29.

வெளி இணைப்புகள்

[தொகு]