அலைக்கற்றை எஸ். பாண்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அலைக்கற்றை எஸ். பாண்ட் (S-Band) அலைக்கற்றை என்பது 2 முதல் 4 கிகா கெட்சு வரை உள்ள ரேடியோ அலையளவை குறிப்பதாகும். அலைபேசி தொலைதொடர்புக்கும், ராடார் இயக்கத்துக்கும், தரைவழி தொலைத்தொடர்புக்கும் பயன்படுகிறது. இதில் 2.6 கிகா கெட்சு (2500-2690 கிகா கெட்சு) என்றழைக்கப்படும் அலைநீளம் உலக வானொலி மன்றத்தால் 2000ம் ஆண்டு தரைவழி அலைப் பேசி பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.[1]

இந்திய எஸ் பாண்ட் அலைக்கற்றை சர்ச்சை[தொகு]

2011 பெப்ரவரியில் இந்திய விண்வெளித்துறையின் வணிகக் கிளையான ஆந்திரிக்சு கழகம் இதன் ஒரு பகுதியான 70 மெகா கெட்சு அளவிற்கு தேவாசு மல்டிமீடியா, பெங்களூரு என்ற நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு 2,00,000ம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.[2][3] தற்போது இந்த ஒப்பந்தத்தை பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.thehindu.com/opinion/editorial/article1200374.ece
  2. "இஸ்ரோ செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. 2 லட்சம் கோடி ஊழல்!!". 2011-02-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-02-10 அன்று பார்க்கப்பட்டது.
  3. http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=374046&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=[தொடர்பிழந்த இணைப்பு]