67பி/சுரியூமொவ்-கெராசிமென்கோ
![]() |
|
கண்டுபிடிப்பு
| |
---|---|
கண்டுபிடித்தவர்(கள்) | கிளிம் இவானொவிச் சுரியூமொவ் மற்றும் சிவெத்லானா இவனொவ்னா கெராசிமென்கோ |
பெயர்க்குறிப்பினை
| |
வேறு பெயர்கள் | 1982 VIII; 1982f; 1989 VI; 1988i; 1969 R1; 1969 IV; 1969h; 1975 P1; 1976 VII; 1975i |
காலகட்டம்செப்டம்பர் 3, 2002 | |
சூரிய சேய்மை நிலை | 5.722 வா.அ |
சூரிய அண்மை நிலை | 1.2923 வா.அ |
அரைப்பேரச்சு | 3.5072973258 வா.அ |
மையத்தொலைத்தகவு | 0.6315 |
சுற்றுப்பாதை வேகம் | 6.568 ஆ |
சாய்வு | 7.1205° |
சிறப்பியல்பு
| |
பரிமாணங்கள் | 4 கிமீ விட்டம் |
சுரியூமொவ்-கெராசிமென்கோ வால்வெள்ளி (Comet Churyumov–Gerasimenko, அதிகாரபூர்வமாக 67பி/சுரியூமொவ்-கெராசிமென்கோ (67P/Churyumov–Gerasimenko), என்பது 6.45 ஆண்டுகள் சுற்றுக்காலம் (தற்போது) கொண்ட ஒரு வால்வெள்ளி ஆகும். இதன் சுற்று வீச்சு அண்ணளவாக 12.7 மணித்தியாலங்கள் ஆகும்.[1] இவ்வாள்வெள்ளி 2015 ஆகத்து 13 இல் மீண்டும் சுற்றுப்பாதை வீச்சுக்கு சுற்றுப்பாதை வீச்சு (சூரியனுக்கு கிட்டவாக) வரவிருக்கிறது. ஏனைய வால்வெள்ளிகள் போலவே இவ்வால்வெள்ளிக்கும் அதன் கண்டுபிடிப்பாளர்களின் பெயர்கள் சூட்டப்பட்டது. கிளிம் இவானொவிச் சுரியூமொவ், சுவெத்லானா இவனோவா கெராசிமென்கோ ஆகியோர் 1969 ஆம் ஆண்டில் இதனைக் கண்டுபிடித்தனர்.
ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தனது ரொசெட்டா என்ற விண்கலத்தை, 2004 மார்ச் 2 இல் இவ்வாள்வெள்ளியை நோக்கி அனுப்பியது. இவ்விண்கலம் வாள்வெள்ளியின் சுற்றுப்பாதையை கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பின்னர் 2014 ஆகத்து 6 இல் அடைந்தது, இதன் பின்னர் ரொசெட்டா வால்வெள்ளியை ஆராய்ந்து வால்வெள்ளியில் தனது ஃபைலீ என்ற தரையிறங்கி இறங்கக்கூடிய பகுதியைக் கண்டறியும். 2014 நவம்பரில் இது வால்வெள்ளியில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கண்டுபிடிப்பு
[தொகு]
1969, செப்டம்பர் 11 இல் சோவியத் ஒன்றியம், அல்மா-ஆட்டா வானியற்பியல் கல்லூரியில் சிவெத்லானா கெரசிமென்கோ என்பவரால் எடுக்கப்பட்ட படம் ஒன்றை ஆராய்ந்த கிளிம் சுரியூமொவ் என்பவரால் இந்த வால்வெள்ளி கண்டுபிடிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rosetta's target: comet 67P/Churyumov-Gerasimenko". ESA. 2014-06-14. பார்க்கப்பட்ட நாள் 22 சூலை 2014.
வெளி இணைப்புகள்
[தொகு]- 67P on Kronk's Cometography
- 67P/Churymuov-Gerasimenko at ESA/Hubble
- Color image of 67P/Churymuov-Gerasimenko பரணிடப்பட்டது 2007-09-28 at the வந்தவழி இயந்திரம்
- Detailed description of 67P with light curves and pictures
- The Dust Trail of Comet 67P/Churyumov–Gerasimenko between 2004 and 2006
- 67P at ESA website