பிலிப் ஹியூஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிலிப் ஹியூஸ்
Phillip Hughes
Phillip Hughes.JPG
ஆத்திரேலியா ஆத்திரேலியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் பிலிப் ஜொயெல் ஹியூஸ்
பட்டப்பெயர் ஹியூசி
வகை முன்வரிசை துடுப்பாட்டக்காரர், பதில் குச்சக் காப்பாளர்
துடுப்பாட்ட நடை இடக்கை
பந்துவீச்சு நடை வலக்கை-புறத்திருப்பம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 408) 26 பெப்ரவரி, 2009: எ தென்னாப்பிரிக்கா
கடைசித் தேர்வு 18 சூலை, 2013: எ இங்கிலாந்து
முதல் ஒருநாள் போட்டி (cap 198) 11 சனவரி, 2013: எ இலங்கை
கடைசி ஒருநாள் போட்டி 12 அக்டோபர், 2014:  எ பாக்கித்தான்
சட்டை இல. 64
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2007–2012 நியூ சவுத்து வேல்சு புளூசு
2009 மிடில்செக்சு
2010 ஹாம்ப்சயர்
2011–2012 சிட்னி தண்டர்
2012 வூஸ்டர்சயர்
2013–2014 தெற்கு ஆத்திரேலியா
2012–2014 அடிலெயிட் ஸ்ட்ரைக்கர்
2013–2014 மும்பை இந்தியன்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒநாமுதபஅ
ஆட்டங்கள் 26 25 114 91
ஓட்டங்கள் 1,535 826 9,023 3,639
துடுப்பாட்ட சராசரி 32.65 35.91 46.51 47.25
100கள்/50கள் 3/7 2/4 26/46 8/23
அதிக ஓட்டங்கள் 160 138* 243* 202*
பந்து வீச்சுகள் 24
இலக்குகள் 0
பந்துவீச்சு சராசரி
சுற்றில் 5 இலக்குகள்
ஆட்டத்தில் 10 இலக்குகள் n/a n/a
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/ஸ்டம்புகள் 15/– 5/– 72/– 30/–

25 நவம்பர், 2014 தரவுப்படி மூலம்: CricketArchive

பிலிப் இயூசு (Phillip Joel Hughes, பிலிப் ஹியூஸ், (30 நவம்பர் 1988 - 27 நவம்பர் 2014) ஆத்திரேலியத் தேர்வு மற்றும் ஒருநாள் துடுப்பாட்ட வீரர் ஆவார். நியூ சவுத் வேல்சு அணிக்காக ஆரம்பத் துடுப்பாட்டக்காரராக ஈராண்டுகள் விளையாடிய பின்னர் இவர் தனது முதலாவது தேர்வுத் துடுப்பாட்டத்தை 20வது அகவையில் ஆத்திரேலிய அணியில் விளையாடினார்.[1]

இடது கை துடுப்பாட்டக்காரரான ஹியூஸ், ஆத்திரேலியாவுக்காக 26 தேர்வுப் போட்டிகளிலும், 25 ஒருநாள் போட்டிகளிலும், ஒரு இருபது20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 2013 சனவரி 11 இவர் மெல்பேர்னில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் விளையாடி 112 ஓட்டங்களைப் பெற்று, ஆத்திரேலிய ஒருநாள் போட்டி வரலாற்றில் தான் விளையாடிய முதல் ஒருநாள் ஆட்டத்திலேயே நூறு ஓட்டங்களைப் பெற்ற முதல் ஆட்டக்காரர் என்ற சாதனையைப் பெற்றார்.

இளமைக் காலம்[தொகு]

ஹியூசு ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்சு மாநிலத்தில் மாக்சுவில் என்ற இடத்தில் கிரெக், வர்ஜீனியா ஆகியோருக்கு பிறந்தார். தந்தை கிரெக் ஒரு வாழை விவசாயி, தாயார் இத்தாலிய வம்சாவளி ஆவார்.[2] சிறு வயதிலேயே மாக்சுவில் ஆர்எஸ்எல் இளைஞர் துடுப்பாட்ட அணியில் சேர்ந்து விளையாடினார்.[2] தனது 17வது அகவையில் சிட்னிக்கு இடம்பெயர்ந்து ஹோம்புஷ் ஆண்கள் உயர்தப் பள்ளியில் உயர் கல்வியைக் கற்ற வேளையில், மேற்கு புறநகர் மாவட்ட துடுப்பாட்ட அணிக்காகவும் விளையாடினார்.[3][4] 19-வயதிற்குட்பட்டோருக்கான 2008 ஐசிசி உலகக்கிண்ணப் போட்டியில் ஆத்திரேலிய அணிக்காக விளையாடினார்.

மறைவு[தொகு]

2014 நவம்பர் 25 இல், சிட்னி கிரிக்கெட் அரங்கில் நடைபெற்ற ஷெஃபீல்டு ஷீல்டு போட்டியில், ஹியூக்ஸ் ஒரு ஹெல்மெட் அணிந்து 63 ஓட்டம் என்ற நிலையில் ஆடிக்கொண்டிருந்தார். சீன் அபாட் என்பவர் வீசிய அதிவேக பந்து (பவுன்சர்) அவரது இடது காதுக்கு கீழே தாக்கியதில் படுகாயமடைந்த பிலிப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.[5]. சிட்னி சென் வின்சென்ட் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உணர்விழந்த நிலையில் இருந்தார்.[6]. அப்போட்டி உடனடியாக நிறுத்தப்பட்டது.

தன்னுடைய பிறந்த நாளை 3 நாளில் கொண்டாட விருந்த நிலையில், 2014 நவம்பர் 27 அன்று நினைவு திரும்பாமலேயே உயிரிழந்தார்.[7][8]

பிலிப் ஹியூஸ்சின் மறைவு உலகெங்கும் உள்ள துடுப்பாட்ட வீரர்கள், ரசிகர்களை உலுக்கியது. பிலிப் ஹியூஸ்சின் குடும்பத்தினர் சார்பாக ஆத்திரேலியா அணித் தலைவர் மைக்கேல் கிளார்க் இரங்கல் செய்தியை வெளியிட்டார். ஆஸ்திரேலிய பிரதமர், டோனி அபோட் இரங்கல் செய்தியை வெளியிட்டார்

உலகம் முழுவதும் இருந்து மக்கள் பிலிப் ஹியூஸ்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சமூக ஊடக தங்கள் கிரிக்கெட் மட்டை புகைப்படங்கள் வெளியிட்டனர்[9].

மறைவுக்கு பின் நடந்த நிகழ்வுகள்[தொகு]

ஹியூக்ஸ் - நார்த்தாம்டன் -ஜூலை 2009
  • பாக்கிஸ்தான் மற்றும் நியூசிலாந்து எதிரான போட்டியின் 2வது நாள் ஆட்டம் 27ஆம் நவம்பர் அன்று ரத்து செய்யப்பட்டது.போட்டி 1 நாள் நீடிக்கபட்டது. அது மீண்டும் தொடங்கியது போது, கையால் எழுதப்பட்ட" பி.ஹெச் " தொப்பியை அனைத்து நியூசிலாந்து வீரர்கள் அணிந்தனர்.
  • மைக்கேல் கிளார்க் விருப்பத்தை ஏற்று, கிரிக்கெட் ஆஸ்திரேலியா, ஹியூக்ஸ் அவரை நினைவு கூரும் வகையில் ஹியூக்ஸ் 'ஒரு நாள் சட்டை எண் 64'க்கு ஓய்வு பெற வழங்க ஒப்புதல் வழங்கியது.
  • ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் முதலில் டிசம்பர் 4 ம் தேதி பிரிஸ்பேனில் உள்ள காபா அரங்கில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அது ஓத்தி வைக்கபட்டு அடிலெய்ட் அரங்கில் டிசம்பர் 9ம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் "13 வது மனிதர் " பிலிப் ஹியூஸ் சேர்க்கபட்டார்.
  • பிலிப் ஹியூஸ் 63 (காயம் காரணமாக ஓய்வு) - என்பதற்கு பதிலாக பிலிப் ஹியூஸ் 63 (நாட் அவுட்), என அவரது கடைசி போட்டியின் அட்டவனை திருத்தப்பட்டது.

பன்னாட்டு நூறுகள்[தொகு]

தேர்வு நூறுகள்
பிலிப் இயூசின் தேர்வு நூறுகள்
இல. ஓட்டங்கள் ஆட்டம் எதிராக நகரம்/நாடு அரங்கு ஆண்டு
[1] 115 2  தென்னாப்பிரிக்கா டர்பன், தென்னாப்பிரிக்கா கிங்சுமீட் 2009
[2] 160 2  தென்னாப்பிரிக்கா டர்பன், தென்னாப்பிரிக்கா கிங்சுமீட் 2009
[3] 126 13  இலங்கை கொழும்பு, இலங்கை சிங்கள அரங்கு 2011
ஒருநாள் பன்னாட்டு நூறுகள்
பிலிப் இயூசின் ஒருநாள் பன்னாட்டு நூறுகள்
இல. ஓட்டங்கள் ஆட்டம் எதிராக நகரம்/நாடு அரங்கு ஆண்டு
[1] 112 1  இலங்கை மெல்பேர்ண், ஆஸ்திரேலியா மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம் 2013
[2] 138* 5  இலங்கை ஹோபார்ட், ஆஸ்திரேலியா பிளன்ட்ஸ்டோன் 2013

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலிப்_ஹியூஸ்&oldid=2897113" இருந்து மீள்விக்கப்பட்டது