சிங்களவர் விளையாட்டுக் கழக அரங்கம்

ஆள்கூறுகள்: 6°54′21.32″N 79°52′09.85″E / 6.9059222°N 79.8694028°E / 6.9059222; 79.8694028
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிங்களவர் விளையாட்டுக் கழக அரங்கம்
எஸ்.எஸ்.சி , மைட்லாண்ட் இடம்
இலங்கை, இங்கிலாந்து அணிகள் 2001 ஆண்டு தேர்வுத்துடுப்பாட்டத்தில்
அரங்கத் தகவல்
அமைவிடம்கறுவாத்தோட்டம், கொழும்பு
உருவாக்கம்1952
இருக்கைகள்10,000
உரிமையாளர்சிங்களவர் விளையாட்டுக் கழகம்
குத்தகையாளர்இலங்கை துடுப்பாட்டம்
முடிவுகளின் பெயர்கள்
Tennis Courts End
தென் முடிவு
பன்னாட்டுத் தகவல்
முதல் தேர்வு16 மார்ச் 1984:
 இலங்கை v  நியூசிலாந்து
கடைசித் தேர்வு23 சூலை 2008:
 இலங்கை v  இந்தியா
முதல் ஒநாப13 பெப்ரவரி 1982:
 இலங்கை v  இங்கிலாந்து
கடைசி ஒநாப22 ஆகஸ்டு 2006:
 இலங்கை v  இந்தியா
அணித் தகவல்
சிங்களவர் விளையாட்டுக் கழகம் (1974 முதல் தற்போது வரை)
28 ஏப்ரல் 2009 இல் உள்ள தரவு
மூலம்: கிரிக்கின்போ

சிங்களவர் விளையாட்டுக் கழக அரங்கம்இலங்கையில் காணப்படும் துடுப்பாட்ட அரங்கங்களில் ஒன்றாகும்.[1] இலங்கையில் துடுப்பாட்டத்தைக் கட்டுப்படுத்தும் இலங்கை துடுப்பாட்ட வாரியத்தின் தலைமையகமும் இதுவாகும்.[2] இலங்கையில் நடைபெறும் முக்கிய பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளையும், உள்நாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் இறுதிப் போட்டிகளையும் இங்கு நடத்துவதால் இவ்வரங்கம் இலங்கையின் லோட்ஸ் அரங்கம் எனப்படுகிறது.[3] 1984 ஆம் ஆண்டு இலங்க்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கும் இலங்கை துடுப்பாட்ட அணிக்குமிடையில் நடைபெற்ற தேர்வுத்துடுப்பாட்டப் போட்டி இங்கு நடைபெற்ற முதல் தேர்வுத் துடுப்பாட்ட போட்டியாகும். இவ்வரங்கின் முதலாவது ஒருநாள் பான்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டி 1982 ஆம் ஆண்டு இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கும் இலங்கை துடுப்பாட்ட அணிக்கும் மிடையில் நடைபெற்றது.

வரலாறு[தொகு]

1899 ஆம் ஆண்டு வேத்தியர் கல்லூரி, புனித தோமையார் கல்லூரி, வெசுலிக் கல்லூரின் ஆகியவற்றின் சிங்கள் மாணவர்கள் இணைந்து உருவாக்கிய அணி கோல்ட் துடுப்பாட்டக் கழகத்தை ஒரு ஓட்டத்தால் வென்றதை அடுத்து சிங்களவர் மட்டும் கொண்ட ஒரு துடுப்பாட்டக் கழகம் ஒன்றை அமைக்க திட்டமிடப்பட்டது. இதன் படி சிங்களவர் துடுப்பாட்டக் கழகம் அமைக்கப்பட்டது. கழகம் விகாரமாதேவி பூங்காவில் காணியை குத்தகைக்கு எடுத்தது.[4] இது இலங்கை தொல்பெருள் காப்பகத்துக்கு அண்மையில் அமைந்திருந்தது.[5] 1952 ஆம் ஆண்டு 20 ஏக்கர் காணி குத்தகைக்கு எடுக்கப்பட்டு தற்போதைய மைட்லாண்ட் இடத்துக்கு மாறியது. இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலத்தில் இவ்வரங்கம் நேச நாடுகளின் வானூர்தித் தளமாக காணப்பட்டது.[6]

அரங்கம்[தொகு]

இவ்வரங்கின் காட்சி அரங்கு 1956 ஆம் ஆண்டு டொனொவந் அந்திரே என்பவரின் அனுசரனையால் முதல் முறை அமைக்கப்பட்டது.[4] 1970 களில் பாரிய ஓட்டப் பலகை அமைக்கப்பட்டாலும் பின்னர் அதற்கு பதிலாக தற்போதைய ஓட்டப்பலகை அமைக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sinhalese Sports Club Ground (Maitland Place)". cricket.yahoo.com. Yahoo Cricket. பார்க்கப்பட்ட நாள் 2009-03-23.
  2. "Sinhalese Sports Club". www.cricinfo.com. கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 2009-03-23.
  3. "Sinhalese Sports Club Ground". பார்க்கப்பட்ட நாள் 2009-03-23.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. 4.0 4.1 Kumar Sangakkara (Sunday, 03 August 2003). "Sri Lanka cricket - serious winning business!". Sunday Observer. Archived from the original on 2011-06-05. பார்க்கப்பட்ட நாள் 2009-03-23. {{cite web}}: Check date values in: |date= (help)
  5. de Mel, Ronnie (28 march,1999). "Sinhalese Sports Club in the 1940's and 1950's in retrospect". The Island. Archived from the original on 2008-07-04. பார்க்கப்பட்ட நாள் 2009-03-23. {{cite web}}: Check date values in: |date= (help)
  6. Andrew, McGlashan. "Profile". கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 2009-03-23.

வெளியிணைப்புகள்[தொகு]