லா லீகா
நாடுகள் | ஸ்பெயின் |
---|---|
கால்பந்து ஒன்றியம் | ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் |
தோற்றம் | 1929 |
அணிகளின் எண்ணிக்கை | 20 |
Levels on pyramid | 1 |
தகுதியிறக்கம் | செகுன்டா டிவிசன் |
உள்நாட்டுக் கோப்பை(கள்) | கோபா டெல் ரே எசுப்பானிய உன்னதக் கோப்பை |
சர்வதேச கோப்பை(கள்) | யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு |
தற்போதைய வாகையர் | பார்சிலோனா (24வது பட்டம்) (2016-17) |
அதிகமுறை வாகைசூடியோர் | ரியல் மாட்ரிட் (32 பட்டங்கள்) |
இணையதளம் | www.laliga.es |
2019-20 |
லா லீகா (La Liga) என்பது ஸ்பெயின் நாட்டின் முதன்மையான கால்பந்துக் கூட்டிணைவுத் தொடராகும். அந்நாட்டில் பிரீமெரா டிவிசன் என்று அறியப்படுகின்றது. வணிக காரணங்களுக்காக லீகா சான்டென்டர்(Liga Santander)[1] என்று அறியப்படுகிறது. ஒவ்வொரு பருவத்திலும் 20 அணிகள் இதில் பங்கேற்கும். கடைசி மூன்று இடங்களில் முடிக்கும் அணிகள் அடுத்த பருவத்தில் இரண்டாம் நிலைக் கூட்டிணைவில் பங்கேற்க தரம் குறைக்கப்படும்; இரண்டாம் நிலைக் கூட்டிணைவிலிருந்து மூன்று அணிகள் தரம் உயர்த்தப்படும்.
1929-ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இதில் இதுவரை 60 அணிகள் பங்கேற்றுள்ளன; 9 அணிகள் வாகையர் பட்டம் சூடியுள்ளன. 1950-களிலிருந்து ரியல் மாட்ரிட் கால்பந்து கழகமும் பார்சிலோனா கால்பந்துக் கழகமும் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. ரியல் மாட்ரிட் 32 முறையும் பார்சிலோனா 24 முறையும் வாகையர் பட்டம் சூடியுள்ளன.
யூஈஎஃப்ஏ-வின் கூட்டிணைவுக் குணக கணக்கின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில், ஐரோப்பிவிலேயே லா லீகாவே சிறந்த கூட்டிணைவுத் தொடராகும். உலக அளவில் புகழ்வாய்ந்த விளையாட்டுத் தொடர்களில் லா லீகாவும் ஒன்றாகும். 2014-15 பருவத்தில் ஒவ்வொரு போட்டிக்கும் சராசரியாக 26,741 பார்வையாளர்கள் வருகின்றனர்; ஒரு விளையாட்டுப் போட்டித் தொடருக்கு இந்த வருகைப்பதிவு ஆறாம் இடம் பிடிக்கிறது; கால்பந்தாட்டத்தைப் பொருத்தவரை செருமனியின் புன்டசுலீகா, இங்கிலாந்தின் பிரீமியர் லீக் மற்றும் இந்தியாவின் இந்தியன் சூப்பர் லீக் ஆகியவற்றுக்குப் பிறகு நான்காம் இடம் பிடிக்கிறது.[2][3][4]
உசாத்துணைகள்
[தொகு]- ↑ "LaLiga and Santander strike title sponsorship deal". LaLiga. 21 July 2016. Archived from the original on 25 ஜூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 21 July 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Attendances in India, China and the USA catching up with the major European leagues". World Soccer. பார்க்கப்பட்ட நாள் 2016-05-25.
- ↑ "India » Indian Super League 2015 » Attendance » overall". worldfootball.net. பார்க்கப்பட்ட நாள் 2016-05-25.
- ↑ "European football statistics". 2008. http://www.european-football-statistics.co.uk/attn.htm.