கோபா டெல் ரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோபா டெல் ரே
கோபா டெல் ரே இலச்சினை 2012 முதல்.png
தோற்றம்1903
மண்டலம் எசுப்பானியா
அணிகளின் எண்ணிக்கை83
தற்போதைய வாகையாளர்அத்லெடிகோ மாட்ரிட் (10-வது பட்டம்)
இணையதளம்http://www.RFEF.es
2013–14 கோபா டெல் ரே

கோபா டெல் ரே (Copa del Rey, அரசரின் கோப்பை) என்பது எசுப்பானிய காற்பந்து அணிகளுக்காக ஒவ்வோராண்டும் நடத்தப்படும் கால்பந்துக் கோப்பைப் போட்டியாகும். ஜப்பானின் புகழ்மிக்க பேரரசரின் கோப்பை போன்று முடியாட்சியின் பெயரைக் கொண்டிருக்கும் காற்பந்துக் கோப்பையாகும்.

1903 ஆம் ஆண்டில் இக்கோப்பைப் போட்டி ஆரம்பிக்கப்பட்டது; ஆதலால், இதுவே மிகப் பழைமையான எசுப்பானிய காற்பந்துப் போட்டியாகும். பொதுவாக கோபா டெல் ரே வாகையர்கள் யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவுக்குத் தகுதிபெறுவர். கோப்பை வெற்றியாளர்கள் ஏற்கனவே யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவுக்குத் தகுதிபெற்றிருந்தால் இரண்டாம் இடம் பெறுவோர் யூரோப்பா கூட்டிணைவுக்குத் தகுதிபெறுவர்.

இக்கோப்பையின் தற்போதைய வெற்றியாளர்கள் அத்லெடிகோ மாட்ரிட் அணியினராவர்; இறுதிப் போட்டியில் ஒரே-நகர எதிரிகளான ரியல் மாட்ரிட் அணியினரை வென்று கோப்பையைக் கைப்பற்றினர். பார்சிலோனா அணியினரே இக்கோப்பையை வென்றிருக்கின்றனர்; அவர்கள் மொத்தமாக 26 முறையாக இதில் வாகையர் பட்டம் சூடியிருக்கின்றனர்.

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபா_டெல்_ரே&oldid=1869107" இருந்து மீள்விக்கப்பட்டது