முரளி தியோரா
முரளி தியோரா Murli Deora | |
---|---|
பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் | |
முன்னவர் | மணி சங்கர் ஐயர் |
பின்வந்தவர் | ஜெய்பால் ரெட்டி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 1937 மும்பை, மகாராட்டிரம் |
இறப்பு | நவம்பர் 24, 2014 (அகவை 76–77) |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
இருப்பிடம் | மும்பை |
படித்த கல்வி நிறுவனங்கள் | மும்பை பல்கலைக்கழகம் |
முரளி தியோரா (Murli Deora, பிறப்பு : சனவரி 10, 1937 – இறப்பு : நவம்பர் 24, 2014) காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் நடுவண் அமைச்சரும், அரசியல்வாதியும் ஆவார்.
பிறப்பு[தொகு]
முரளி தியோரா மும்பையில் பிறந்தார். மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.
அரசியல் வாழ்கை[தொகு]
ஐ. மு கூட்டணி அரசில் பெட்ரோலிய துறை அமைச்சராக பதவி வகித்தார். பின்பு கம்பெனி விவகார துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
இறப்பு[தொகு]
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் 24 நவம்பர் 2014 ல் தனது 77 வது வயதில் மும்பையில் காலமானார். [1]