உய்குர் மக்கள்
![]() உய்குர் சிறுவன் | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
கிட்டத்தட்ட 20 மில்லியன் [1] | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() | |
மொழி(கள்) | |
உய்குர் மொழி | |
சமயங்கள் | |
சுணி இஸ்லாம்[2] | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
வேறு துருக்கிக் மக்கள் |
உய்குர் மக்கள் (உய்குர் மொழி: ئۇيغۇر, சீன மொழி: 维吾尔, பின்யின்: Wéiwú'ěr) மத்திய ஆசியாவில் வசிக்கும் உய்குர் மொழியை பேசும் ஒரு மக்கள் இனம். இன்று இந்த மக்கள் பெரும்பான்மையாக சீனாவின் வடமேற்கில் உள்ள சிஞ்சியாங் மாகாணப் பகுதியில் வசிக்கின்றனர். பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், ரஷ்யா, கசக்ஸ்தான் போன்ற நாடுகளிலும் சில உய்குர் மக்கள் வசிக்கின்றனர். உய்குர் மக்களால் தமது வாழும் இடம் உய்குரிஸ்தான் அல்லது கிழக்கு துருக்கிஸ்தான் என்று குறிப்பிட்டது. உலகில் கிட்டத்தட்ட 20 மில்லியன் உய்குர் மக்கள் வாழுகின்றனர்.
சீனாவின் வட மேற்குப் பகுதியில் இருக்கும் சிஞ்சியாங் மாகாணத்தில் வாழும் உய்குர் இஸ்லாமியர்களை தடுப்பு முகாம்களில் வைத்து, மூளைச்சலவை செய்து வருகிறது சீனா அரசு. மேலும் அம்முகாமில் உய்குரி இசுலாமியர்கள் சித்திரவதை செய்யப்படுவதாகவும், கட்டாயப்படுத்தி வேலை வாங்கப்படுவதாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.[3] சீனாவின் இச்செயல்களை ஐரோப்பிய ஒன்றியம் , ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சியாக, சீன அதிகாரிகள் மீதான தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.[4]
51 நாடுகள் எதிர்ப்பு
[தொகு]சீன ஆட்சியாளர்கள் செய்யும் உய்குர் மக்கள் மீதான மனித உரிமைகளை எதிர்த்து ஐக்கிய நாடுகள் அவையின் பொதுக்குழு உள்ள மனித உரிமைகள் குழுவில் அக்டோபர் 2023ல் 51 நாடுகள் கையொப்பமிட்டு அறிக்கை அளித்துள்ளது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.uyghurcongress.org/En/AboutET.asp?mid=1107905016 Show China
- ↑ CNN.com – Xinjiang: On the new frontier – Apr 21, 2005
- ↑ சீன முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 10 லட்சம் உய்குர் முஸ்லிம்கள்
- ↑ சீன வீகர் முஸ்லிம்களுக்கு முகாம்களில் கொடுமை: சீனா மீது தடை விதித்த அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள்
- ↑ 51 Countries Sign Joint Statement at UN Against China Over Anti-Uighur Excesses