உள்ளடக்கத்துக்குச் செல்

கிழக்கு துருக்கிஸ்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிழக்கு துருக்கிஸ்தான்

சீனாவின் தன்னாட்சி மாகாணமான சிஞ்சியாங்கின் (சிவப்பு நிறம்) பரந்துபட்ட பயன்பாட்டிற்கு கிழக்கு துருக்கிஸ்தான் என்றழைக்கப்படுகிறது.
மொழிகள்
இனக் குழுக்கள்
மொத்தப் பரப்பளவு 1,664,897 சதுர கிலோமீட்டர்கள் (642,820 sq mi)
மக்கள் தொகை 24,870,000 (2018 est.)[1]
பெரிய நகரங்கள் உரும்கி
டூர்பான்
ஹமி
காரமாய்

கிழக்கு துருக்கிஸ்தான் (East Turkestan, also East Turkistan) கிபி 18-ஆம் நூற்றாண்டு முதல் சீன மக்களின் ஹான் வம்ச ஆட்சியில் இருந்து வருகிறது. இதனை சீனாவின் துருக்கிஸ்தான் என்றும் அழைப்பர். தற்போது கிழக்கு துருக்கிஸ்தான் பரப்பு, சீனாவின் வடமேற்கில் அமைந்த கிழக்கு துருக்கிஸ்தான், சீனாவின் சிஞ்சியாங் தன்னாட்சி மாகாணம் என்று அழைக்கப்படுகிறது. இதன் தலைநகரம் உரும்கி ஆகும். இதன் பரப்பளவு 1,664,897 சதுர கிலோமீட்டர்கள் (642,820 sq mi) ஆகும். கிழக்கு துருக்கிஸ்தானின் மக்கள் தொகை 2,48,70,000 (இரண்டு கோடியே நாற்பத்தி எட்டு லட்சத்தி எழுபதாயிரம்) ஆகும். கிழக்கு துருக்கிஸ்தானில் உய்குர் மக்கள் 45.84%, ஹான் சீனர்கள் 40.48%, கசக்குகள் 6.50%, ஊய் மக்கள் 4.51%, பிற சீனப் பழங்குடிகள் 2.67% வாழ்கின்றனர். கிழக்கு துருக்கிஸ்தானில் உய்குர் மொழி, சீன மொழி, கசக் மொழி, கிர்கிஸ்தானிய மொழி, ஒயிரட் மொழி, மங்கோலிய மொழிகள் பேசப்படுகிறது. சீனர்களின் ஆதிக்கத்தில் அரசியல், சமூக, சமய ரீதியாக துன்புறும் கிழக்கு துருக்கிஸ்தானின் உய்குர் மக்கள் ஐக்கிய அமெரிக்கா நாட்டின் தலைநகரான வாசிங்டன் டி சியில் செப்டம்பர் 2004-இல் நாடு கடந்த அரசை நிறுவியுள்ளனர். 11 பிப்ரவரி 1991 முதல் பிரதிநிதித்துவம் அற்ற அரசுகள் மற்றும் மக்கள் அமைப்பில் உறுப்பினராகவும் உள்ளது. இப்பகுதியில் சீன இன மக்களை குடியமர்த்தப்பட்டதால், உய்குர் மக்களின் ஆதிக்கம் குறைந்து போனது. சீன மக்கள் குடியரசு இப்பகுதியை கிழ்க்கு துருக்கிஸ்தான் எனக்குறிப்பிடுவதை விரும்புவதில்லை.[2]

இப்பகுதியை 12 நவம்பர் 1933 முதல் 16 ஏப்ரல் 1934 முதலாம் கிழக்கு துருக்கிஸ்தான் குடியரசு நிர்வாகம் செய்தது. பின்னர் 12 நவம்பர் 1944 முதல் 22 டிசம்பர் 1949 முடிய இரண்டாம் கிழக்கு துருக்கிஸ்தான் குடியரசு ஆட்சி செய்ததது.[3] பிரதிநிதித்துவம் அற்ற அரசுகள் மற்றும் மக்கள் அமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் ஒன்று கிழக்கு துருக்கிஸ்தான் ஆகும். கிழக்கு துருக்கிஸ்தானின் உலக உய்குர் பேரரவையானது, பிரதிநிதித்துவம் அற்ற அரசுகள் மற்றும் மக்கள் அமைப்பில் உறுப்பினராக உள்ளது.[4]

தற்போதைய நிலைமை

[தொகு]
Uyghur anti-China demonstration in Washington, D.C.
சீனாவிற்கு எதிராக, ஐக்கிய அமெரிக்காவின் வாசிங்டன் டி. சி நகரத்தில் உலக உய்குர் பேரரவையினர், தனி கிழக்கு துருக்கிஸ்தான் நாடு கோரி போராட்டம் நடத்தும் காட்சி

ஆப்கானித்தான், கிர்கிஸ்தான் கசக்ஸ்தான் போன்ற பட்டுப் பாதை நடு ஆசியா நாடுகளுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும், சீனாவின் வடமேற்கில் உள்ள கிழக்கு துருக்கிஸ்தான் எனும் சிஞ்சியாங் மாகாணத்தில் வாழும் ஹான் சீனர் அல்லாத பெரும்பாலான் இசுலாமிய உய்குர் மக்கள், கிர்கிஸ், கசக் மற்றும் ஊய் மக்கள் ஐக்கிய அமெரிக்காவில் உலக உய்குர் பேரரவை எனற அமைப்பை நிறுவி, அவ்வமைப்பின் மூலம் தனி உய்குர் நாடு கோரி வருகின்றனர்.[5] ஆனால் சீன மக்கள் குடியரசு உய்குர் மக்களின் கோரிக்கையை ஏற்க மறுப்பதுடன், அம்மக்களில் மொழி, பண்பாட்டு, இசுலாமிய சமய அடையாளங்களை அழித்தொழிப்பதற்கான வேலைகளை சீன மக்கள் இராண்வம் மூலம் செய்து வருகிறது. மேலும் கிழக்கு துருக்கிஸ்தானில் இலட்சக்கணக்கான ஹான் சீனர்களை குடியமர்த்தி, பெரும்பான்மை உய்குர் மக்களை சிறுபான்மையின மக்களாக செய்துவிட்டனர். மேலும் உய்குர் மக்களை தனி நாடு கோரும் தீவிரவாதிகளாக சீனா கருதுகிறது.[6]

சீனாவில் உய்குர் முஸ்லிம்களின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள பெண்களை கட்டாயப்படுத்தி கருத்தடை சாதனங்கள் பொறுத்தப்படுகின்றன என அந்நாட்டில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது. சீனா தொடர்பான வல்லுநர் அட்ரியன் ஜென்ஸ் எழுதி வெளியிட்ட இந்த ஆய்வறிக்கையைத் தொடர்ந்து, இது குறித்து ஐக்கியநாடுகள் சபை விசாரிக்க வேண்டும் என சர்வதேச அழுத்தம் பிறந்துள்ளது. இந்த அறிக்கையில் உள்ளவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்று கூறி மறுக்கிறது சீனா. ஏற்கனவே உய்குர் முஸ்லிம்களை நன்னடத்தை முகாம்களில் தங்க வைத்திருப்பதற்காக சீனா பல விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. மறுகல்வி முகாம்கள் என்று அரசு அழைக்கிற இந்த முகாம்களில் உய்குர் முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் சுமார் 10 லட்சம் பேர் அடைக்கப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் இந்த முகாம்கள் அமைக்கப்பட்டதையே சீனா மறுத்தது. ஆனால் ஜின்ஜியாங்கில் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் அரங்கேறியபோது பயங்கரவாதத்தை ஒழிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள முகாம்களை அமைத்ததாக பிறகு ஒப்புக்கொண்டது. இவ்வாறான கொடூர நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவருமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பேயோ சீனாவுக்கு அழைப்புவிடுத்துள்ளார்

மனிதாபிமானமற்ற சீனாவின் இவ்வாறான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க உலக நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து நிற்கவேண்டும் என்றும் மைக் பாம்பேயோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 2019ம் ஆண்டு பிபிசி நடத்திய ஆய்வில், ஜின்ஜியாங்கில் உள்ள குழந்தைகள் தங்கள் குடும்பத்தினரிடம் இருந்து பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறார்கள் என்பது தெரியவந்தது. முஸ்லிம் சமூகத்தினரிடம் இருந்து பிரித்து குழந்தைகளை வளர்ப்பதற்காகவே இவ்வாறான நடவடிக்கைகள் சீனாவில் மேற்கொள்ளப்படுகின்றன என்பதும் பிபிசி நடத்திய ஆய்வில் தெரியவந்தது.

அதிகாரபூர்வமாக உள்ளூரில் கிடைத்த தரவுகள் மற்றும் கொள்கை ஆவணங்களை அடிப்படையாக கொண்டே ஜென்ஸ் தனது அறிக்கையைத் தயாரித்துள்ளார். ஜின்ஜியாங்கில் உள்ள சிறுபான்மை இன பெண்களிடம் நேரடியாக பேசியும் சில தரவுகள் பெறப்பட்டுள்ளன. குறிப்பிட்ட எண்ணிக்கையில் குழந்தை பெற அரசாங்கம் விதிகளை அறிவித்துள்ள நிலையில், அந்த எண்ணிக்கையை மீறும் வகையில் பெண்கள் யாரேனும் கருவுற்றால், அவர்கள் கருவிலேயே குழந்தையை கொல்ல வற்புறுத்தப்படுகிறார்கள். கருவை கலைக்க மறுத்தால் அச்சுறுத்தப்படுவதாக முகாம்களில் உள்ள சிறுபான்மை இனத்தை சேர்ந்த பெண்களும் உய்குர் முஸ்லிம் இனத்தை சேர்ந்த பெண்களும் குற்றம்சாட்டுகின்றனர். சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகு, கருவுற்ற பெண்கள் கருத்தடை செய்துகொள்ள கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் உய்குர் முஸ்லிம் பெண்கள் கூறுகின்றனர். இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் சீன அதிகாரிகளின் தலையீடு அதிகமாக இருப்பதை பல சாட்சியங்கள் உணர்த்துகின்றன. 2016ம் ஆண்டுக்கு பிறகு ஜின்ஜியாங்கில் காவல் துறையினரின் ஒடுக்குமுறையும் அதிகரித்திருந்ததாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமீப ஆண்டுகளில் ஜின்ஜியாங்கின் மக்கள் தொகையிலேயே பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2015ம் ஆண்டுக்கும் 2018க்கும் இடைப்பட்ட காலத்தில் உய்குர் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் இரு பகுதிகளின் மக்கள் தொகை வளர்ச்சியில் 84% சரிவு காணப்படுகிறது என அட்ரியன் சேகரித்த தரவுகள் காட்டுகின்றன. கட்டாய பிறப்பு கட்டுப்பாடு மற்றும் கருத்தடை கட்டுப்பாடுகள், உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலை முயற்சியின் ஒரு அங்கம் என்றே ஜென்சின் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "National Data". Archived from the original on 15 April 2020. பார்க்கப்பட்ட நாள் 10 April 2020.
  2. https://www.bbc.co.uk/news/world-asia-china-53650246
  3. Sands, Gary (28 December 2016). "Xinjiang: Uighurs Grapple with Travel Restrictions". Eurasia Net. https://eurasianet.org/xinjiang-uighurs-grapple-travel-restrictions. 
  4. "UNPO: East Turkestan". Unrepresented Nations and Peoples Organization. 16 December 2015. Archived from the original on 7 September 2019. பார்க்கப்பட்ட நாள் 24 April 2019.
  5. Starr, S. Frederick (2004). Xinjiang: China's Muslim Borderland. M.E. Sharpe. pp. 6–7, 11, 14.
  6. Chung, Chien-peng (July–August 2002). "China's "War on Terror": September 11 and Uighur Separatism". Foreign Affairs 81 (4): 8–12. doi:10.2307/20033235. http://www.foreignaffairs.com/articles/58030/chien-peng-chung/chinas-war-on-terror-september-11-and-uighur-separatism. பார்த்த நாள்: 2011-02-06. "Beijing now labels as terrorists those who are fighting for an independent state in the northwestern province of Xinjiang, which the separatists call "Eastern Turkestan."". 
  7. சீனாவில் உய்குர் முஸ்லிம் மக்கள் தொகையை கட்டுப்படுத்த குடும்ப கட்டுப்பாட்டை கடுமையாக்கும் சீன அரசு

மேலும் படிக்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழக்கு_துருக்கிஸ்தான்&oldid=3048642" இலிருந்து மீள்விக்கப்பட்டது