அபூ பக்கர் அல்-பக்தாதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அபூ பக்கர் அல்-பக்தாதி

أبو بكر البغدادي

Mugshot of Abu Bakr al-Baghdadi, 2004.jpg
அமீர்(ஈராக், சாம் ஆகியவற்றின் இஸ்லாமிய அரசு)
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
3 ஜனவரி 2014
முன்னவர் அபு உமர் அல்-பக்தாதி
தனிநபர் தகவல்
பிறப்பு 1971[1]
சமரா, ஈராக்[1]
சமயம் சுன்னி இசுலாம்
படைத்துறைப் பணி
பற்றிணைவு அல்-காயிதா (முன்பு)
Commands இசுலாமிய அரசு
சமர்கள்/போர்கள் ஈராக் போர்
சிரியா மக்கள் போர்

அபூ பக்கர் அல்-பக்தாதி (ஆங்கிலம்: Abu Bakr al-Baghdadi, அரபி மொழி: أبو بكر البغدادي) இசிஸ் எனும் தீவிரவாத அமைப்பின் தலைவர் ஆவார்.[2] இவரது இயற்பெயர் இப்ராஹிம் அவ்வாத் இப்ராஹீம் அலி அல்-பத்ரி (Ibrahim Awwad Ibrahim Ali al-Badri, அரபி மொழி:: ابراهيم عواد ابراهيم علي البدري‎) ஆகும். இவர் டாக்டர்.இப்ராஹிம் அல்லது அபூ துவா என்றும் அறியப்படுகின்றார்.[3]

இசிஸ் எனும் தீவிரவாத அமைப்பு 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் தியதி அபூ பக்கர் அல்-பக்தாதியால் உருவாக்கப்பட்டது. இது முதலில் அல்-காயிதா அமைப்பின் ஈராக்கியப் பிரிவாகச் செயற்பட்டது.[4]

அமெரிக்கா அரசு 4 அக்டோபர் 2011 அன்று அபூ பக்கர் அல்-பக்தாதியை சிறப்புக் கவனம் பெற்ற உலகளாவியத் தீவிரவாதி (Specially Designated Global Terrorist) என்று அறிவித்து அவரைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ தகவல் தருபவர்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசு என அறிவித்தது.[5]

கொலைத் தாக்குதல்[தொகு]

அக்டோபர் 26, 2005 இல் அமெரிக்கப் போர் விமானங்கள் இவர் தங்கியிருக்கலாம் என்ற ஊகத்தில், சிரியா எல்லை அருகே குண்டு வீசி இவரைக் கொல்ல முயன்றன.[6] இவர் அல் காயிதாவின் மூத்த நபராக அடையாளம் காணப்பட்டிருந்த அச்சமயத்தில், சிரியா எல்லையில் தீவிரவாதப் பணிகளை மேற்கொள்வதும், சவூதி அரேபியா மற்றும் சிரியாவிலிருந்து போராளிகளைக் தந்திரமாக ஈராக்கினுள் ஊடுருவ வைப்பதும் இவரது பணியாக இருந்தது.[6] மேலும் அத்தாக்குதலின் போது அபூ பக்கர் அல்-பக்தாதி வீட்டினுள் தான் இருந்தார் என்றும், ஆனால் அவரது உடல் கண்டெடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.[6]

கைது அறிக்கை[தொகு]

டிசம்பர் 2, 2012 அன்று அபூ பக்கர் அல்-பக்தாதியைக் கைது செய்திருப்பதாக ஈராக்கிய அதிகாரிகள் தெரிவித்தனர்.[7][8] ஆனால் அல் ஜசீரா தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த ஈராக்கின் உள்துறை அமைச்சர் இத்தகவலை நிராகரித்து, கைது செய்யப்பட்டிருப்பது அபூ பக்கர் அல்-பக்தாதி அல்ல என்றார்.[9][10]

தொடர்புடைய கட்டுரைகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Security council al-qaida sanctions committee adds ibrahim awwad ibrahim ali al-badri al-samarrai to its sanctions list". UN Security Council Department of Public Information (5 October 2011). பார்த்த நாள் 8 October 2011.
  2. "Terrorist Designations of Groups Operating in Syria". U.S. Department of State (14 May 2014). பார்த்த நாள் 13 June 2014.
  3. "Wanted: Abu Du’a; Up to $10 Million". Rewards for Justice. பார்த்த நாள் 8 October 2011.
  4. "ISI Confirms That Jabhat Al-Nusra Is Its Extension in Syria, Declares 'Islamic State of Iraq And Al-Sham' As New Name of Merged Group". Memri (8 April 2013). பார்த்த நாள் 16 June 2014.
  5. "Terrorist Designation of Ibrahim Awwad Ibrahim Ali al-Badri". United States Department of State (4 October 2011). பார்த்த நாள் 8 October 2011.
  6. 6.0 6.1 6.2 "US launches airstrike near Syrian border". Jerusalem Post (26 October 2005). பார்த்த நாள் 8 October 2011.
  7. "Iraq's 'al-Qaeda chief' arrested". Al Jazeera (2 December 2012). பார்த்த நாள் 2 December 2012.
  8. "High-ranking al Qaeda in Iraq figure arrested, officials say". CNN. 2 December 2012. http://edition.cnn.com/2012/12/02/world/meast/iraq-al-qaeda-arrest/. பார்த்த நாள்: 2 December 2012. 
  9. Roggio, Bill (7 December 2012). "Islamic State of Iraq denies its emir captured". The Long War Journal. http://www.longwarjournal.org/archives/2012/12/islamic_state_of_ira_2.php. பார்த்த நாள்: 7 December 2012. 
  10. "Detained man is not al-Qaeda in Iraq leader". Al Jazeera (7 December 2012). பார்த்த நாள் 13 December 2012.

வெளி இணைப்புகள்[தொகு]