இழூல்சு பியான்கி
2012இல் பியான்கி | |
| பிறப்பு | 3 ஆகத்து 1989 |
|---|---|
| இறப்பு | 17 சூலை 2015 (அகவை 25) |
| பார்முலா ஒன் உலக போட்டித்தொடர் வாழ்வழி | |
| நாடு | |
| செயல்படும் ஆண்டுகள் | 2013–2014 |
| அணிகள் | மரூசியா F1 |
| பந்தயங்கள் | 34 (34 starts) |
| பெருவெற்றிகள் | 0 |
| வெற்றிகள் | 0 |
| உயர்மேடை முடிவுகள் | 0 |
| மொத்த புள்ளிகள் | 2 |
| துருவநிலை தொடக்கங்கள் | 0 |
| அதிவேக சுற்றுகள் | 0 |
| முதல் பந்தயம் | 2013 ஆத்திரேலிய கிராண் பிரீ |
| கடைசி பந்தயம் | 2014 சப்பானிய கிராண் பிரீ |
| 2014 நிலை | 17th (2 pts) |
இழூல்சு பியான்கி (Jules Bianchi, 3 ஆகத்து 1989 – 17 யூலை 2015) மரூசியா பார்முலா 1 அணிக்காக பார்முலா 1 போட்டிகளில் பங்கேற்ற பிரெஞ்சு தானுந்துப் பந்தய ஓட்டுநர் ஆவார்.
முன்னதாக பியான்கி பார்முலா ரெனோ 3.5, கிராண் பிரீ2 தொடர், பார்முலா 3 ஆகிய போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 2011 ஆம் ஆண்டில் பார்முலா 1 இல் சோதனையோட்டியாக பெர்ராரி அணியில் இணைந்தார். பின்னர் அதேபோன்ற நிலையில் போர்ஸ் இந்தியா அணியில் அடுத்தாண்டு பங்கேற்றார். 2013இல் ஆத்திரேலியாவில் நடந்த பந்தயத்தில் மரூசியா அணிக்காக அறிமுகமான பியான்கி, தனது முதல் போட்டியில் 15ஆவது இடத்தில் வந்தார். அவ்வாண்டுத் தொடரின் இறுதியில் 19ஆவது இடத்தை எட்டினார். ஆனால் புள்ளிகள் எதுவும் எடுக்கவில்லை. மலேசியாவில் 13ஆவது இடத்தை எட்டியதே அவரது அந்தாண்டின் சிறந்த சாதனையாக இருந்தது. அக்டோபர் 2013இல், அடுத்துவரும் பருவப் பந்தயத்திலும் அதே அணிக்காக ஓட்டுவார் என அந்த அணியினரால் உறுதி செய்யப்பட்டார். 2014 தொடரில், மொனாக்கோவில் தனது முதல் புள்ளிகளைப் பெற்றார்.[1]
விபத்தும் மரணமும்
[தொகு]அக்டோபர் 5, 2014 அன்று நடந்த சப்பானிய கிராண் பிரீ போட்டியில் ஈரத்தடத்தில் தனது வண்டிக் கட்டுப்பாட்டை இழந்து மீட்பு வண்டி மீது மோதினார்; இந்த விபத்தில் அவரது மூளைக்குப் பலத்த அடிபட்டது.[2][3] சப்பானிலுள்ள மருத்துவமனைக்கு முதலில் எடுத்துச் செல்லப்பட்ட பியான்கி, காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வேதிப்பொருட்கள் மூலம் ஆழ்மயக்கத்திற்கு தூண்டப்பட்டார். பின்னர் அவரது சொந்த நாடான பிரான்சிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு யூலை 17, 2015 அன்று ஆழ்மயக்க நிலையிலேயே மரணமடைந்தார்.[4] 1994ஆம் ஆண்டில் சான் மரீனோ போட்டியில் விபத்தின் மூலம் இறந்த அயர்ட்டன் சென்னாவின் மரணத்திற்குப் பின்னர் இவ்வாறு கிராண் பிரீ போட்டியில் விபத்தில் இறக்கும் முதல் ஓட்டுநராக பியான்கி உள்ளார்.[5]
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ Straw, Edd; Noble, Jonathan (25 May 2014). "Jules Bianchi says Marussia's first F1 points not luck". Autosport (Haymarket Publications). http://www.autosport.com/news/report.php/id/114141. பார்த்த நாள்: 26 May 2014.
- ↑ "Bianchi undergoes surgery after Suzuka crash". Formula 1. 5 October 2014. Archived from the original on 18 ஜனவரி 2015. Retrieved 5 October 2014.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ "Bianchi suffered brain injury in crash". F1 Fanatic. 7 October 2014.
- ↑ DiZinno, Tony (17 July 2015). "Jules Bianchi dies at age 25, his family confirms". NBC Sports. Retrieved 2015-07-18.
- ↑ "F1 driver Bianchi dies 9 months after Suzuka crash". Reuters (CNN Phillipines). 18 July 2015 இம் மூலத்தில் இருந்து 6 அக்டோபர் 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231006032350/https://www.cnnphilippines.com/sports/2015/07/17/F1-driver-Jules-Bianchi-dies-9-months-after-Suzuka-crash.html. பார்த்த நாள்: 18 July 2015.
