பார்முலா 1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பார்முலா 1
F1 logo.svg.png
வகைதிறந்த சக்கர தானுந்து
நாடு/பகுதிசர்வதேச அளவில்
துவக்க பருவம்1950[1]
ஓட்டுனர்கள்20
அணிகள்10
எஞ்சின் வழங்குவோர்பெராரி, ஹோண்டா, மெர்சிடிஸ், ரெனால்ட்
சக்கரம் வழங்குவோர்பிரேலி
ஓட்டுனர்களில் முதல்வர்நெதர்லாந்து மேக்ஸ் வெர்ஸ்டாப்பன்
அதிகாரப்பூர்வ இணையதளம்www.formula1.com
Motorsport current event.svg Current season
2003 அமெரிக்க கிராண் ப்ரி

பார்முலா 1 (Formula 1 or F1) ஆண்டு தோறும் நடைபெறும் தானுந்து பந்தயத் தொடராகும். இப்பந்தயங்கள் ஐரோப்பிய நாடுகளில் அதிகமாக நடைபெற்றாலும் தற்போது உலகின் மற்ற பகுதிகளிலும் பிரபலமாகிக் கொண்டு வருகிறது. FIA (Fédération Internationale de l'Automobile) (அகில உலக தானுந்து கூட்டமைப்பு) எனப்படும் அமைப்பால் நடத்தப்பட்டு வருகிறது.[2] வருடந்தோரும் சுமார் 11 அணிகள் இப்போட்டித் தொடரில் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியின் சார்பாகவும் இரண்டு ஓட்டுனர்கள் பங்கு கொள்வர். ஒவ்வொரு போட்டியிலும் ஒட்டுனர் பெறும் இடத்தைப் பொறுத்து அவருக்கு புள்ளிகள் வழங்கப்படும். தொடர் இறுதியில் அதிக புள்ளிகள் பெறும் ஓட்டுனருக்கு ஓட்டுனர் சாம்பியன்ஷிப் பட்டம் வழங்கப்படும். 2021ஆம் ஆண்டின் ஓட்டுனர் பட்டத்தை ஜெர்மனியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் கைப்பற்றினார். அணிக்கான வெற்றிப் பட்டத்தை ரெட் புல் (Red Bull Racing) அணி வென்றது.

பார்முலா-1 தானுந்துகள் 360 கிமீ/மணி வேகத்தை அதிகபட்சமாக எட்டும். மேலும் அதன் எஞ்சின்கள் 18000 சுழற்சிகள்/நிமிடம் (அமைப்பால் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச சுழல் வேகம்) சுழல்வேகத்தை எட்டக்கூடியவை. போட்டியில் பங்குபெறும் தானுந்துகள் 5g அளவுக்கு பக்கவாட்டு முடுக்கத்தை எட்டக் கூடியவை. தானுந்துகளின் செயல்திறன் அவற்றின் காற்றியக்கவியல் அமைப்புகள், மின்னணுவியல், வட்டகை ஆகியவற்றைப் பொருத்ததாகும்.

பார்முலா-1 தானுந்து போட்டிகள் உலக அளவில் 600 மில்லியன் தொலைக்காடசி பார்வையாளர்களால் பார்க்கப்படுகின்றன. இப்போட்டிகளில் ஒவ்வொரு வருடமும் பல பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்படுகின்றன. இதன் வருடாந்திர செலவுப் பட்டியலும் நடத்தும் அமைப்பினுக்கான அரசியலும் ஊடகங்களால் பெருமளவு கவனிக்கப்படுகின்றன. இத்தகைய கவனிப்பும் இதன் புகழும் இப்போட்டிகளுக்கு முதலீடுகளை பெருமளவில் ஈர்க்கின்றன.

வரலாறு[தொகு]

1920,1930-களில் நடைபெற்ற ஐரோப்பிய தானுந்து போட்டிகளே பார்முலா-1 போட்டிகளின் முன்னோடிகளாகும். இரண்டாம் உலகப் போரின் போது தானுந்து போட்டிகள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்தன. அதன் பின்னர் சில வருடங்கள் கிராண்ட் பிரி அல்லாத போட்டிகள் நடத்தப்பட்டன. உலக தானுந்து அமைப்பால் விதிமுறைகள் வகுக்கப்பட்டு 1950-இல் பார்முலா-1 போட்டிகள் முதல் முறையாக இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் சுற்றில் நடைபெற்றது. தானுந்தின் அமைப்பு விதிமுறைகள் வடிவமைப்பு விதிமுறைகள் பயன்படுத்தும் பொருட்கள் தொடர்பான விதிமுறைகள் ஆகியவற்றை உலக தானுந்து அமைப்பு ஒவ்வொரு வருடமும் வெளியிடுகிறது.

இந்த போட்டிகள் உலகத்திலேயே தானுந்துகளுக்காக நடத்தப்படும் போட்டிகளில் சிறப்பு வாய்ந்தவை என்பதால் பார்முலா-1 என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தானுந்து போட்டிகளின் மீள்வரவு[தொகு]

1950-ல் முதல் பார்முலா 1 போட்டித் தொடரை இத்தாலியின் ஜிசப் பரின வென்றார். அவர் ஆல்பா ரோமியோ தானுந்தினை ஓட்டினார். முதல் தொடரில் அர்ஜெண்டினாவின் ஜுவான் மானுவேல் பேஞ்சியோ-வை வென்று கோப்பையைக் கைப்பற்றினார். எனினும் ஜுவான் மானுவேல் பேஞ்சியோ 1951, 1954, 1955, 1956 & 1957 ஆண்டுகளில் பார்முலா 1 வெற்றிக் கோப்பைகளைக் கைப்பற்றினார். (இவரது 5 பார்முலா 1 தொடர் வெற்றிகள் 45 ஆண்டுகள் சாதனையாக இருந்தது. இச்சாதனை 2003-ஆம் ஆண்டு மைக்கேல் சூமாக்கர் தனது 6-வது தொடர் வெற்றியின் மூலம் உடைத்தார்.) 1952, 1953-ஆம் ஆண்டுகளில் பெராரியின் ஆல்பர்டோ அஸ்காரி பார்முலா 1 தொடர் வெற்றியாளர் ஆனார். இக்காலகட்டத்தில் ஐக்கிய ராச்சியத்தின் ஸ்டிர்லிங் மோஸ் ஒவ்வொரு ஆண்டும் வெற்றியாளர்களுக்கு கடும் போட்டியைக் கொடுத்தார். ஆனால் ஒருமுறையும் தொடர் வெற்றியாளரை ஆனதில்லை. ஆகவே, தொடர் வெற்றியாளர் ஆகாத மிகச் சிறந்த ஓட்டுனராக அவர் கருதப்படுகிறார். பேஞ்சியோ போட்டித் தொடர்களின் தொடக்க காலகட்டத்தில் மிகச் சிறந்தவராக விளங்கினார். பலரால், பார்முலா 1 "மகா அதிபதி" என கருதப்படுகிறார்.

தானுந்து விவரங்கள்[தொகு]

தொடக்க காலத்தில் பெருமளவு தானுந்து தயாரிப்பாளர்கள் பார்முலா 1-ல் பங்கேற்றனர். குறிப்பிடத்தக்கோர்- பெராரி, ஆல்பா ரோமியோ, மெர்சிடஸ் பென்ஸ், மாசராட்டி- இவர்கள் அனைவரும் உலகப் போருக்கு முன்னரும் இவ்வகைப் போட்டிகளில் பங்கேற்றோர் ஆவர். தொடக்க கால போட்டிகளில் உலகப் போருக்கு முந்தைய தானுந்து வடிவமைப்புகளே பயன்படுத்தப்பட்டன. எ-கா: ஆல்பா ரோமியோவின் 158. முன்பக்கத்தில் பொருத்தப்பட்ட எஞ்சினும் குறுகிய வட்டயங்களும் (டயர்கள்) பயன்படுத்தப்பட்டன. எஞ்சின்கள் மட்டின்றி அழுத்த மிகுதிப்படுத்தும் 1.5 லிட்டர் வடிவாகவோ, இயற்கையான காற்றை உறிஞ்சியிழுக்கும் 4.5 லிட்டர் வடிவாகவோ இருந்தன. 1952, 1953-ஆம் ஆண்டுகளில் பார்முலா 2 வகை தானுந்துகளே பயன்படுத்தப்பட்டன. ஏனெனில் அப்போது பார்முலா 1 தானுந்துகள் குறைவாகவே இருந்தன. அவை பார்முலா 1 தானுந்துகளை விட சிறியனவாகவும் ஆற்றலில் குறைந்தனவாகவும் இருந்தன. 1954-ஆம் ஆண்டு பார்முலா 1 விதிமுறைகளில் 2.5 லிட்டர் எஞ்சின் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. அப்போது மெர்சிடஸ் பென்ஸ் தனது மிகவும் மேம்பட்ட வடிவமைப்பான W196 என்ஜினை வெளியிட்டது. இந்த எஞ்சின் நேரடியான எரிபொருள் உள்ளீடு, டேச்மொட்ராமிக் ஊடிதழ் (desmodromic valve) மற்றும் மூடப்பட்ட சீரிசையோட்ட உடல் வடிவமைப்பு போன்றவற்றைக் கொண்டிருந்தது. மெர்சிடஸ் ஓட்டுனர்கள் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் வெற்றிக் கோப்பைகளைக் கைப்பற்றினர். ஆனால் 1955-ஆம் ஆண்டிறுதியில் அனைத்து வகைத் தானுந்து போட்டிகளிலிருந்தும் மெர்சிடஸ் வெளியேறியது. 1955-ஆம் ஆண்டு நிகழ்ந்த லே மான்ஸ் பேரிடர் இதன் காரணமாக கூறப்படுகிறது.

தானுந்து தொழில்நுட்பங்ள்[தொகு]

இதுவரை தானுந்தில் பயன்படுத்தப்படும் பொறி (எஞ்சின்) 2.4 லிட்டருக்கு மிகாமல் இருக்கவேண்டும் என இருந்தது. 2014-ஆம் ஆண்டு முதல் அதிகபட்சமாக 1.6 லிட்டர் அதிரடி வேக சுழற்றி பொருத்தப்பட்ட பொறியாக இருக்கவேண்டும். இந்த தானுந்துகளில் பயன்படுத்தப்படும் எரிபொருள் பெரும்பாலும் சாதாரண மகிழுந்துகளில் பயன்படுத்தக்கூடிய எரிபொருளை சார்ந்தே இருக்கும். அதிகபட்ச நேர்கோட்டு வேகமான மணிக்கு 372.6 கி.மி. 2005-ஆம் ஆண்டு மெக்லேரன் மெர்சிடஸ் தானுந்து பயன்படுத்தி ஜுவான் பப்லோ மோன்டோயா இத்தாலிய கிராண்ட் ப்ரிக்ஸ் போட்டியிலு நிகழ்த்தியுள்ளார்

இந்தியாவில் பார்முலா 1[தொகு]

இந்தியாவில் பார்முலா 1 2011-ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. 2011 முதல் 2013 வரை நடந்த மூன்று போட்டிகளிலும் ரெட் புல் அணியை சேர்ந்த செபாஸ்டியன் வெட்டல் வெற்றி பெற்றுள்ளார். 2014-ஆம் ஆண்டு மட்டும் இடைவெளி விட்டு மீண்டும் 2015-ஆம் ஆண்டு இந்தியாவில் போட்டிகள் நடைபெறுமென அகில உலக தானுந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

2014-ஆம் ஆண்டு போட்டி அட்டவணை[தொகு]

வரிசை எண் நாடு ஊர் நாள்
1 ஆஸ்திரேலியா மெல்போர்ன் 16 மார்ச்
2 மலேசியா கோலாலம்பூர் 30 மார்ச்
3 பஹரின் சகிர் 6 ஏப்ரல்
4 சீனா சாங்காய் 20 ஏப்ரல்
5 கொரியா யோங்காம் 27 ஏப்ரல்
6 ஸ்பேயின் பார்சிலோனா 11 மே
7 மொனாகோ மான்டி கார்லோ 25 மே
8 அமெரிக்கா நியூ ஜெர்ஸி 1 சூன்
9 கனடா மான்ட்ரியல் 8 சூன்
10 ஆஸ்திரியா ஸ்பில்பர்க் 22 சூன்
11 பிரிட்டன் சில்வர்ஸ்டோன் 6 சூலை
12 ஜெர்மனி ஹோக்கன்ஹிம் 20 சூலை
13 ஹங்கேரி புடாபெஸ்ட் 27 சூலை
14 பெல்ஜியம் ஃப்ரேன்கோர்சாம்ப்ஸ் 24 ஆகஸ்டு
15 இத்தாலி மோன்ஜா 7 செப்டம்பர்
16 சிங்கப்பூர் மெரினா பே 21 செப்டம்பர்
17 ரஷ்யா சோச்சி 5 அக்டோபர்
18 ஜப்பான் சுஜுகா 12 அக்டோபர்
19 அபு தாபி அபு தாபி 26 அக்டோபர்
20 யுனைடட் ஸ்டேட்ஸ் டெக்ஸாஸ் 9 நவம்பர்
21 மெக்சிகோ மெக்சிகோ சிட்டி 16 நவம்பர்
22 பிரேசில் சௌ போலோ 30 நவம்பர்

பெரும் வளர்ச்சி[தொகு]

மைய-எந்திர தானுந்து வடிவமைப்பை கூப்பர் நிறுவனம் மறு-அறிமுகம் செய்தது. இந்த வடிவமைப்பு 1950-களில் பார்முலா-3 தொடரில் வெற்றிகரமாக அந்நிறுவனத்தால் பயன்படுத்தப்பட்டதாகும். இத்திட்டம் மிகப் பெரிய அளவில் வெற்றியை ஈட்டித் தந்தது. ஆத்திரேலியரான ஜாக் பிரபாம் 1959, 1960 & 1966 ஆகிய ஆண்டுகளில் ஓட்டுனர் வெற்றிக் கோப்பையை வென்று, அவ்வித வடிவமைப்பின் தொழில்நுட்ப மேம்பாட்டை உறுதிப்படுத்தினார். ஆகையால் 1961 ஆண்டு வாக்கில் அனைத்து அணிகளும் மைய-எந்திர வடிவமைப்பில் தானுந்துகளை வடிவமைத்தன.

1958-ஆம் ஆண்டு பெராரி அணியின் ஓட்டுநராயிருந்த மைக் ஃகாத்தார்ன் முதல் பிரிட்டிசு சாம்பியன் (வாகையாளர்) ஆனார். காலின் சாப்மேன் தானுந்து அடிச்சட்ட வடிவமைப்பாளராக பார்முலா 1-ல் நுழைந்ததும் பின்னர் லோட்டசு அணியை தோற்றுவித்ததும் பிரிட்டிசு ஓட்டுநர்களும் அணிகளும் பெருமளவில் வெற்றிபெற்றன. 1962-க்கும் 1973-க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் 12 உலக ஓட்டுநர் வாகைப்பட்டங்களை பிரிட்டிசு மற்றும் காமன்வெல்த் நாட்டு ஓட்டுநர்கள் கைப்பற்றினர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. The formula was defined during 1946; the first Formula One race was during 1947; the first World Championship season was 1950.
  2. "FIA Formula 1 World Championship". Fia.com. 22 டிசம்பர் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 29 July 2013 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளியிணைப்புகள்[தொகு]

பார்முலா 1 இன் அதிகாரபூர்வ இணையதளம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்முலா_1&oldid=3370828" இருந்து மீள்விக்கப்பட்டது