அதிமீயொலிவேகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாசா எக்சு-43 சோதனை வானூர்தி மாக் 7-ல்
அதிமீயொலிவேகத்தின் ஒப்புச்செயலாக்கம் (மாக் 5)

அதிகூடிய மீயொலிவேகம் காற்றியக்கவியலில் அதிமீயொலிவேகம் எனக் குறிக்கப்படுகிறது. 1970-களிலிருந்து மாக் 5-க்கும் அதிகமான வேகங்களைக் குறிப்பிட இப்பதம் பயன்படுத்தப்படுகிறது.

அதிமீயொலிவேகம் எனக் குறிக்கப்படுவதற்கான மாக் எண் வேறுபடுகிறது, ஏனெனில் காற்றின் பண்பு மாற்றங்கள் வெவ்வேறு வேகங்களில் வெவ்வேறாக இருக்கும்; பொதுவாக மாக் எண் 5 இவ்வகைச் சூழல்களில் பயன்படுத்தப்படுகிறது. மற்றொருவகையில், திமிசுத்தாரைகள் உந்துவிசையைத் தயாரிக்க இயலாத வேகம் அதிமீயொலிவேகம் எனக் குறிக்கப்படுகிறது.

சிறப்பியல்புகள்[தொகு]

அதிமீயொலிவேகத்துக்கான வரையறை குழப்பமாகவும் சில வேளைகளில் விவாதத்துக்குரியதாகவும் உள்ளது, ஏனெனில் மீயொலிவேகத்துக்கும் அதிமீயொலிவேகத்துக்கும் இடையில் ஏதும் தொடர்ச்சியற்ற தன்மை இருப்பதில்லை. மீயொலிவேகப் பகுப்பாய்வுகளில் புறக்கணிக்கப்படக்கூடிய பல பண்புகள் அதிமீயொலிவேகத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன. அவ்வாறு முக்கியத்துவம் பெறும் அதிமீயொலிவேகத்தின் தனித்தன்மைகள்:

  1. அதிர்வுப் படலம்
  2. காற்றியக்க வெப்பமேற்றம்
  3. சிதறம் படலம்
  4. இயல்புவளிம விளைவுகள்
  5. குறைவான அடர்த்தியின் விளைவுகள்
  6. காற்றியக்க குணகங்களின் மாக் எண் சார்பற்ற தன்மை.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிமீயொலிவேகம்&oldid=3259806" இருந்து மீள்விக்கப்பட்டது