உலகளாவிய வலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ராபர்ட் கயில்லியவ் வடிவமைத்த வலையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த லோகோ

உலகளாவிய வலை (World Wide Web, www, பொதுவாக "'வலை" எனச் சுருக்கமாக அழைக்கப்படுவது) என்பது இணையத்தின் வழியாக அணுகப்படும், ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்ட மீயுரை ஆவணங்களைக் கொண்டுள்ள அமைப்பாகும். ஓர் வலை உலாவியைக் கொண்டு உரை, படம், காணொளி மற்றும் பிற பல்லூடகக் கூறுகளைக் கொண்டுள்ள வலைப் பக்கங்களைக் காணவும், மிகை இணைப்புகளைப் பயன்படுத்தி அவற்றில் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு செல்லவும் முடியும். முன்னாளில் இருந்த மீயுரை முறைமைகளைப் பயன்படுத்தி, 1989 ஆம் ஆண்டு ஆங்கில இயற்பியல் ஆய்வாளரும் உலகளாவிய வலைச் சங்கத்தின் தற்போதைய இயக்குநருமான டிம் பேர்னேர்ஸ்-லீ என்பவர் உலகளாவிய வலையைக் கண்டறிந்தார். பின்னாளில் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள CERN நிறுவனத்தில் இவருடன் ஒன்றாகப் பணிபுரிந்த ராபர்ட் கயில்லியவ் என்ற பெல்ஜிய கணினி விஞ்ஞானி இதற்கு உதவியாளராக இருந்தார். இவர்கள் 1990 ஆம் ஆண்டு ஒரு பிணையத்தில்[1] "உலாவிகள்" மூலமாகக் காணக்கூடிய வகையில் "மீயுரைப் பக்கங்களைச்" சேகரித்து வைக்கக்கூடிய "வெப் ஆஃப் நோட்ஸ்" என்னும் அமைப்பிற்கான திட்டத்தை உருவாக்கி, அந்த வலையை டிசம்பரில்[2] வெளியிட்டனர். முன்பே உள்ள இணையத்துடன் இணைக்கப்பட்டு, களப் பெயர் மற்றும் எச்.டி.எம்.எல் மொழிக்கான சர்வதேசத் தரநிலைகள் சேர்க்கப்பட்டு உலகளவில் பிற வலைத்தளங்களும் உருவாக்கப்பட்டன.

உலகளாவிய வலையானது, தகவல்களை இணையத்தின் வழியே, பயன்படுத்த எளியதும் நெகிழ்தன்மையுள்ளதுமான வடிவமைப்புகளின் மூலம் பரப்புவதைச் சாத்தியமாக்கியது. இவ்வாறாக, உலகளாவிய வலையானது இணையத்தின்[3] பயன்பாட்டைப் பிரபலமாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தது. உலகளாவிய வலை மற்றும் இணையம் ஆகிய இரண்டு சொற்களும் வழக்கில் ஒரே பொருள்படக்கூடியவையாகப் பயன்படுத்தப்பட்டாலும், உலகளாவிய வலை என்பது இணையம் என்ற சொல்லுக்குப்பொருள் ஆகாது.[4] வலை என்பது இணையத்தில் உருவாக்கப்பட்ட ஓர் பயன்பாடாகும்.

குறிப்புகள்[தொகு]

  1. "உலகளாவிய வலை: ஒரு மீயுரைப் பணித்திட்டத்திற்கான திட்ட அறிமுகம்", டிம் பெர்னெர்ஸ்-லீ மற்றும் ராபர்ட் கயில்லியவ், நவம்பர் 12, 1990.
  2. Berners-Lee, Tim. "Pre-W3C Web and Internet Background". World Wide Web Consortium. பார்த்த நாள் April 21, 2009.
  3. இணையம் Free-Dictionary.com; அணுகியது: 25-11-08
  4. WWW(World Wide Web) TechTerms.com; அணுகியது: 25-22-08

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலகளாவிய_வலை&oldid=2141951" இருந்து மீள்விக்கப்பட்டது