வட்டக்கச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வேளாண்மைக் கிராமம்.

இலங்கையின் விடுதலைக்குப்பின் நிறுவப்பட்ட ஒற்றையாட்சியின் படி நிர்வாக அலகுகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டன. அதனடிப்படையில் இலங்கையானது 9 மாகாணங்கள் (Province) ஆகவும், 25 மாவட்டங்களாகவும் (Districts), ஒவ்வொரு மாவட்டமும் பல உதவி அரச அதிபர் பிரிவுகளாகவும் (A.G.A's divisions), பல்வேறு கிராம சேவை அலுவலர்பிரிவுகளாகவும் ஒழுங்குபடுத்தப்பட்டது. அதனடிப்படையில் வடக்கு மாகாணத்தின், கிளிநொச்சி மாவட்டத்தில், கரைச்சி உதவி அரச அதிபர் பிரிவுக்குட்பட்ட 4 கிராமசேவையாளர் பிரிவுகள் "வட்டக்கச்சி" பிரதேசத்தில் உள்ளடக்கப்படுகின்றன.

இலங்கை அரசின் 1948 ஆண்டு சட்டக்கோவையின் 464 ஆம் அத்தியாயமான காணி அபிவிருத்திக் கட்டளை சட்டத்தின் 19(2)ஆம் பிரிவின் கீழ் வட்டக்கச்சி பிரதேசத்தின் நிலப்பரப்பு (மேட்டுநிலம், வயல்நிலம்) ஒழுங்குபடுத்தப்பட்டு 1952 ஆம் ஆண்டளவில் ஒரு குடும்பத்திற்கு 2 ஏக்கர் மேட்டுநிலம், 3 ஏக்கர் வயல் நிலம் என நிலப்பகிர்வு செய்து அளிக்கப்பட்டதுடன் 1969 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க சட்டத்தின் படியும், 1981ஆம் ஆண்டின் 27 இலக்க திருத்தப்பட்டவாறான சட்டபிரிவின் மூலமாகவும் காணி பயன்பாடு அனுமதிப்பத்திரங்களும் (Permit), உறுதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

அமைவிடம்[தொகு]

இலங்கையின் மத்திய நகரமான கண்டியையும், யாழ்ப்பாணத்தையும் இணைப்பது ஏ-9 நெடுஞ்சாலை. இலங்கையை பொறுத்தவரையில் பொருளாதார ரீதியாகவும்,அமைப்பு ரீதியாகவும் இன் நெடுஞ்சாலை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு முக்கிய நகர் கிளிநொச்சி ஆகும். இந்நகருக்கு கிழக்கே 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது வட்டக்கச்சி.

கல்வி[தொகு]

இங்கு வாழும் மக்களின் பிரதான தொழில் வேளாண்மையாக இருந்தபோதிலும் அனைவருமே கல்விகற்பதில் ஆர்வமும், அறிவுத்தேடலும் உடையவர்களாவர். மாவட்ட ரீதியில் வெளிவரும் புள்ளிவிபரங்களை எடுத்து நோக்கும் போது இப்பிரதேச மாணவர்களே அரச பொதுப்பரீட்சைகளில் அதிக புள்ளிகளை பெற்று தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர்.

இங்குள்ள பள்ளிகள்:

வேளாண்மை[தொகு]

வட்டக்கச்சி மக்களின் பிரதான தொழில் விவசாயமாகும். இங்கு இருபோக நெற்செய்கை (சிறுபோகம்,பெரும்போகம்) நடைபெறுகிறது. தெங்குப் பயிர்ச்செய்கையும் இங்கு முக்கியமானது. கால்நடை வளர்ப்பும், வீட்டுத்தோட்ட பயிர்செய்கையும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இங்கு நடைபெறும் சிறுபோக நெற்செய்கை இலங்கையின் மூன்றாவது பெரிய நீர்த்தேக்கம் என்று கூறப்படும் இரணைமடு நீர்த்தேக்கத்திலிருந்து செய்யப்படும் நீர்ப்பாசனத்தின் மூலமும், பெரும்போக நெற்செய்கை மழையை நம்பியும் மேற்கொள்ளப்படுகின்றது.

வட்டக்கச்சியில் மாவீரர் நினைவு மண்டபம்

பண்பாடு[தொகு]

இங்கு இந்து, கிறித்தவம் ஆகிய சமயங்கள் பின்பற்றப்படுகின்றன. இந்துக்களே பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். 1990ஆம் ஆண்டுக்கு முன்னர் இசுலாமியர்களும் வசித்துள்ளனர். 1990அக்டோபரில் இங்கு வாழ்ந்த முஸ்லிம்கள் சில அசாதாரண அரசியல் காரணங்களால் இலங்கையின் பிற பகுதிகளுக்கு குறிப்பாக தென்னிலங்கைக்கு இடம்பெர்ந்தனர்.


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வட்டக்கச்சி&oldid=1705219" இருந்து மீள்விக்கப்பட்டது