கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவு
Appearance
கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவு இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கில் யாழ்ப்பாண நீரேரியின் தென்கரையில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 44 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.
- வட்டக்கச்சி
- வன்னேரிக்குளம்
- ஆனைவிழுந்தான்
- கண்ணகைபுரம்
- கந்தபுரம்
- அக்கராயன்குளம்
- கோணாவில்
- பொன்னகர்
- பாரதிபுரம்
- மலையாளபுரம்
- விவேகானந்தநகர்
- கிருஷ்ணபுரம்
- உதயநகர்
- அம்பாள்குளம்
- செல்வநகர்
- ஆனந்தபுரம்
- தொண்டமான்நகர்
- கனகாம்பிகைக்குளம்
- கிளிநொச்சி நகரம்
- மருதநகர்
- பன்னாங்கண்டி
- கனகபுரம்
- திருநகர்
- கணேசபுரம்
- ஜெயந்திநகர்
- பெரியபரந்தன்
- உருத்திரபுரம்
- சிவநகர்
- ஊற்றுப்புலம்
- புதுமுறிப்பு
- மாயவனூர்
- இராமநாதபுரம்
- மாவடியம்மான்
- பெரியகுளம்
- கல்மடுநகர்
- திருவையாறு ஆகிய ஊர்கள் இப் பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. வடக்கில் யாழ்ப்பாண நீரேரி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவு என்பனவும், கிழக்கில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவும், தெற்கில் முல்லைத்தீவு மாவட்டமும், மேற்கில் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவும் உள்ளன. இப்பிரிவு 358 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது.
கரைச்சி என்ற பெயரில் தற்போது எந்த ஒரு ஊரும் இல்லை. ஒரு நிர்வாகப் பிரிவு மட்டுமே. இது முன்னர் யாழ்ப்பாண மாவட்டத்தின் ஒரு பிரிவாக இருந்து, பின்னர் 1980களில் கிளிநொச்சி மாவட்டம் பிரிக்கப்பட்டதில் அதனுடன் இணைக்கப்பட்டது.
கரைச்சி என்பது கரை (கடல், ஏரி போன்றவற்றின் கரையோரப் பகுதி) என்ற சொல்லில் இருந்து பிறந்திருப்பதாகக் கருதப்படுகிறது.[1]
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]வெளியிணைப்புக்கள்
[தொகு]- கிளிநொச்சி மாவட்ட நிர்வாகப் பிரிவுகளைக் காட்டும் நிலப்படம்[தொடர்பிழந்த இணைப்பு]
- வட்டக்கச்சி நட்பு வட்டம் பரணிடப்பட்டது 2010-03-28 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Karaicci, Kuṭṭik-karaicci". TamilNet. August 16, 2008. https://www.tamilnet.com/art.html?artid=26673.