உள்ளடக்கத்துக்குச் செல்

ஹமாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹமாஸ்
Hamas
தலைவர்காலித் மஷால்,
இஸ்மைல் ஹனியா,
மகமுத் சஹார்
நிறுவனர்ஷேக் அகமது யாசின்
தொடக்கம்1987
தலைமையகம்காசா
கொள்கைபாலஸ்தீன தேசியம்,
சண்ணி இஸ்லாமியம்
இணையதளம்
www.palestine-info.com www.filistinetkinlik.com

அமாசு (Ḥamas, அரபு: حركة حماس அல்லது Ḥarakat al-Muqawama al-Islamiyya "இசுலாமிய எதிர்ப்பு இயக்கம்") எனப்படுவது பாலத்தீன சுணி இசுலாமிய போராளி இயக்கமும் பாலத்தீனத்தில் அதிகூடிய இடங்களைக் கைப்பற்றியுள்ள அரசியல் கட்சியும் ஆகும்[1].

அமாசு இயக்கம் 1987 ஆம் ஆண்டு சேக்கு அகமது யாசின், மற்றும் முகமது தாகா ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது. இசுரேலிய இராணுவத்தினர் மீதும் பொதுமக்கள் மீதும் பல தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தாலும், பல சமூக வேலைத்திட்டங்களை இவ்வியக்கம் முன்னெடுத்து நடத்திச் செல்லுகின்றனர். இதனால் இது பாலத்தீனர்களிடையே மிகுந்த செல்வாக்கைக் கொண்டுள்ளது[2].

இஸ்ரேல் நாட்டைப் பாலஸ்தீனர்களுக்கு மீளப் பெற்றுக்கொடுத்து இஸ்ரேல், மேற்குக் கரை, காசா ஆகிய பகுதிகளை இஸ்லாமியக் குடியரசாக மாற்றுவதே ஹமாசின் முக்கிய குறிக்கோள் ஆகும்[3].

பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அரபாத் இறந்த நாள் தொடக்கம் அங்கு நடந்த இடைத்தேர்தல்களில் ஹமாஸ் இயக்கம் பல வெற்றிகளைப் பெற்று வந்தது. ஜனவரி 2006 இல் 132 தொகுதிகளுக்கு நடந்த பொதுத் தேர்தல்களில் ஹமாஸ் 76 இடங்களைப் பெற்று பெரு வெற்றி பெற்றது[4].

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Hamas sweeps to election victory", BBC News.
  2. "Palestinian election raises varying opinions within U" பரணிடப்பட்டது 2008-06-09 at the வந்தவழி இயந்திரம். The Minnesota Daily. January 31, 2006
  3. Calls for the destruction of Israel:
  4. "Who are Hamas?". BBC News. January 26, 2006. http://news.bbc.co.uk/2/hi/middle_east/1654510.stm. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹமாஸ்&oldid=3812255" இலிருந்து மீள்விக்கப்பட்டது