உள்ளடக்கத்துக்குச் செல்

யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யாழ் சம்பத்தரிசியார் கல்லூரி, (St.Patrick’s College) குருநகர், யாழ்ப்பாணம், இலங்கையில் உள்ள முன்னணிக் கத்தோலிக்கப் பாடசாலைகளுள் ஒன்று. ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இப் பாடசாலை 1850 ஆம் ஆண்டில், யாழ்ப்பாணம் கத்தோலிக்க ஆங்கிலப் பாடசாலை (Jaffna Catholic English School) என்னும் பெயரில் தொடங்கப்பட்டது. இந்த கல்லூரி யாழ்ப்பாண புனித மரியாள் பேராலயம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.[1][2][3]

மொன்சைனர் ஒராசியோ பெட்டாச்சினி (Monsignor Orazio Bettacchini) என்பவர் இதனை நிறுவினார். அடுத்த ஆண்டில் இதன் பெயர் யாழ்ப்பாணம் ஆண்கள் செமினரி (Jaffna Boys’ Seminary) ஆனது. 1881 ஆம ஆண்டில் இது முழு அளவிலான உயர்தரப் பாடசாலையாகப் பதிவு செய்யப்படதுடன், இதன் பெயர் சம்பத்தரிசியார் கல்லூரி என மாற்றப்பட்டது. 1961 ஆம் ஆண்டில் இலங்கையிலுள்ள பாடசாலைகள் அனைத்தும் அரசுடமை ஆக்கப்பட்டபோது, சமய நிறுவனங்களுக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி இப் பாடசாலையை கட்டணம் அறவிடாத தனியார் பாடசாலையாகவே பேணுவதென முடிவு செய்யப்பட்டது.

ஆண்களுக்கான இப் பாடசாலையைக் கத்தோலிக்க திருச்சபையே நடத்தி வந்தாலும் பல்வேறு சமயங்களைச் சேர்ந்த மாணவர்களும் இங்கே கல்வி கற்கின்றனர். 1887 ஆம் ஆண்டு முதலே இது விடுதியுடன் கூடிய பாடசாலையாக இயங்கி வருவதால் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மாணவர்கள் இங்கு தங்கிப் படித்தனர்.

வெளியிணைப்புக்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Schools Basic Data (2010). Northern Provincial Council. 2010. Archived from the original on 3 December 2013.
  2. The Catholic directory of Sri Lanka, 1989/90 (in ஆங்கிலம்). J.B.C. Anandappa. 1990.
  3. "Province – Northern" (PDF). Schools Having Bilingual Education Programme. Ministry of Education. Archived from the original (PDF) on 3 December 2013.