பூநகரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பூநகரி
Gislanka locator.svg
Red pog.svg
பூநகரி
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - கிளிநொச்சி
அமைவிடம் 9°30′14″N 80°12′38″E / 9.504020°N 80.210649°E / 9.504020; 80.210649
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)

9°30′14.47″N 80°12′38.34″E / 9.5040194°N 80.2106500°E / 9.5040194; 80.2106500 பூநகரி இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகும். இதனுள் இரணைதீவு. பல்லவராயன்கட்டு, பூநகரி ஆகிய மூன்று உள்ளூராட்சி மன்றப் பிரிவுகள் அடங்குகின்றன. இப்பிரதேசம் ஒரு குறிப்பிடத்தக்க தொல்லியல் ஆய்வுக் களமும் ஆகும். பூநகரி இறங்குதுறை யாழ்ப்பாணத்துக்குச் செல்வதற்கான மாற்றுப் பாதையாகும்.

பூநகரில் அமைந்திருந்த கூட்டுப் படைத் தளத்தைத் தமிழீழ விடுதலைப் புலிகள் 1993 இல் தவளைப் பாய்ச்சல் நடவடிக்கை மூலம் பலத்த சேதங்களுக்குள்ளானதோடு நாகதேவன் துறையிலுள்ள அதிவேகப் படகுகள் புலிகளின் வசமாகியது. பின்னர் 2000 ஆண்டளவில் எதுவித தாக்குதலும் இன்றி ஆனையிறவு இராணுவ முகாமைப் பலப்படுத்தும் நோக்குடன் பின்வாங்கிச் சென்றனர். இப்பொழுது பலாலித் தளத்தின் மீதான எறிகணைத் தாக்குதல்கள் பூநகரியிலிருந்தே மேற்கொள்ளப்படுவதாகக் கருதப்படுவதால் போரியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவும் உள்ளது.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூநகரி&oldid=2652100" இருந்து மீள்விக்கப்பட்டது