கந்தசாமி கமலேந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
க. கமலேந்திரன்
K. Kamalendran


மாகாண சபை உறுப்பினர்
1வது வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
அக்டோபர் 2013 – 2014
யாழ்ப்பாண மாவட்டத்துக்கான வட மாகாண சபை உறுப்பினர்
பதவியில்
அக்டோபர் 2013 – 2014
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
பிற அரசியல்
சார்புகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
இனம் இலங்கைத் தமிழர்

கந்தசாமி கமலேந்திரன் (Kandasamy Kamalendran) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் ஆவார்.

அரசியலில்[தொகு]

கமலேந்திரன் 2013 மாகாணசபைத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் பரிந்துரைக்கப்பட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டார். இவர் 13,632 விருப்பு வாக்குகள் பெற்று வட மாகாண சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இவர் மாகாண சபை உறுப்பினராக 2013 அக்டோபர் மாதத்தில் இலங்கை அரசுத்தலைவரின் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். கொலைக்குற்றச்சாட்டு ஒன்றின் காரணமாக மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்து 2014 ஆம் ஆன்டில் நீக்கப்பட்டார்.

கொலைக் குற்றச்சாட்டு[தொகு]

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் ரெக்சின் என்பவரைப் படுகொலை செய்தாரென்ற சந்தேகத்தின் பேரில் கந்தசாமி கமலேந்திரன் உள்ளிட்ட மூவரை காவல்துறையினர் 2013 டிசம்பர் 3 ஆம் நாள் கொழும்பில் கைது செய்தனர்.[3] நெடுந்தீவு பிரதேச சபை தலைவரான டானியல் ரெக்சின் (44) 2013 நவம்பர் 26ம் திகதி புங்குடுதீவிலுள்ள அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். கொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் 9 மிமீ கைத்துப்பாக்கி மற்றும் 11 ரவைகளும் கமலேந்திரனிடம் இருந்து மீட்கப்பட்டன.[4] கமலேந்திரன் கைது செய்யப்பட்டதை அடுத்து இவர் ஈழ மக்கள் சனநாயகக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.[5][6] ஆனாலும், வடமாகாண சபை அமர்வுகளில் கலந்துகொள்ள ஊர்காவற்துறை நீதிமன்றம் அனுமதி வழங்கியது.[7] ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இவரை 2014 மார்ச் மாதத்தில் கட்சியில் இருந்து இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்தது.[8] 2014 ஆகத்து 29 இல் இவர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டது.[9] ஆனாலும், கமலேந்திரனை பிணையில் எடுப்பதற்கு எவரும் வராத காரணத்தால், அவர் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.[10]

மேற்கோள்கள்[தொகு]

  1. "PART I : SECTION (I) ó GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Northern Province Provincial Council". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1829/33. 25 September 2013. http://www.documents.gov.lk/Extgzt/2013/PDF/Sep/1829_33/PG%201763%20%28E%29%20%20I-%201%20%20%28P.C%29.pdf. பார்த்த நாள்: 8 டிசம்பர் 2013. 
  2. "PROVINCIAL COUNCIL ELECTIONS 2013 ñ Results and preferential votes: Northern Province". டெய்லி மிரர். 26 செப்டம்பர் 2013. http://www.dailymirror.lk/news/infographics/36078-provincial-council-elections-2013--results-and-preferential-votes-northern-province.html. 
  3. வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் கமலேந்திரன் உட்பட மூவர் கைது[தொடர்பிழந்த இணைப்பு], தினகரன், டிசம்பர் 5, 2013
  4. K.Kamalendran, EPDP Stalwart & Opposition Leader arrested and remanded, ஏசியன் ட்ரிபியூன், டிசம்பர் 5, 2013
  5. "ஈ.பி.டி.பி. கட்சியிலிருந்து கமலேந்திரன் நீக்கம்". வீரகேசரி. 3 பெப்ரவரி 2014. http://www.virakesari.lk/?q=node/361192. பார்த்த நாள்: 21 பெப்ரவரி 2014. 
  6. Kamalendran suspended from EPDP பரணிடப்பட்டது 2013-12-09 at the வந்தவழி இயந்திரம், சிலோன் டுடே, டிசம்பர் 5, 2013
  7. "கமலேந்திரனுக்கு விளக்கமறியல் நீடிப்பு! சபை அமர்வில் கலந்து கொள்ள நிபந்தனைகளுடன் அனுமதி". தமிழ்வின். 6 பெப்ரவரி 2014 இம் மூலத்தில் இருந்து 2014-04-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140417232026/http://www.tamilwin.com/show-RUmsyCTaMdfty.html. பார்த்த நாள்: 6-02-2014. 
  8. "ஐ.ம.சுதந்திர முன்னணியிலிருந்து கமலேந்திரன் நீக்கம்". தமிழ்வின். 11 மார்ச் 2014. http://www.tamilwin.com/show-RUmsyDSVLVht7.html. [தொடர்பிழந்த இணைப்பு]
  9. "கந்தசாமி கமலேந்திரன் பிணையில் விடுதலை". தினகரன். 30 ஆகத்து 2014 இம் மூலத்தில் இருந்து 2014-09-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140903094135/http://thinakaran.lk/2014/08/30/?fn=n1408308. பார்த்த நாள்: 30-06-2014. 
  10. கமலேந்திரனை பிணையில் எடுக்க எவரும் இல்லை: விளக்கமறியல் நீடிப்பு பரணிடப்பட்டது 2020-09-21 at the வந்தவழி இயந்திரம், தமிழ்வின், செப்டம்பர் 3, 2014