சி-130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி-130ஜே "சூப்பர்" ஹெர்குலிஸ்
அமெரிக்க விமானப்படையின் சி-130ஜே
வகை இராணுவப் போக்குவரத்து வானூர்தி, வான்வழி எரிபொருள் நிரப்பு
உருவாக்கிய நாடு ஐக்கிய அமெரிக்கா
உற்பத்தியாளர் லொக்கிட் மார்டின்
முதல் பயணம் 5 ஏப்ரல் 1996
அறிமுகம் 1999
தற்போதைய நிலை சேவையில்
முக்கிய பயன்பாட்டாளர்கள் ஐக்கிய அமெரிக்க வான்படை
ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு
அரச வான்படை
இத்தாலிய வான்படை
மற்றும் பல
உற்பத்தி 1996–தற்போது
தயாரிப்பு எண்ணிக்கை 3 நவம்பர் 2011இன்படி 250
அலகு செலவு ஐஅ$70.37 மில்லியன்[1]
முன்னோடி லொக்கிட் சி-130 ஹெர்குலிஸ்

சி-130ஜே சூப்பர் ஹெர்குலிஸ் இராணுவப் பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட விமானம் ஆகும். இதன் முதல் தயாரிப்பை லாக்கிட் மார்டின் (Lockheed Martin) நிறுவனம், 5 ஏப்ரல் 1996ல் துவங்கியது. பின்னர் 1999ல் தான் விமானத்தை பயன்பாட்டிற்கு விட்டது. இந்த விமானத்தின் தயாரிப்பு உரிமை அமெரிக்காவின் நிறுவனம் தன் கைவசம் வைத்துள்ளது.

இவ்வகையான விமானங்கள் வானில் பறந்து கொண்டிருக்கும்போதே எரிபொருளை நிரப்பும் தகுதி கொண்டது. 2011 நவம்பர் 3 ஆம் தேதிவரை 250 விமானங்களைத் தயாரித்து வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் டர்போபுரொப் (Turboprop) வகையைச் சேர்ந்த 4 எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. லாக்கிட் மார்டின் நிறுவனம் விமானத் தயாரிப்பில் 50 வருடங்களைக் கடந்து சிறப்பாக சேவை செய்துவருகிறது.

விபத்து[தொகு]

2014ம் ஆண்டு மார்ச் மாதம் 28ம் தேதி சி-130ஜே விமானப்படை விமானம் உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஆக்ரா நகரில் உள்ள விமானப்படைத்தளத்திலிருந்து மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியர் என்ற நகருக்கு அறுகில் பறந்தபோது விபத்துக்குள்ளானது. இதில் 5பேர் மரணமடைந்தார்கள். இந்த விமானத்தை இந்தியா அமெரிக்காவின் தனியார் நிருவனத்திடம் 1,000 கோடி விலைக்கு வாங்கியது. இது 20 டன் எடையை தூக்கிச்செல்லும் திறன் கொண்டது. [2][3][4]

உசாத்துணை[தொகு]