உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் தாக்குதல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் தாக்குதல்கள் தொடர்ந்து பாக் நீரிணை, மன்னார் வளைகுடா மற்றும் தமிழக- இலங்கை கடல் எல்லைகளில் இருந்து வருகிறது. இரு நாடுகளின் மீனவர்கள் கடல் எல்லைகளை தாண்டுவதும் அதனால் கைது செய்ப்படுவதும் மீண்டும் அவர்களை விடுவிப்பதும் என்று இருக்கிறது, இதுவரை சர்வதேச கடல் எல்லை கோட்டுக்காண (ஐ.எம்.பி.எல்)(International Maritime Boundary Line ( IMBL)) ஒப்பந்தம் மூலமே தீர்வு காணப்பட்டு வருகிறது.

பின்புலம்

[தொகு]

இந்தியப் பெருங்கடல், உலகின் மிகப் பெரிய மீன்களைப் பிடிக்கின்ற பகுதிகளைக் கொண்டுள்ளது. அதாவது மொத்த உலகின் மீன் பிடிக்கும் பகுதியில் 15% சதவீதம் இந்தியப் பெருங்கடலில் உள்ளது.(வருடத்திற்கு சுமாராக 9 மில்லியன் டன்).[1] இந்தப் பகுதிகளின் பெரும் பகுதிகளில் தமிழக ஈழ மீனவர்கள் நெடுங்காலம் மீன்பிடித்து வருகிறார்கள். இவர்களுக்கு இடையே ஈழப் போராட்டத்தின் முன்பு பெரிய ஆவணப்படுத்தப்பட்ட பிணக்குகள் எதுவும் ஏற்படவில்லை. யார் எப்பகுதியில் மீன்பிடிக்கலாம் என்பதை நிலைநாட்ட தமிழ் மீனவர்களுக்கு இடையே மரபுவழி வழிமுறைகள் இருக்கின்றன.[2]

ஈழப் போர் காலத்தில் இலங்கை இந்திய கடற்படைகள் இக் கடற்பரப்பைத் தமது கடுமையான கண்காணிப்புக்குள் கொண்டு வந்தன. ஈழப் போராட்டத்தின் காலப் பகுதியிலும் அதனைத் தொடர்ந்தும் அப்பகுதியில் பயணிப்போர் தொழில்செய்வோர் மீது இலங்கைக் கடற்படை அவர்களைப் போராளிகள் எனக் கூறித் தாக்குதல் செய்வது வழமை. இத்தகைய தாக்குதல்களும் வன்முறைகளும் ஈழப் போர் முடிந்த பின்னரும் இலங்கைக் கடற்படையால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவிற்கும் இலங்கைக்குமான எல்லைகளின் தூரம் வெறும் 12 கடல் மைல்கல் தான். இரவு நேரங்களில் மீன்பிடிப் படகுகளுக்கும் பைரசி எனப்படும் கடல் கொள்ளையர்களின் படகுகளுக்கும் வேறுபாடு கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது. 2006 வருடத் தகவலின் படி கிழக்குக் கடல் பகுதியில் பதிவு செய்யப்பட்ட படகுகளின் எண்ணிக்கை மட்டுமே 1.65 லட்சம் என்று கூறப்படுகிறது அதே எண்ணிகையிலான பதிவுசெய்யப்படாத படகுகளும் உள்ளன என்று கூறப்படுகிறது. இது இலங்கைப் படைத்துறை தமிழக மீனவர்கள் மீது மேற்கொள்ளும் வன்முறைகளுக்கும் தாக்குதல்களுக்கும் ஒரு காரணமாக முன்வைகக்கப்படுகிறது.[3].

தீர்வு வழிமுறைகள்

[தொகு]

இந்திய அரசு பலமுறை இந்நிகழ்வுகளை இலங்கை அரசிடம் எடுத்துச் சென்றபோதும் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. இந்தியக் கடல்பகுதியிலிருந்து இலங்கையின் கடல் எல்லைக்குள் இந்த மீனவர்கள் அத்துமீறுவதால் இலங்கை அரசு அவர்களைக் கைது செய்து, மீன்பிடிச் சாதனங்களையும் படகுகளையும் கைப்பற்றுவதாகக் கூறுகிறது. ஆயினும் மீனவர்கள் கைது செய்யப்படாமல் கொல்லப்படுவதாக தமிழக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சனவரி 2006ஆம் ஆண்டில் இந்திய மீனவர்கள் கடல் எல்லையை மீறுவதைக் கட்டுப்படுத்தவும், அவ்வாறு அவர்கள் மீறினாலும் அவர்கள் மீது வன்முறை பயன்படுத்தப்படாதிருக்கவும் கைப்பற்றப்பட்ட படகுகளை விரைவாக திருப்பவும் வேண்டிய வழிமுறைகளை வரையறுக்கவும் இரு நாட்டு மீனவர்களுக்கும் உரிமம் பெற்ற மீன்பிடிப்பிற்கான வாய்ப்புகளை கண்டறியவும் ஏற்படுத்தப்பட்ட ஓர் இணை செயற்குழு செயலற்று உள்ளது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் தாக்குதல்கள்:வரலாறு

[தொகு]
நடந்த நாள் அல்லது வருடம் மீனவர்களின்எண்ணிக்கை இலங்கை கடற்படையின் தாக்குதல்கள் பற்றிய சிறு குறிப்புகள்
2006 1 இலங்கை கடற்படை ஞாயிறன்று கச்சத்தீவு பாக் வளைகுடா பகுதியில் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய போது ஒருவர் காயமடைந்தார்.[4]
2006 4 செப்டம்பர் 8 2006 ஆன்று இலங்கை கடற்படை கன்னியாகுமரி அருகே 4 மீனவர்களின் வலையை அறுத்து அவர்களை உயிர் தப்பிக்க கடலில் நீந்த சொல்லியிருக்கிறது.[5]
2011 24 ஏழு படகுகளில் மடாகள் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் [6]
11 டிசம்பர் 2013 10 சான்ரோ என்பவரின் படகு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த திசை காட்டும் கருவி கருவி மற்றும் மீனவர்கள் வைத்திருந்த கையடக்கத்தொலைபேசி உள்ளிட்டவற்றை பறித்து கடலில் வீசியுள்ளனர்.[7]
11 டிசம்பர் 2013 110 இலங்கை கடற்படையினர் கொடூர ஆயுதங்களின் உதவியுடன் வந்து தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். ஆழ்கடலில் நடந்த இந்த விபரீதத்தையடுத்து 15 படகுகளில் இருந்து 110 மீனவர்கள் இலங்கை கடற்படையினரிடம் சரணடைந்துள்ளனர்.[8]
12 டிசம்பர் 2013 30 இலங்கை கடற்படையினர் புதுக்கோட்டை மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர். படகுகளில் இருந்த மீனவர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டியதோடு மீனவர்கள் அனைவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் 30 பேரையும் இலங்கை நெடுந்துறை முகாமுக்கு கொண்டு சென்றனர்.[9]
4 பிப்ரவரி 2014 30 இலங்கை கடற்படை இலங்கை கடல் அருகே வேட்டையாடிய குற்றச்சாட்டில், யாழ்ப்பாணம் அருகே நெடுந்தீவு தீவுகளில் 30 இந்திய மீனவர்கள் கைது.[10]

இந்திய இலங்கை மீனவர்களின் கருத்துக்கள்

[தொகு]

இது போன்று இரு நாடுகளின் மீனவர்களும் பாதிக்கப்பட்டாலும் இரு நாடு மீனவர்களிடையே நல்லுறவே இருந்து வருகிறது. இந்திய மீனவர்கள் இலங்கையில் யுத்தத்தின் போது சக இலங்கை மீனவர்களுக்கு கூட தங்குமிடம் மற்றும் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளனர்.[11]

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் தாக்குதல்கள்

[தொகு]

சனவரி 12,2011 அன்று நடந்த நிகழ்வு ஒன்றில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.[12]. இந்த அலுவல்முறை எதிர்ப்பிற்குப் பிறகும் மற்றொரு மீனவர் மிகக் கொடூரமான முறையில் சனவரி 22,2011 அன்று இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டார்.[13] கடந்த 30 ஆண்டுகளில் 530 மீனவர்கள் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.இதனை தீவிரமாக எதிர்க்காத நடுவண் அரசின் போக்கையும் தேசிய ஊடகங்களின் அக்கறையின்மையையும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது [14]

3 சூலை 2012, தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை அரசு சிறைப்பிடித்துள்ளது மற்றும் 3 பேரின் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.[15]

தமிழக அரசியல் தலைவர்களின் கருத்துக்கள்

[தொகு]

2006ல் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா இது குறித்து பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் இந்திய தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக கட்சத்தீவை நிரந்தர குத்தகைக்கு எடுக்கலாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.[4]. 2006 பிற்பகுதியில் மீண்டும் முதல்வரான கருணாநிதி இதே கருத்தை மீண்டும் வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.[5].

கடல் பாதுகாப்பு குறித்த ஒப்பந்தங்கள்

[தொகு]

இந்தியா இலங்கை மற்றும் மால்த்தீவுகளுக்கிடையே திருட்டு, பயங்கரவாதம் மற்றும் கடல் பாதுகாப்பு போன்றவற்றில் கூட்டாக தகவல்களை பகிர்ந்து செயலாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது கொழும்பில் ஜூலை 8 மற்றும் 9 தேதிகளில் நடைபெற்ற இரண்டாம் கூட்டத்தின் முடிவாக எட்டப்பட்டுள்ளது.[16]

மேற்கோள்கள்

[தொகு]
  1. MARITIME SECURITY CONCERNS IN THE INDIAN OCEAN: SRI LANKA’S PERCEPTION OF OVERCOMING CHALLENGES
  2. வலை உணங்கு குருமணல்
  3. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/naval-officers-discuss-firing-at-indian-fishing-boats/article3077821.ece
  4. 4.0 4.1 http://www.thehindu.com/todays-paper/one-hurt-in-sri-lankan-navy-firing/article3237405.ece
  5. 5.0 5.1 http://www.thehindu.com/todays-paper/tp-national/karunanidhi-writes-to-manmohan-on-katchathivu/article3079978.ece
  6. http://www.thehindu.com/news/national/tamil-nadu/24-more-fishermen-remanded-to-judicial-custody/article1464248.ece
  7. http://www.virakesari.lk/?q=node/359834
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-12-13. பார்க்கப்பட்ட நாள் 2013-12-13.
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-12-15. பார்க்கப்பட்ட நாள் 2013-12-13.
  10. http://www.thehindu.com/news/international/south-asia/sri-lankan-navy-arrests-30-indian-fishermen/article5652601.ece
  11. http://www.bbc.co.uk/news/world-south-asia-12710928
  12. "Indian fisherman killed in Lankan firing". IndiaVoice. 2011-01-13. Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2011-01-13.
  13. "Second TN fisherman killed by Lankan Navy". Times Of India. 2011-01-22. பார்க்கப்பட்ட நாள் 2011-01-24.
  14. "Fishermen killings: May 17 seeks Pranab, SM Krishna resignation". TruthDive. 2011-01-24. Archived from the original on 2011-08-09. பார்க்கப்பட்ட நாள் 2011-01-24.
  15. http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1207/03/1120703006_1.htm
  16. Meeting on trilateral cooperation on maritime security Meeting on trilateral cooperation on maritime security[தொடர்பிழந்த இணைப்பு]

வெளியிணைப்புகள்

[தொகு]