உள்ளடக்கத்துக்குச் செல்

யாழ்ப்பாணக் கல்லூரி

ஆள்கூறுகள்: 9°43′45.20″N 79°56′54.30″E / 9.7292222°N 79.9484167°E / 9.7292222; 79.9484167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jaffna College
யாழ்ப்பாணக் கல்லூரி
அமைவிடம்
வட்டுக்கோட்டை, யாழ்ப்பாண மாவட்டம், வட மாகாணம்
இலங்கை
அமைவிடம்9°43′45.20″N 79°56′54.30″E / 9.7292222°N 79.9484167°E / 9.7292222; 79.9484167
தகவல்
வகைதனியார் 1AB
குறிக்கோள்Jesus Christ the light of life
(இயேசுவே வாழ்வின் ஒளி)
நிறுவல்1867
பள்ளி மாவட்டம்வலிகாமம் கல்வி வலயம்
பள்ளி இலக்கம்1011032
அதிபர்கலாநிதி. வண. டேவிட் சதானந்தன் சொலமன்
தரங்கள்1 தொடக்கம் 13 வரை
பால்இருபாலார்
மொழிதமிழ், ஆங்கிலம்
School roll1,998
இணையம்

யாழ்ப்பாணக் கல்லூரி (Jaffna College) இலங்கையின் வடக்கே வட்டுக்கோட்டை என்ற ஊரில் அமைந்துள்ள ஒரு தனியார் பாடசாலை ஆகும்.[1] அமெரிக்க கிறிஸ்தவ மறைப்பணியாளர்களால் 1823 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பட்டிக்கோட்டா மதப்பள்ளி 1867 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணக் கல்லூரியாக மாற்றப்பட்டது.

வரலாறு

[தொகு]

1816 ஆம் ஆண்டில் அமெரிக்க இலங்கை மிசன் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்ட இதன் கிளைகளில் ஒன்று வட்டுக்கோட்டையிலும் நிறுவப்பட்டது. அமெரிக்க மிசன் யாழ்ப்பாணத்தில் பாடசாலைகளை ஆரம்பித்து நடத்தியது. இவ்வகையில் முதன் முதலாக தெல்லிப்பழையில் "பொதுச் சுயாதீனப் பள்ளிக்கூடம்" (யூனியன் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. குடாநாட்டில் உள்ள திறமை வாய்ந்த ஆண் பிள்ளைகளுக்கென வட்டுக்கோட்டையில் 1823 ஆம் ஆண்டில் பட்டிக்கோட்டா மதப்பள்ளி (Batticotta Seminary) நிறுவப்பட்டது. இதன் அதிபராக டானியல் புவர் (danial poor) என்பவர் இருந்தார். இம்மதப்பள்ளி அங்கு சேர்க்கப்படும் மாணவர்களை கிறித்துவத்துக்கு மதம் மாற்றுவதையே முக்கிய நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும், பெரும்பாலான மாணவர்கள் தமது இந்து சமய நம்பிக்கையையே கடைப்பிடித்து வந்தனர். இதனை அடுத்து 1855 ஆம் ஆண்டில் இம்மதப்பள்ளி மூடப்பட்டது.

பட்டிக்கோட்டா மதப்பள்ளியின் பழைய மாணவர்களும், உள்ளூர் கிறித்தவர்களும் இப்பள்ளியை மீளத் திறக்க வேண்டும் எனக் கோரிக்கை விட்டதை அடுத்து 1872 சூலை 3 இல்[2] இக்கல்லூரி யாழ்ப்பாணக் கல்லூரி என்ற பெயரில் மீளவும் பழைய கட்டடத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது.

பழைய மாணவர்கள்

[தொகு]

இவற்றையும் பார்க்க

[தொகு]

படக் காட்சியகம்

[தொகு]
யாழ்ப்பாணக் கல்லூரி
யாழ்ப்பாணக் கல்லூரி

மேற்கோள்கள்

[தொகு]
  1. Schools Basic Data as at 01.10.2010. Northern Provincial Council. 2010. Archived from the original on 2013-12-03. பார்க்கப்பட்ட நாள் 2013-06-15.
  2. Katiresu, S. (1905). A Hand Book to the Jaffna Peninsula. புதுதில்லி: Aian Educational Services. pp. 25–26. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-206-1872-6.
  3. Allen Abraham & the Halley's Comet (PDF). யாழ்ப்பாணக் கல்லூரி. 1985. p. 7.
  4. Jaffna College Miscellany, பக். 70, டிசம்பர் 1944
  5. "Former History academic of Jaffna University passes away". தமிழ்நெட். 27 சூலை 2015. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=37864. 

வெளி இணைப்புக்கள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=யாழ்ப்பாணக்_கல்லூரி&oldid=3850932" இலிருந்து மீள்விக்கப்பட்டது