திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்
| திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் | |
| பெயர் | |
|---|---|
| பெயர்: | பார்த்தசாரதி திருக்கோயில் |
| அமைவிடம் | |
| அமைவு: | திருவல்லிக்கேணி, சென்னை, தமிழ்நாடு |
| கோயில் தகவல்கள் | |
| மூலவர்: | பார்த்தசாரதி (கிருஷ்ணர்) |
| கட்டிடக்கலையும் பண்பாடும் | |
| கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டடக்கலை |
| வரலாறு | |
| கட்டப்பட்ட நாள்: | கி,பி 8 ஆம் நூற்றாண்டு |
| அமைத்தவர்': | பல்லவர்கள் |
பார்த்தசாரதி கோயில் (பெருமாள் கோயில்) 8ஆம் நூற்றாண்டின் இந்து வைஷ்ணவக் கோயில்களில் ஒன்றாகும். இக்கோவிலின் முதன்மை கடவுள் வெங்கட கிருஷ்ணர் (பார்த்தசாரதி) ஆவார். இக்கோவில் சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் உள்ளது. இக்கோவில் வைணவர்களின் 108 திவ்விய (தெய்வத் தன்மை வாய்ந்த) தேசங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இக்கோவிலில் வேங்கடக் கிருஷ்ணர் மகாபாரதப் போரின்போது பார்த்தனின் (அர்ஜுனன்) சாரதி (தேரோட்டி) வடிவில் காட்சி அளிக்கிறார்.
பொருளடக்கம் |
[தொகு] கோவில்
இக்கோவில் சென்னையின் மிகப் பழமைவாய்ந்த கட்டிடங்களில் ஒன்று ஆகும். இங்கே பார்த்தசாரதியை தவிர ஸ்ரீ வேதவல்லி தாயார், ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ ராமர், ஸ்ரீ வரதராஜர் சுவாமி, யோகா நரசிம்மர் (அழகியசிங்கர்), ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஆழ்வார்கள், ராமானுஜர் , மணவாள மாமுனிகள் மற்றும் வேதாந்தாசாரியர் சந்நிதிகளும் உண்டு. இங்கே பார்த்தசாரதி மற்றும் நரசிம்மருக்கு தனித்தனியே த்வஜஸ்தம்பங்களும் (கொடிக்கம்பங்கள்) மற்றும் வாசல்களும் உள்ளன. இங்கே கோபுரங்களும் மண்டபங்களும் தென்னிந்தியக் கோவில் கட்டிட கலைக்கே உரிய நுட்பமான சிற்பக் கலையால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
[தொகு] புராணச்சிறப்பு
பெருமாள் வேங்கடேஷ்வரர் அரசன் சுமத்திக்கு பார்த்தசாரதியாக காட்சி அளிப்பதாக வாக்கு தந்திருந்தார். அவ்வாக்கை நிறைவேற்றும் வகையில் அவர் பார்த்தசாரதியாக அவருக்கு திருவல்லிக்கேணியில் காட்சி அளித்தார். மூலவர் பார்த்தசாரதியின் விக்கிரகத்தை அகத்திய மாமுனிவர் பிரதிஷ்டை செய்ததாக (நிறுவியதாக) கருதப்படுகிறது. இங்கே ஸ்ரீ வைஷ்ணவ ஆச்சாரியாரான ஸ்ரீ ராமானுஜரின் பெற்றோர்கள் பெருமாளை குழந்தை செல்வத்திற்க்காக வேண்டியதாக சொல்லப்படுகிறது. இக்கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பெருமாள் பார்த்தசாரதியே அவர்களுக்கு மகனாக பிறந்ததாக நம்பப்படுகிறது.
[தொகு] ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி பெருமை
இந்து புராணங்களின் படி, கிருஷ்ண பகவான், மகாபாரத போரின்போது அர்ஜுனனின் தேரோட்டியாக இருந்தார். அச்சமயத்தில் அவர் இந்துக்களின் புனித நூலான ஸ்ரீமத் பகவத் கீதையை தந்தார். போரின்போது பீஷ்மரின் அம்புகளால் காயமடைந்த கிருஷ்ணர் முகம் முழுவதும் தழும்புகளுடன் காட்சி அளிக்கிறார். இக்கடவுளுக்கு இன்னொரு சிறப்பு என்னவென்றால் இந்த இடத்தில் மட்டும் தான் கிருஷ்ண பகவான் மீசையுடனும், தன் பிரதான ஆயுதமான சுதர்சண சக்கரம் இல்லாமலும் காட்சி தருகிறார். போரின் தொடக்கத்தில் இவர் எந்த ஆயுதமும் ஏந்தாமல் இருப்பதாக வாக்கு கொடுத்ததால் வெறும் தன் ஷங்கமான (போர்ச் சங்கு) பாஞ்சஜந்நியத்துடனும், ஒரு போரில் சாரதியாக வழக்கத்துக்கு இணங்க மீசையுடனும் காட்சி தருகிறார். இங்கு உத்சவ மூர்த்தி தன் கதாயுதம் இல்லாமல் ஒரு கோலுடன் காட்சி தருகிறார். இதற்கு பகவான் ஒரு இடயர் குடும்பத்தில் பிறந்தது காரணமாக சொல்லப்படுகிறது.
[தொகு] நாலாயிரப் பிரபந்தத்தில் திருவல்லிக்கேணி
நாலாயிர திவ்யப் பிரபந்தத்திலிருந்து திருவல்லிக்கேணியை சுட்டிக்காட்டிப் பாடப்பட்ட ஒரு பாசுரம்:
-
- வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை விழுமிய முனிவர் விழுங்கும்
- கோது இல் இன் கனியை நந்தனார் களிற்றை குவலயத்தார் தொழுதேத்தும்
- ஆதியை அமுதை என்னை ஆளுடை அப்பனை ஒப்பவரில்லா
- மாதர்கள் வாழும் மாடமாமயிலைத் திரு அல்லிக்கேணி கண்டேனே.
[தொகு] பிரசாதம்
பெரும்பாலான நாட்களன்று இங்கு சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம் மற்றும் வடை வழங்கப்படுகிறது. வைகுந்த ஏகாதசி சமயத்தில் (பகல் பத்து / இராப் பத்து) ஒருநாள் பகவானுக்கு திருப்பதி வேங்கடாஜலபதியை போல அலங்காரம் செய்யப்படுகிறது, அன்று மட்டும் திருப்பதி லட்டு இங்கு வழங்கப்படுகிறது.
[தொகு] தரிசனம், சேவைகள் மற்றும் உற்சவங்கள்
இக்கோவிலில் தென்கலை வைணவ பாரம்பரியமும் வைகம ஆகம முறையும் கதை படிக்கப்படுகிறது. இங்கு சித்திரைத் திங்களின் போது ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமிக்கும் ஆனி மாதத்தில் ஸ்ரீ அழகியசிங்கருக்கும் பிரம்மாண்ட அளவில் பிரம்மோத்ஸவங்கள் நடைபெறுகின்றன. அது அல்லாது ஸ்ரீ ராமானுஜர் (ஏப்ரல்/ மே), ஸ்ரீ மணவாளமாமுனிகள் () மற்றும் மற்ற ஆழ்வார்களுக்கும் ஆச்சாரியர்களுக்கும் பிரம்மாண்ட அளவில் உத்சவங்கள் நடைபெறுகின்றன. வைகுண்ட ஏகாதசி மற்றும் சித்திரை திங்களின் போது இங்கு ஏராளமான பக்தர்கள் குவிகின்றனர். இச்சமயத்தில் இங்கு உள்ள மண்டபங்களில் நிறைய கதா காலக்ஷேபங்கள் (புராண கதை சொல்லுதல்) நடைபெறுகின்றன.
[தொகு] இக்கோவிலின் மேல் பாடல்களை எழுதியவர்கள்
வைணவ முனிவர்களான 12 ஆழ்வார்களில் மூவர் (பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் ) இக்கோவில் தெய்வங்களின் மேல் பாடல்களை இயற்றி இருக்கிறார்கள். இதர பல ஆச்சாரியார்களும் பாடல்களை இயற்றி இருக்கிறார்கள்.
[தொகு] பயணம் மற்றும் தங்குதல்
இக்கோவில் சென்னையின் மத்தியில் உள்ளதால் நிறைய போக்குவரத்து வசதிகளும், தங்கும் வசதிகளும் இருக்கின்றன.
[தொகு] பார்க்கத்தக்க மற்ற சில கோவில்களின் பட்டியல்
சிவன் கோவில்கள்
- கபாலீஸ்வரர் கோவில்
- மருந்தேசுவரர் கோவில்
- வெள்ளீஸ்வரர் கோவில்
- தியாகாராய சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில்
- காளிகாம்பள் கோவில்
- காஞ்சிபுரம் கோவில்கள்
- காளஹஸ்தி
- ஆபத்சயேசுவரர் கோவில்
- ஆதி பராசக்தி கோவில்
- ஆகஸ்தீசுவரர் கோவில்
- அப்பர் சுவாமி கோவில்
- சிவ விஷ்ணு கோவில்
'விஷ்ணு கோவில்கள்
- ஸ்ரீநிவாசர் கோவில்
- கேசவப்பெருமாள் கோவில்
- மாதவப்பெருமாள் கோவில்
- திருவிடந்தை லக்ஷ்மி வராஹ சுவாமி கோவில்
- அஷ்ட லக்ஷ்மி கோவில்
- திருநீர்மலை
- திருக்கடல்மல்லை, ஸ்தலசயனப்பெருமாள் பெருமாள்
- திருமலை கோவில்கள்
- திருப்பதி கோவில்கள்
- ஆனந்த பத்மனாப சுவாமி கோவில்
- பக்தவத்சலபெருமாள் கோவில், திருநின்றவூர்
- திருக்கடிகை, சோளிங்கபுரம்
- திருவெவ்வுள், திருவள்ளூர் வீரராகவப்பெருமாள்
[தொகு] உதவி
[தொகு] வெளி இணைப்புகள்
- சென்னை ஆன்லைன் கட்டுரை
- டூர் ட்ராவெல் வர்ல்ட் கட்டுரை
- ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி கோவில் , திருவல்லிகேணி
- சென்னை பயண கையேடு