பத்ரிநாத் கோயில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பத்ரிநாத் கோயில் | |
|
|
|
| ஆள்கூறுகள்: | அமைவு: |
|---|---|
| பெயர் | |
| பெயர்: | பத்ரிநாத் |
| அமைவிடம் | |
| நாடு: | இந்தியா |
| மாநிலம்: | உத்தராகண்ட் |
| அமைவு: | பத்ரிநாத் |
| கோயில் தகவல்கள் | |
| வரலாறு | |
| கட்டப்பட்ட நாள்: | கி.பி. 9ம் நூற்றாண்டு |
| அமைத்தவர்': | ஆதி சங்கரர் |
பத்ரிநாத் கோயில் இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள மலைவாழிடமான பத்ரிநாத்தில் உள்ள ஒரு கோவில். இது பத்ரிநாராயணன் கோவில் என்றும் அறியப்படுகிறது. இக்கோயில் அலக்நந்தா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது ஒரு திருமால் கோவில். இந்தியாவில் உள்ள முக்கியமான இந்துக்கோவில்களுள் இதுவும் ஒன்று. வைணவர்களால் போற்றப்படும் 108 திவ்வியதேசங்களுள் ஒன்றாகும். இமயமலையின் மிதமிஞ்சிய குளிரின் காரணமாக இது ஆண்டுக்கு ஆறு மாதங்கள் (ஏப்ரல் கடைசியில் இருந்து நவம்பர் தொடக்கம் வரை) மட்டுமே திறக்கப்பட்டிருக்கும்.