மணவாள மாமுனிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மணவாள மாமுனிகள் வைணவப் பெரியார்களுள் ஒருவர். இராமானுசர் மற்றும் நம்மாழ்வாரோடு ஒப்பு வைத்தெண்ணப்படுபவர். இவர் 1370 ஆம் ஆண்டு ஆழ்வார்திருநகரியில் பிறந்தார். 73 திருநட்சத்திரம் (ஆண்டுகள்) வாழ்ந்து உயிர் வாழ்ந்தார்.

தமிழகத்தில் வைணவத்தைப் பரப்பும் பொருட்டு இவரே வானமாமலை ஜீயர் உள்ளிட்ட ஜீயர் பொறுப்புகளை உருவாக்கினார்.

  • தந்தை – திருநாவீறு உடையபிரான் தாசரண்ணர்
  • ஆசிரியர் – ‘திருவாய்மொழிப் பிள்ளை’ எனச் சிறப்புப்பெயர் பெற்றிருந்த திருமலையாழ்வார்.
  • மகன் - இராமானுஜன், மணவாள மாமுனிகளின் மகன் பெயர்.

பொருளடக்கம்

நூல்கள் [தொகு]

வடமொழியில்

  • யதீந்திரப் பிரணவர் - ஆசிரியர் வழிபட்ட ‘உடையவர்’மீது ‘யதிராஜ விம்சதி’ என்னும் தோத்திரம் பாடியதால் பெற்ற பெயர். இதனால் ஆசிரியர் தாம் வழிபட்ட உடையவர் சிலையையே இவருக்குக் கொடுத்துவிட்டார்.
  • பிள்ளை லோகாசாரியார் ரகசிய கிரந்தங்களுக்கு வியாக்கியானம்
  • ஈட்டுப் பிரமாணத் திரட்டு
  • கீதைக்குத் தாத்பர்ய தீபம்
  • ஆசாரிய ஹிருதய வியாக்கியாணம் – இறுதிக்காலப் படுக்கையில் இருந்தபோது.

தமிழில்

பெயர்கள் [தொகு]

  • பிள்ளை பெயர் – அழகிய மணவாளன்
  • அனந்தாழ்வார் வம்சம் இவர் என இவரை இவரது ஆசிரியர் மக்களுக்குக் காட்டினார்.
  • உபய வேதாந்தாசிரியர் – ஸ்ரீபெரும்புதூரில் நாலாயிர பிரபந்த விரிவுரை செய்து பெற்ற பெயர்.
  • கோவிந்தராசப்பன் – இவரை ‘உடையவர்’ அவதாரம் எனக் கருதி, திருவரங்கத்தார் சூட்டிய பெயர்.
  • ஜீயர், பெரிய ஜீயர், பட்டர்பிரான் ஜீயர், வரவரமுனி, ராமானுசன் பொன்னடி

தொடர்பு [தொகு]

  • திருநாராயணபுரத்து ஆயி – திருக்குருகூரில் விரிவுரை செய்தபோது தோன்றிய இவரது ஐயத்தைப் போக்கியவர்.
  • திருவரங்க உத்தம நம்பி, சடகோபக் கொற்றி ஆகியோர் இவரை அனந்தாழ்வாராகவே கண்டனர்.

வடகலை தென்கலை

  • தேசிகர் வடகலைக்கு மூலவர்
  • மணவாள மாமுனிகள் தென்கலைக்கு மூலவர்.

ஆசிரியர் வாக்கு [தொகு]

  • இவரது ஆசிரியர் திருநாட்டுக்கு எழுந்தருளும் காலம் நெருங்கியபோது அளித்த வாக்கு
சமஸ்கிருத சாஸ்திரத்தில் பலகால் கண் வையாதீர்.
ஸ்ரீ பாஷ்யத்தை உணர்ந்து
அதனைப் பிரவசனம் செய்துகொண்டு 
திருவரங்கத்திலேயே நித்திய வாசம் பண்ணும்

என்பது.

சிறப்பு [தொகு]

  • எம்பெருமான் திருவடிகளே சரணம் [1]
  • ஜீயர் திருவடிகளே சரணம் [2]

கருவிநூல் [தொகு]

மேற்கோள் குறிப்பு [தொகு]

  1. இந்தத் தொடர் ஆர்த்திப் பிரபந்தம் 15-ஆம் பாடலின் முதல் அடியாக உள்ளது.
  2. ஜீயர் என்ன்னும் பெயர் இந்நூலாசிரியர் மணவாள மாமுனிகளைக் குறிக்கும். நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூலிலுள்ள பதிகங்கள் ஒவ்வொன்றும் முடிந்த பின்னர் இத்தொடர் உள்ளது.


"http://ta.wikipedia.org/w/index.php?title=மணவாள_மாமுனிகள்&oldid=1375937" இருந்து மீள்விக்கப்பட்டது