வேதாந்த தேசிகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
காஞ்சிபுரத்தில் உள்ள வேதாந்த தேசிகர் சிலை

வேதாந்த தேசிகர் வைணவ சமயப் பெரியவர்களுள் ஒருவர். கி.பி. 14ஆம் நுற்றாண்டில் வாழ்ந்தவர். அனந்தசூரியார் - தோத்தாத்ரி அம்மை தம்பதிக்கு மகனாக காஞ்சிபுரத்தில் பிறந்தவர். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் திருவேங்கமுடையோன் என்பதாம். பின்னாளில் இவர் ‘உபயவேதாந்தாசாரியார்’, ‘சர்வ தந்திர சுதந்திரர்’ மற்றும் ‘வேதாந்த தேசிகர்’ என்னும் பெயர்களால் அழைக்கப் பெற்றார்.

வடமொழிக்கு இணையாக தமிழ்மொழியும் தெய்வத்தன்மை உடையது என்று கூறியவர் இவர். உபய வேதாந்தம் எனும் கொள்கையை உருவாக்கி கோயில்களில் வடமொழியோடு ஆழ்வார்களின் திருமொழியும் இடம்பெறுமாறு செய்தவர் இவரே.[1]

இவர் காலத்தில் தான் வைணவம் வடகலை, தென்கலை என இரண்டாகப் பிரிந்தது.
மாலிக்காபூர் படையெடுப்பின் போது திருவரங்கக் கோயிலைக் காத்தவர்களுள் இவரும் ஒருவர்..[2]

கருவிநூல் [தொகு]

மேற்கோள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=வேதாந்த_தேசிகர்&oldid=1367425" இருந்து மீள்விக்கப்பட்டது