வெங்கடாசலபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வெங்கடாசலபதி
Venkateswara BNC.jpg
அதிபதி
கன்னடம் திருப்பதி திம்மப்ப
வகை விஷ்ணுவின் படைப்பு
இடம் திருமலை திருப்பதி
மந்திரம் ஓம் நமோ வெங்கடேசா
ஆயுதம் சக்கரம்
துணை அலமேலு (பத்மாவதி)
இந்தக் கட்டுரை இந்திய மொழிகளின் உரை கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகள் அல்லது கட்டங்கள், மாறியுள்ள உயிரெழுத்துகள் அல்லது விடுபட்ட இடைச்சொல் ஆகியன இந்திய மொழிகளின் உரைக்கு பதிலாக தெரியலாம்.

வெங்கடாசலபதி (Venkateswara) ஒரு இந்துமதக் கடவுள். கோவிந்தன், ஸ்ரீநிவாசன், பாலாஜி, என பல பெயர்களில் இவர் அழைக்கப்படுகிறார். கிருட்டிணன் வடிவமாக கருதப்படுகிறார்.

திருமலை திருப்பதியில் உள்ள இவரது சன்னதி மிகவும் பிரபலமானது. திருவேங்கடம் அல்லது வேங்கடம் என்ற பகுதியில் இருப்பதால் வெங்கடாசலபதி என்ற பெயர் வந்திருக்கவும் சாத்தியக்கூறுகள் உள்ளது.

பெயர்க்காரணம்[தொகு]

[[ | தமிழ்]] "வேங்கை 'தடித்த எழுத்துக்கள்'" என்றால் புலி[1] "இடைஉடுத்திய" என்றால் இடைஉடுத்திய,[2] மற்றும் ஈஸ்வரா என்றால் (ஈசன்)மிகப்பெரிய கடவுள் என்ற பொருள் தருகிறது. இதன் காரணமாக் வெங்கடேஸ்வரா என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.

திருமலை திருப்பதி[தொகு]

திருமலை - திருப்பதியில் உள்ள வெங்கடாசலபதி கோவில் உள்ளது. சங்கப்பாடல்கள் இதனை வேங்கட-நாடு, வேங்கட-நெடுவரை, வேங்கட-வரைப்பு, வேங்கடச்சுரம், வேங்கட மலை என்றெல்லாம் குறிப்பட்டுள்ளது.[3] தற்பொழுது ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளது. ஏழுமலைகளைக் கொண்டுள்ளதால், ஏழுமலையான் என்றும் வெங்கடாசலபதியை வணங்குகின்றனர்.[4] இக்கோவில், உலகின் அதிக மக்களின் வழிபாட்டுத்தளமாகவும், மிகப்பெரிய பணக்கார கோவிலாகவும் கருதப்படுகிறது. [5] திருமலை மலை கடல் மட்டத்தில் இருந்து 853 மீ உயரத்தில் உள்ளது.திருப்பதி 7 மலைகளை உள்ளடக்கியது 7 என்பது ஆதிசேசன் 7 தலைகளை குறிப்பதாகும்.7 மலை பெயர்களும் பின்வருவனவாகும் சேஷாத்ரி , நீலத்ரி , கருடாத்ரி , அஞ்சனாத்ரி , ருஷுபத்ரி , நாராயன்த்ரி and வேங்கடாத்ரி

இவற்றையும் காண்க[தொகு]

வெளி இணப்புகள்[தொகு]

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. http://www.ramanuja.org/sv/bhakti/archives/aug98/0241.html
  2. http://www.ramanuja.org/sv/bhakti/archives/aug98/0241.html
  3. சிலப்பதிகாரம் 6-30.
  4. "TTD". பார்த்த நாள் 9 May 2013.
  5. "The Hindu". TTD. பார்த்த நாள் 9 May 2013.
"http://ta.wikipedia.org/w/index.php?title=வெங்கடாசலபதி&oldid=1810380" இருந்து மீள்விக்கப்பட்டது