திருமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
తిరుమల திருமலை
తిరుమల திருமலை
இருப்பிடம்: తిరుమల திருமலை
, ஆந்திரப் பிரதேசம்
அமைவிடம் 13.6500°′″N 79.4200°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.அமைவு: 13.6500°′″N 79.4200°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம் சித்தூர் மாவட்டம்
அருகாமை நகரம் திருப்பதி
[[ஆந்திரப் பிரதேசம் ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]]
[[ஆந்திரப் பிரதேசம் முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]]
மக்கள் தொகை

அடர்த்தி

18,013 (2004)

667 /km2 (1 /sq mi)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்

27 கிமீ2 (10 சதுர மைல்)

976 metres (3 ft)


திருமலை என்பது திருப்பதி நகரத்துக்கு அருகிலுள்ள மலை மீதிருக்கும் ஊராகும். இங்கு புகழ்பெற்ற திருமால் கோயில் உள்ளது. இங்குள்ள சாமி பாலாஜி என்றும் ஏழுமலையான் என்றும் வெங்கடேசுவரன் மற்றும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். இதுவொரு கோயில் நகராகும்.

கோயில் முன் தோற்றம்
வேங்கடேசபெருமாள்

பொருளடக்கம்

[தொகு] வரலாறு

திருப்பதியின் பழைய பெயரான திருவேங்கடத்தை கி.மு.500-300 இல் எழுதப்பட்ட தமிழ்ச் சங்க இலக்கியங்களான சிலப்பதிகாரமும், சாத்தனாரின் மணிமேகலையும் குறிப்பிட்டுள்ளன.

இங்குள்ள ஆலயம் எந்த ஆண்டு கட்டப்பட்டது என்பது தெரியவில்லை என்றாலும் இது பல அரசுகளால் பராமரிக்கப்பட்டு வந்திருக்கிறது. இக்கோவில் தொண்டைமான் என்ற பல்லவ மன்னனால் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.[1] கி.பி. நான்காம் நூற்றாண்டில் பல்லவர்களாலும், கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரை சோழர்களாலும், கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் விசயநகர பேரரசாலும் இந்த கோவில் பராமரிக்கப்பட்டு வந்திருக்கிறது. விசயநகர பேரரசின் மிகப்பெரிய மன்னனான கிருஷ்ண தேவராயர், இந்த கோவிலுக்காக தங்கமும் மற்ற விலை உயர்ந்த ஆபரணங்களையும் நன்கொடையாக தந்துள்ளார். இந்த கோவிலுடன் ஒட்டி நிறைய கோவில்களையும் கட்டியுள்ளார். திருப்பதியில் இருந்து சில கி.மீ.கள் தொலைவில் தென் மேற்கு புறம் தள்ளி இருக்கும் சந்திரகிரி என்னும் கிராமம் விஜயநகர சக்கரவர்த்தியின் இரண்டாம் தலைநகரமாக விளங்கியது.

வைணவம் பெரிதாக பின்பற்றபட்ட கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் திருப்பதி-திருமலை, ஆழ்வார்களால்(வைணவ முனிவர்கள்) கலியுக வைகுண்டம் என்று போற்றப்பட்டது. பக்தி இயக்கத்தை சேர்ந்த ஆழ்வார்கள் திருமால் மீது இயற்றிய பாடல்களுக்காகவும், இலக்கியங்களுக்காகவும் பெயர் பெற்றவர்கள். வைணவ பண்பாட்டில் ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாக விளங்குவது திருப்பதி-திருமலை ஆலயம் தான். பதினோராம் நூற்றாண்டில் இந்த கோவிலின் பூசை முறைகள் இராமானுஜ ஆச்சார்யரால் முறையாக்கப்பட்டன.

தமிழகத்தில் மாலிக் கபூர் தலைமையில் நடைபெற்ற இசுலாமிய படையெடுப்பின் பொழுது ஸ்ரீரங்கத்தில் இருந்த திருவரங்கர் திரு உருவச் சிலை திருப்பதிக்கு கொண்டுவரப்பட்டு 60 ஆண்டுகள் பாதுகாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த நிகழ்வை குறிப்பதற்காக கட்டப்பட்ட ரங்கநாத மண்டபம் இன்றும் கோயில் உள் இருக்கிறது. [2] [3]

[தொகு] திருவிழாக்கள்

திருப்பதியில் தங்க தகடுகளால் வேயப்பட்ட மேற்கூரைகள்.

வைகுண்ட ஏகாதசி, ராம நவமி, ஜென்மாஷ்டமி போன்ற வைணவ பண்டிகைகளை சிறப்பாகக் கொண்டாடுகின்ற இந்த நகரில், செப்டம்பர் மாதம் வருகின்ற பிரமோத்சவம் மிகவும் முக்கியமாக விழாவாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில் ஒரு வாரத்துக்குள் இலட்ச கணக்கில் பக்தர்கள் இங்கு குவிகின்றனர். பிப்ரவரி மாதம் ரதசப்தமி (மகா சுத்த சப்தமி) என்ற திருவிழா இங்கு நடைபெறுகிறது. இந்த சமயத்தில் வெங்கடேஸ்வரரின் திரு உருவச் சிலை வீதி வீதியாக தேரில் எடுத்து செல்லப் படுகிறது.

இங்கு மட்டும் கொண்டாடப்படும் கங்கம்மா சத்ரா விசேசமாக கொண்டாடப்படுகிறது. கங்கம்மாவுக்கு பொங்கல் மற்றும் விலங்கு பலிகளை பக்தர்கள் படைக்கின்றனர். கங்கம்மா எல்லாம் வல்ல கோவிந்தக் கடவுளின் தமக்கை ஆவார்.

[தொகு] மேற்கோள்கள்

  1. பார்க்க 2ம் பத்தி
  2. 4th para
  3. 2nd para

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=திருமலை&oldid=1015546" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்