சாளக்கிராமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இலக்குமி சாளக்கிராமம் பூசையில்

சாளக்கிராமம் என்பது கண்ணனின் நிறம் கொண்ட கல். இது இந்துக்களால் திருமாலின் அருவத் தோற்றமாகக் கண்ணனை வழிபடப்படும் சிறப்புக் கல். இந்து சமயம் பெரும்பாலும் உருவ வழிபாட்டைக் கொண்டிருந்தாலும் சிவனை சைவர்கள் லிங்க வடிவில் வழிபடுவதுபோல வைணவர்கள் திருமாலை சாளக்கிராமக் கற்களில் வழிபடுகின்றனர்.இந்தப் புனிதக் கற்கள் நேபாளத்தில் முக்திநாத் பகுதியில் கண்டகி ஆற்றின் கரைகளில் காணப்படுகின்றன.இக்கற்களில் இயற்கையாகவே திருமாலின் சங்கு,சக்கரம்,கதை,தாமரை போன்ற உருவங்கள் காணப்படுகின்றன. இவை நெடுங்காலமாக கோவில்கள்,மடங்கள்,வீடுகளில் வைக்கப்பட்டு வழிபடப்படுகிறது.

பலவித வடிவங்களில் உள்ள சாளக்கிராமங்கள் அவற்றில் பதிந்துள்ள உருவம்,அமைப்பு இவற்றிற்கேற்ப திருமாலின் பல அவதாரங்களாக பெயரிடப்படுகின்றன.காட்டாக சங்கு,சக்கரம்,கதை,தாமரை ஆகியவை ஓர் குறிப்பிட்ட அமைப்பில் உள்ள கற்கள் கேசவம் என அழைக்கப்படுகின்றன.இவ்வாறாக கேசவம், மாதவம், நாராயணம், கோவிந்தம், விஷ்ணு, மதுசூதனம், திரிவிக்கிரமம், வாமனம், சிறீதரம், இரிசிகேசம், பத்மநாபம், தமோதரம், சங்கர்சனம், பிரத்யும்னம், நரசிம்மம், சனார்த்தனம், அரி, கிருஷ்ணம் என்பவை சில[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. Debroy, Bibek; Dipavali Debroy. The Garuda Purana. p. 42. ISBN 097930511X. http://books.google.co.in/books?id=bHm6nKenVK4C&pg=PT146&dq=Shankha&lr=&ei=V2ccS9K-IIf4lQSb04ngDg#v=onepage&q=Shankha&f=false. பார்த்த நாள்: 2009-12-21. 

வெளியிணைப்புகள்[தொகு]

http://www.salagram.net/

http://www.salagram.net/Sri-Shaligram-Tirtha.htm

"http://ta.wikipedia.org/w/index.php?title=சாளக்கிராமம்&oldid=1467290" இருந்து மீள்விக்கப்பட்டது