மகாநாராயண உபநிடதம்
மகாநாராயண உபநிடதம் | |
---|---|
மூர்த்தி of Narayana, with his consort, லட்சுமி (இந்துக் கடவுள்) | |
தேவநாகரி | महानारायणोपनिषत् |
சமக்கிருத ஒலிப்பெயர்ப்பு | Mahānārāyaṇa |
உபநிடத வகை | Vaishnava[1] |
தொடர்பான வேதம் | யசுர் வேதம்[2] அல்லது அதர்வண வேதம்[3] |
அத்தியாயங்கள் | பல பகுதிகள் |
பாடல்களின் எண்ணிக்கை | பல கைஎழுத்துப் பிரதிகள் |
அடிப்படைத் தத்துவம் | வைணவ சமயம் |
தொடரின் ஒரு பகுதி |
இந்து புனித நூல்கள் |
---|
மகாநாராயண உபநிடதம் ( Mahanarayana Upanishad) ( சமக்கிருதம்: महानारायण उपनिषद् ) ஒரு பழங்கால சமஸ்கிருத நூலான இது இந்து சமயத்தின் சிறிய உபநிடதங்களில் ஒன்றாகும். இந்நூல் வைணவ உபநிடதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. [3][2]
உரை மூன்று முக்கிய பதிப்புகளில் கிடைக்கப் பெற்றுள்ளது. [4] 64 அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பதிப்பு கிருஷ்ண யசுர் வேதத்துடன் பல தென்னிந்திய நூல்களில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் தெலுங்குப் பதிப்பில் உள்ள அதே வாசகம் விரிவாக்கப்பட்ட வடிவத்தில் 80 அத்தியாயங்களுடன் அதே வேதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[2] இரண்டாவது பதிப்பு அதர்வண வேதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. [3] 25 அத்தியாயங்களைக் கொண்டுள்ள இது திரிபத்விபூதியுடன் முன்னொட்டாக உள்ளது. [5] இந்த கையெழுத்துப் பிரதிகள் சில சமயங்களில் யாக்னிகி உபநிடதம் அல்லது திரிபத்-விபூதி-மகாநாராயண உபநிடதம் என்றும் பெயரிடப்படுகின்றன.[6][3] சுவாமி விமலானந்தாவின் கூற்றுப்படி, யக்ஞாத்மா என்ற முனிவர் நாராயணனைப் போற்றும் வகையில் இருப்பதால் இது யாக்னிகி உபநிடதம் என்றும் அழைக்கப்படுகிறது. [7]
உபநிடதத்தின் தலைப்பு "பெரிய நாராயணன்" என்று பொருள்படுவதாக இருந்தபோதிலும், [8] நாராயணன் மற்றும் உருத்திரன் இருவரையும் பெருமைப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.[4] உபநிடதம் வேதாந்தக் கலைச்சொற்களைப் பயன்படுத்துகிறது. [9] மேலும் இருக்கு வேதம், தைத்திரீய பிராமணம், வாஜஸனேயி சம்ஹிதை மற்றும் முதன்மை உபநிடதங்களிலிருந்து ஏராளமான கருத்துகளைப் பயன்படுத்துகிறது. [9]
சந்தியாவந்தனம் செய்யும் போது , பிராணாயாமம், மந்திராசமனம், காயத்ரி ஆவாகனம், தேவதாநமஸ்காரம் மற்றும் காயத்ரி பிரஸ்தானம் ஆகியவற்றிற்குப் பயன்படுத்தப்படும் மந்திரங்கள் நேரடியாக மகாநாராயண உபநிடதத்திலிருந்து (80 அனுவாக்களைக் கொண்ட ஆந்திர மறுமலர்ச்சி) கிடைக்கபெற்றது. [10]
உள்ளடக்கம்
[தொகு]"எல்லையற்ற அண்ட நீரில்" ஒளியாகவும், பிரபஞ்சம் உருவாவதற்கு முன் இருந்த பிரம்மம் என்ற கொள்கையை விவரிக்கும் ஒரு வசனத்துடன், அண்டவியலுடன் உரை ஆரம்பிக்கிறது.[4][11] இந்த உரை இயற்றப்பட்ட நேரத்தில் பிரம்மனின் மனோதத்துவக் கொள்கை நன்கு நிறுவப்பட்டதாக அதன் தொடக்க வசனங்களின் பாணி தெரிவிக்கிறது.[4] அசையும் மற்றும் அசைவற்ற அனைத்து உயிரினங்களிலும் பிரம்மமும் ஓமில் என்ற பிரவண மந்திரமும் உள்ளது.[12] இது உயர்ந்ததில் உயர்ந்தது, பெரியவற்றில் பெரியது, [13] இது சட்டம், இது உண்மை, இது பிராமணம் எனவும் கூறுகிறது. [14] உரை இந்த மனோதத்துவக் கொள்கையை நெருப்பு, வாயு, சூரியன் , சந்திரன், பிரஜாபதி, புருசன், உருத்திரன் மற்றும் நாராயணன் என்று அழைக்கிறது. அவர்கள் அனைவரும் பிரம்மத்தைத் தவிர வேறு யாரும் இல்லை எனக் கூருகிறாது.[12] [15]{{Sfn|Srinivasan|1997|p=115} கடவுள்கள் தோன்றுவதற்கு முன்பே இருந்ததாக வசனம் 10.19 கூறுகிறது. [16]
இதனையும் பார்க்கவும்
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ Deussen 1997, ப. 247.
- ↑ 2.0 2.1 2.2 Deussen 1997, ப. 247–248.
- ↑ 3.0 3.1 3.2 3.3 Tinoco 1996, ப. 88.
- ↑ 4.0 4.1 4.2 4.3 Srinivasan 1997, ப. 112.
- ↑ Deussen, p.248. Also, Bloomfield Concordance, Preface. Both cite Jacob 1888.
- ↑ Deussen 1997, ப. 219, 247–248.
- ↑ Vimalananda 1957, ப. ix.
- ↑ Mahanaraya, Sanskrit-English Dictionary, Koeln University, Germany (2012)
- ↑ 9.0 9.1 Deussen 1997, ப. 247-268.
- ↑ "Mahanarayana_Upanishad" (PDF). Swami Vimalananda (2 ed.). Sri Ramakrishna Math. 1968.
- ↑ Deussen 1997, ப. 249.
- ↑ 12.0 12.1 Deussen 1997, ப. 249–250.
- ↑ Srinivasan 1997, ப. 114.
- ↑ Deussen 1997.
- ↑ Deussen 1997, ப. 250–251.
- ↑ Deussen 1997, ப. 256.
உசாத்துணை
[தொகு]- Dalal, Roshen (2014). Hinduism: An Alphabetical Guide. Penguin Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8475-277-9.
- Deussen, Paul (1997). Sixty Upanishads of the Veda, Volume 1. Motilal Banarsidass Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8120814677.
- Deussen, Paul (2010). The Philosophy of the Upanishads. Oxford University Press (Reprinted by Cosimo). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-61640-239-6.
- Frawley, David (1 January 2006). Yoga and the Sacred Fire: Self-Realization and Planetary Transformation. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-2746-2.
- Farquhar, John Nicol (1920). An outline of the religious literature of India. H. Milford, Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-2086-X.
- Feuerstein, George (1989). Yoga: The Technology of Ecstasy. Tarcher. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0874775259.
- Hattangadi, Sunder (1999). "महानारायणोपनिषत् (Mahanarayana Upanishad)" (PDF) (in சமஸ்கிருதம்). பார்க்கப்பட்ட நாள் 23 January 2016.
- Olivelle, Patrick (2011), Ascetics and Brahmins: Studies in Ideologies and Institutions, Anthem Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85728-432-7
- Olivelle, Patrick (1998). Upaniṣads. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0192835765.
- Parmeshwaranand, S (2000). Encyclopaedic Dictionary of Upanisads. Sarup & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7625-148-8.
- Srinivasan, Doris (1997). Many Heads, Arms, and Eyes. BRILL Academic. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9004107588.
- Vimalananda, Swami (1957). Mahanarayanopanisad. Sri Ramakrishna Math. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0702501562. இணையக் கணினி நூலக மைய எண் 851208392.
- Tinoco, Carlos Alberto (1996). Upanishads. IBRASA. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-85-348-0040-2.
- Jacob, G.A., ed. (1888). The Mahānārāyaṇa-Upaniṣad of the Atharva-Veda. Bombay Sanskrit Series. Vol. XXXV. Bombay.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link)