நரிசிம்ம தபனிய உபநிடதம்
Nrisimha Tapaniya | |
---|---|
தேவநாகரி | नृसिंह तापनीय |
சமக்கிருத ஒலிப்பெயர்ப்பு | Nṛsiṁha-Tāpanīya |
உபநிடத வகை | Vaishnava |
தொடர்பான வேதம் | அதர்வண வேதம் |
அத்தியாயங்கள் | பூர்வ தபனிய உபநிடதம் மற்றும் உத்தர தபனிய உபநிடதம் |
பாடல்களின் எண்ணிக்கை | 14 [1][2] [3] |
அடிப்படைத் தத்துவம் | வைணவ சமயம் |
தொடரின் ஒரு பகுதி |
இந்து புனித நூல்கள் |
---|
நரிசிம்ம தபனிய உபநிடதம் (Nrisimha Tapaniya Upanishad) (नृसिंह तापनीय उपनिषद्) என்பது சமசுகிருதத்தில் எழுதப்பட்ட ஒரு சிறிய உபநிடத உரையாகும். அதர்வண வேதத்துடன் இணைக்கப்பட்ட 31 உபநிடதங்களில் ஒன்றான இது,[4] வைணவ உபநிடதங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. [5] பூர்வ தபனிய உபநிடதம் மற்றும் உத்தர தபனிய உபநிடதம் என இரண்டு பகுதிகளாக வழங்கப்பட்டுள்ளது.[3] மேலும் வைணவர்களின் நரசிம்ம பிரிவின் முக்கிய வேதங்களை உருவாக்கியது.[6][7][8]
ஆன்மா ஓம், பிரம்மம் மற்றும் விஷ்ணு, நரசிம்மர் போன்ற நான்கு அடையாளத்தை வலியுறுத்துவது குறிப்பிடத்தக்கது. [9] [10] உபநிடதம் இருக்கு வேத வசனங்களுடன் ஆரம்பிக்கிறது.[7] தனித்துவத் தத்துவத்தின் அடித்தளம் மற்றும் அதன் பாணி ஆகியவவை இராமனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள பிற வைணவ உபநிடதங்களைப் போலவே காணப்படுகிறது.[7][11]
நரிசிம்ம மந்திரம், அதன் நான்கு துணை மந்திரங்களுடன், "மந்திரராஜா" என்ற அடைமொழியுடன் உச்சரிக்கப்படுகிறது. இந்த உபநிடதம் முழுவதும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படும் முதன்மையான துதியாக "ஓம்" என்ற மந்திரம் உள்ளது. நரிசிம்ம மந்திரம் மற்றும் தொடர்புடைய துதிகளைப் பற்றியும் உரை விவாதிக்கிறது.[7]
இந்த உரை நரசிம்ம-தபனி உபநிஷத் மற்றும் நரிசிம்மதபனோபனிஷத் ( சமக்கிருதம்: नृसिंहोत्तरतापनीयोपनिषत् ) என்றும் குறிப்பிடப்படுகிறது. )
காலம்
[தொகு]நரசிம்ம-தபனி உபநிடத உரை இயற்றப்பட்ட காலம் பற்றி தெளிவாக இல்லை. பதஞ்சலி முனிவரின் சீடர்களில் ஒருவரான கௌடபாதர் இதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.[12]
உள்ளடக்கம்
[தொகு]உபநிடதத்தின் ஆரம்பப் பாடல்கள் தேவர்கள், இந்திரன், சூரியன் மற்றும் கருடன் ஆகியோரை தீமைகளை அழிப்பவர்களாகவும், ஆசீர்வாதத்தை அளிப்பவர்களாகவும் கூறுகிறது. வாழ்நாளை அனுபவிக்க இவர்களை வணஙக வேண்டும் எனவும் கூறுகிறது. மேலும், பிருகஸ்பதியை பிரார்த்தனை செய்வதால் ஆரோக்கியம், செழிப்பு மற்றும் அமைதியை வழங்குவார் என்றும் கூறுகிறாது. பிரார்த்தனை அல்லது பக்தியின் தெய்வமான பிருகஸ்பதி, ஆரோக்கியம், செழிப்பு மற்றும் அமைதியை வழங்குவதாகவும் கூறுகிறது.[13][1]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Nrisimha Tapaniya Upanishad (Part of the Atharva Veda)". Vedarahasya.net. பார்க்கப்பட்ட நாள் 2 May 2015.
- ↑ "Nrisimha Uttara Tapaniya Upanishad". Vedanta Spiritual Library. Archived from the original on 27 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 29 June 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 3.0 3.1 Nair 2008, ப. 399.
- ↑ Prasoon 2008, ப. 82.
- ↑ Tinoco 1997, ப. 87.
- ↑ Deussen 1997, ப. 809-858.
- ↑ 7.0 7.1 7.2 7.3 Lamb 2002, ப. 191.
- ↑ Farquhar 1920, ப. 188.
- ↑ Lamb 2002.
- ↑ Deussen 1997.
- ↑ Deussen 1997, ப. 809-810, 835, 859-861.
- ↑ Farquhar 1920, ப. 188-189, 266 with footnotes.
- ↑ Ramachander, P. R. "Nrisimha Poorva Tapaniya Upanishad". Vedanta Spiritual Library. Archived from the original on 23 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 29 June 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ D Dennis Hudson (2008), The Body of God, Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0195369229, page 482
உசாத்துணை
[தொகு]- Deussen, Paul (1997). Sixty Upanishads of the Veda. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1467-7.
- Farquhar, John Nicol (1920). An Outline of the Religious Literature of India. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-89581-765-5.
- Lamb, Ramdas (29 August 2002). Rapt in the Name: The Ramnamis, Ramnam, and Untouchable Religion in Central India. SUNY Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7914-5386-5.
- Prasoon, Prof.S.K. (1 January 2008). Indian Scriptures. Pustak Mahal. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-223-1007-8.
- Nair, Shantha N. (1 January 2008). Echoes of Ancient Indian Wisdom. Pustak Mahal. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-223-1020-7.
- Tinoco, Carlos Alberto (1997). Upanishads. IBRASA. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-85-348-0040-2.