நாகர்கோவில் சந்திப்பு தொடருந்து நிலையம்
நாகர்கோவில் சந்திப்பு | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
தொடருந்து நிலையத்தின் முக்கிய வளாகம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | இரயில்வே பீடர் சாலை, கோட்டாறு, நாகர்கோவில், கன்னியாகுமரி, தமிழ்நாடு இந்தியா | ||||
ஆள்கூறுகள் | |||||
ஏற்றம் | 38 மீட்டர்கள் (125 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
தடங்கள் |
| ||||
நடைமேடை | 4 | ||||
இருப்புப் பாதைகள் | 11 | ||||
இணைப்புக்கள் | பேருந்து, வாடகையுந்து, ஆட்டோ ரிக்சா நிறுத்தம் | ||||
கட்டமைப்பு | |||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மாற்றுத்திறனாளி அணுகல் | |||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | இயக்கத்தில் | ||||
நிலையக் குறியீடு | NCJ | ||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | திருவனந்தபுரம் | ||||
வரலாறு | |||||
திறக்கப்பட்டது | 15 ஏப்ரல் 1979 | ||||
மின்சாரமயம் | ஆம் | ||||
பயணிகள் | |||||
பயணிகள் 2018-19 | 8,318/ஒரு நாளைக்கு[1] | ||||
|
நாகர்கோவில் சந்திப்பு தொடருந்து நிலையம் (Nagercoil Junction railway station, நிலையக் குறியீடு:NCJ) இந்தியாவின், தமிழ்நாட்டில், கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோவில் மாநகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது தென்னக இரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
வரலாறு
[தொகு]
|
திருவனந்தபுரம்-நாகர்கோயில்-கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி-நாகர்கோயில் கட்டுமானத் திட்டங்களை, அப்போதைய பிரதமர் திருமதி இந்திரா காந்தி 1972 செப்டம்பர் 6 ஆம் தேதி திறந்து வைத்தார். திருவனந்தபுரம்-நாகர்கோயில்-கன்னியாகுமரி வழித்தடமானது ஏப்ரல் 15, 1979 அன்று திறக்கப்பட்டது. நாகர்கோயில் சந்திப்பானது 15 ஏப்ரல் 1979இல் செயல்படத் தொடங்கியது.
திட்டங்கள் மற்றும் மேம்பாடு
[தொகு]இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [2][3][4][5][6]
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் திருவனந்தபுரம் கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, நாகர்கோவில் சந்திப்பு தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 11 கோடி 38 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. [7][8][9][10]
சேவைகள்
[தொகு]பயணிகள் தொடருந்து
[தொகு]சேவைகள்[11]
- 56310 நாகர்கோவில் – திருவனந்தபுரம் பயணிகள் தொடருந்து
- 56321 கன்னியாகுமரி – திருநெல்வேலி பயணிகள் தொடருந்து
- 56312 திருநெல்வேலி – நாகர்கோவில் பயணிகள் தொடருந்து
- 56325 நாகர்கோவில் – கன்னியாகுமரி பயணிகள் தொடருந்து
- 56319 நாகர்கோவில் – கோயம்புத்தூர் பயணிகள் தொடருந்து
- 56320 கோயம்புத்தூர் – நாகர்கோவில் பயணிகள் தொடருந்து
- 56318 நாகர்கோவில் – கொச்சுவேலி பயணிகள் தொடருந்து
- 56304 நாகர்கோவில் – கோட்டயம் பயணிகள் தொடருந்து
- 56316 நாகர்கோவில் – திருவனந்தபுரம் பயணிகள் தொடருந்து
- 56311 திருவனந்தபுரம் – நாகர்கோவில் பயணிகள் தொடருந்து
- 56317 கொச்சுவேலி – நாகர்கோவில் பயணிகள் தொடருந்து
- 56315 திருவனந்தபுரம் – நாகர்கோவில் பயணிகள் தொடருந்து
- 56313 திருவனந்தபுரம் – நாகர்கோவில் பயணிகள் தொடருந்து
- 66304 கொல்லம் – கன்னியாகுமரி MEMU
- 66305 கன்னியாகுமரி – கொல்லம் MEMU
- 56715 புணலூர் – கன்னியாகுமரி பயணிகள் தொடருந்து
- 56716 கன்னியாகுமரி – புணலூர் பயணிகள் தொடருந்து
- 56701 புணலூர் – மதுரை பயணிகள் தொடருந்து
- 56700 மதுரை – புணலூர் பயணிகள் தொடருந்து
விரைவு தொடருந்துகள்
[தொகு]இரயில் எண். | இரயில் பெயர் | புறப்படுமிடம் | சேருமிடம் |
---|---|---|---|
16352 | மும்பை விரைவுத் தொடருந்து | நாகர்கோவில் | மும்பை சிஸ்டி |
16128[12] | குருவாயூர் விரைவுத் தொடருந்து | குருவாயூர் | சென்னை |
16340 | மும்பை விரைவுத் தொடருந்து | நாகர்கோவில் | மும்பை சிஸ்டி |
12666[12] | அவ்ரா விரைவுத் தொடருந்து | கன்னியாகுமரி | அவ்ரா |
16863[12] | புதுச்சேரி விரைவுத் தொடருந்து | கன்னியாகுமரி | புதுச்சேரி |
16354[12] | கச்செகுடா விரைவுத் தொடருந்து | நாகர்கோவில் | கச்செகுடா |
17236 | பெங்களுரு விரைவுத் தொடருந்து | நாகர்கோவில் | பெங்களுரு |
12668 | சென்னை விரைவுத் தொடருந்து | நாகர்கோவில் | சென்னை |
12634 | கன்னியாகுமரி விரைவுத் தொடருந்து | கன்னியாகுமரி | சென்னை |
16724 | அனந்தபுரி விரைவுத் தொடருந்து | திருவனந்தபுரம் | சென்னை |
12641 | திருக்குறள் விரைவுத் தொடருந்து | கன்னியாகுமரி | ஹசரத் நிசாமுதீன், தில்லி |
12690 | சென்னை விரைவுத் தொடருந்து | நாகர்கோவில் | சென்னை |
16609 | கோயம்புத்தூர் விரைவுத் தொடருந்து | நாகர்கோவில் | கோயம்புத்தூர் |
22622[12] | இராமேசுவரம் விரைவுத் தொடருந்து | கன்னியாகுமரி | இராமேஸ்வரம் |
16606[12] | ஏரநாடு விரைவுத் தொடருந்து | நாகர்கோவில் | மங்களூர் |
22620 | பிலாஸ்பூர் விரைவுத் தொடருந்து | திருநெல்வேலி | பிலாஸ்பூர் |
16650[12] | பரசுராம் விரைவுத் தொடருந்து | நாகர்கோவில் | மங்களூர் |
16382[12] | ஜெயந்தி ஜனதா விரைவுத் தொடருந்து | கன்னியாகுமரி | மும்பை சிஸ்டி |
19577[12] | ஹாப்பா விரைவுத் தொடருந்து | திருநெல்வேலி | ஹாப்பா |
16723 | அனந்தப்பூர் விரைவுத் தொடருந்து | சென்னை | திருவனந்தபுரம் |
16525[12] | ஐலேன்டு விரைவுத் தொடருந்து | கன்னியாகுமரி | பெங்களுரு |
16336[12] | காந்திதாம் விரைவுத் தொடருந்து | நாகர்கோவில் | காந்திதாம் |
16317[12] | இம்சாகர் விரைவுத் தொடருந்து | கன்னியாகுமரி | சம்முதாவி |
12659[12] | குருதேவ் விரைவுத் தொடருந்து | நாகர்கோவில் | சாலிமார் |
15905[12] | விவேக் விரைவுத் தொடருந்து | கன்னியாகுமரி | திப்ரூகர் |
16127[12] | குருவாயூர் விரைவுத் தொடருந்து | சென்னை | குருவாயூர் |
வசதிகள்
[தொகு]- கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு நிலையம்
- பயணிகள் ஓய்வு அறை
- இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடங்கள்
திட்டங்கள் மற்றும் மேம்பாடு
[தொகு]இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் 75 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும்.[13][14]
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் நாகர்கோவில் ரயில் நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 11.38 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[15]
நாகர்கோவில் சந்திப்பு தொடருந்து தடங்கள்
[தொகு]வரிசை எண் | நோக்கி | கடந்து செல்லும் தொடருந்து நிலையங்கள் | வகை / வழித்தடம் |
---|---|---|---|
1 | சென்னை | திருநெல்வேலி, மதுரை, திருச்சி |
|
2 | மங்களூர் | திருவனந்தபுரம், எர்ணாகுளம் |
|
3 | கன்னியாகுமரி | சுசீந்தரம் |
|
4 | செட்டிகுளம் | ஆளூர்-வீராணி | அகல இரயில்பாதை – கணக்கெடுப்பின் கீழ் (முன்மொழியப்பட்டது) |
5 | காரைக்குடி | திருசெந்தூர், தூத்துக்குடி | அகல இரயில்பாதை – கணக்கெடுப்பின் கீழ் (முன்மொழியப்பட்டது) |
தொழில்நுட்ப தகவல்கள்
[தொகு]நாகர்கோவில் - திருவனந்தபுரம் பிரிவு
[தொகு]- நாகர்கோவில் முதல் திருவனந்தபுரம் வரை இருப்புப்பாதை 71.05 கி.மீ
- திருவனந்தபுரம் - நாகர்கோவில் இருப்புபாதை கொள்ளவுத்திறன் சதவீத அளவு : 114.1%
- அனுமதிக்கப்பட்ட அதிகப்பட்ச வேகம் 80 km/h
- மொத்த நிலையங்கள் =13
- தடுப்பு தொடருந்து நிலையம் எண்ணிக்கை (Block Station) =6
- தொடருந்து நிலையம் (CNC Station) = 1
- நிறுத்த தொடருந்து நிலையம் எண்ணிக்கை (Halt station) =6
- முக்கியமான தடுப்பு இருப்புபாதை பிரிவு (Critical Block Section) = இரணியல் - நாகர்கோவில்
- மொத்த தொலைவு கி.மீ= 272.62
நாகர்கோவில் - திருநெல்வேலி பிரிவு
[தொகு]- நாகர்கோவில் முதல் திருநெல்வேலி வரை இருப்புப்பாதை 73.29 கி.மீ.
- திருநெல்வேலி - நாகர்கோவில் இருப்புபாதை கொள்ளவுத்திறன் சதவீத அளவு : 110%
- அனுமதிக்கப்பட்ட அதிகப்பட்ச வேகம் 90 km/h
- மொத்த நிலையங்கள் = 7
- தடுப்பு தொடருந்து நிலையம் எண்ணிக்கை (Block Station) = 5
- தொடருந்து நிலையம் (CNC Station) = 0
- நிறுத்த தொடருந்து நிலையம் எண்ணிக்கை (Halt station) = 2
- முக்கியமான தடுப்பு இருப்புபாதை பிரிவு (Critical Block Section) = வள்ளியூர் - நாங்குநேரி
நாகர்கோவில் - கன்னியாகுமரி பிரிவு
[தொகு]- நாகர்கோவில் முதல் கன்னியாகுமரி வரை இருப்புப்பாதை 15.51 கி.மீ.
- கன்னியாகுமரி - நாகர்கோவில் இருப்புபாதை கொள்ளவுத்திறன் சதவீத அளவு : 77%
- அனுமதிக்கப்பட்ட அதிகப்பட்ச வேகம் 75 km/h
- மொத்த நிலையங்கள் = 2
- தடுப்பு தொடருந்து நிலையம் எண்ணிக்கை (Block Station) = 1
- தொடருந்து நிலையம் (CNC Station) = 0
- நிறுத்த தொடருந்து நிலையம் எண்ணிக்கை (Halt station) = 1
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Annual originating passengers & earnings for the year 2018-19" (PDF). Southern Railways. பார்க்கப்பட்ட நாள் 8 July 2019.
- ↑ "AMRIT BHARAT STATIONS". Press Information Bureau (New Delhi). 10 Feb 2023. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897980.
- ↑ https://sansad.in/getFile/annex/262/AU1585.pdf?source=pqars
- ↑ https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1941449
- ↑ https://www.youtube.com/watch?v=2ilIzAsYJVs
- ↑ https://www.youtube.com/watch?v=mETMtIdiv_E
- ↑ https://news.railanalysis.com/southern-railway-identifies-90-railway-stations-sanctions-rs-934-crore-for-redevelopment-of-stations-under-amrit-bharat-station-scheme/
- ↑ https://swarajyamag.com/infrastructure/amrit-bharat-station-scheme-60-suburban-railway-stations-to-get-facelift-in-tamil-nadu
- ↑ https://www.youtube.com/watch?app=desktop&v=Rt1Y_5QLKjM
- ↑ https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/kanniyakumari/pm-modi-inaugurated-the-foundation-stone-ceremony-of-the-amrit-bharat-railway-station-scheme/tamil-nadu20230806164607780780649
- ↑ Southern Zone Time Table July 2013, Page no 170 & Table No. 41,41A
- ↑ 12.00 12.01 12.02 12.03 12.04 12.05 12.06 12.07 12.08 12.09 12.10 12.11 12.12 12.13 12.14 Southern Zone Time Table July 2013, Page no 112 & Table No. 13,13A
- ↑ "AMRIT BHARAT STATIONS". Press Information Bureau (New Delhi). 10 Feb 2023. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897980.
- ↑ https://sansad.in/getFile/annex/262/AU1585.pdf?source=pqars
- ↑ https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/kanniyakumari/pm-modi-inaugurated-the-foundation-stone-ceremony-of-the-amrit-bharat-railway-station-scheme/tamil-nadu20230806164607780780649