பாடாங் தெராப் மக்களவைத் தொகுதி
பாடாங் தெராப் (P007) மலேசிய மக்களவைத் தொகுதி கெடா | |
---|---|
Padang Terap (P0007) Federal Constituency in Kedah | |
பாடாங் தெராப் மக்களவைத் தொகுதி | |
மாவட்டம் | பாடாங் தெராப் மாவட்டம்; கெடா |
வாக்காளர் தொகுதி | பாடாங் தெராப் தொகுதி |
முக்கிய நகரங்கள் | கோலா நெராங், பெடு |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1974 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
இதற்கு முன்னர் நடப்பில் இருந்த தொகுதி | 2022 |
மக்களவை உறுப்பினர் | நூருல் அமீன் அமீத் (Nurul Amin Hamid) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 59,806[1][2] |
தொகுதி பரப்பளவு | 1,357 ச.கி.மீ[3] |
இறுதி தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[4] |
பாடாங் தெராப் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Padang Terap; ஆங்கிலம்: Padang Terap Federal Constituency; சீனம்: 巴东特拉普联邦选区) என்பது மலேசியா, கெடா மாநிலத்தில், பாடாங் தெராப் மாவட்டத்தில் (Padang Terap District); அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P007) ஆகும்.[5]
பாடாங் தெராப் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதல் தேர்தல் 1974-ஆம் ஆண்டில் நடைபெற்றது. அத்துடன் அதே 1974-ஆம் ஆண்டில் இருந்து பாடாங் தெராப் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது.
2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), மெர்போக் தொகுதி 31 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டது.[6]
பொது
[தொகு]பாடாங் தெராப் மாவட்டம்
[தொகு]பாடாங் தெராப் மாவட்டம் (Padang Terap District) கெடா மாநிலத்தின் மூன்றாவது பெரிய மாவட்டம். இந்த மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் தாய்லாந்து நாடு எல்லையாக உள்ளது. மேற்குப் பகுதியில் சிக் மாவட்டம் (Sik District) மற்றும் பெண்டாங் மாவட்டம் (Pendang District) ஆகிய மாவட்டங்கள் எல்லைகளாக உள்ளன.
இந்த மாவட்டத்தின் நிர்வாக மையம் கோலா நெராங் (Kuala Nerang); நாகா (Naka) மற்றும் பெடு (Pedu) ஆகியவை முக்கிய நகரங்கள்.
நிர்வாகப் பிரிவுகள்
[தொகு]பாடாங் தெராப் மாவட்டம் 11 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன:
- பத்தாங் துங்காங் கானான் (Batang Tunggang Kanan)
- பத்தாங் துங்காங் கீரி (Batang Tunggang Kiri)
- பெலிம்பிங் கானான் (Belimbing Kanan)
- கூரோங் ஈத்தாம் (Kurong Hitam)
- பாடாங் தெமாக் (Padang Temak)
- பாடாங் தெராப் கானான் (Padang Terap Kanan)
- பாடாங் தெராப் கீரி (Padang Terap Kiri)
- பெடு (Pedu)
- தெக்காய் (Tekai)
- தோலாக் (Tolak)
பாடாங் தெராப் மக்களவைத் தொகுதி
[தொகு]பாடாங் தெராப் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1974 - 2023) | |||
---|---|---|---|
நாடாளுமன்றம் | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
ஜித்ரா-பாடாங் தெராப் தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது | |||
4-ஆவது | 1974–1978 | அகமத் சுக்ரி அப்துல் சுக்குர்' (Ahmad Shukri Abdul Shukur) |
பாரிசான் (பாஸ்) |
5-ஆவது | 1978–1982 | சையத் அகமது சையத் மகமூத் சகாபுதீன் (Syed Ahmad Syed Mahmud Shahabuddin) |
பாரிசான் (அம்னோ) |
6-ஆவது | 1982–1984 | ||
1985–1986 | பகரோம் பக்கார் (Baharom Bakar) | ||
7-ஆவது | 1986–1990 | அபிபுடின் ஒமார் (Affifudin Omar) | |
8-ஆவது | 1990–1995 | ||
9-ஆவது | 1995–1999 | ||
10-ஆவது | 1999–2004 | சவாவி அகமத் (Zawawi Ahmad) |
பாஸ் |
11-ஆவது | 2004–2008 | கசாலி இப்ராகிம் (Ghazali Ibrahim) |
பாரிசான் (அம்னோ) |
12-ஆவது | 2008–2013 | முகமது நாசிர் சக்காரியா (Mohd Nasir Zakaria) |
பாஸ் |
13-ஆவது | 2013–2018 | மாட்சிர் காலிட் (Mahdzir Khalid) |
பாரிசான் (அம்னோ) |
14-ஆவது | 2018–2022 | ||
15-ஆவது | 2022 – தற்போது வரையில் | நூருல் அமின் அமீட் (Nurul Amin Hamid) |
பெரிக்காத்தான் (பாஸ்) |
தேர்தல் முடிவுகள்
[தொகு]பொது | வாக்குகள் | % |
---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
59,806 | - |
வாக்களித்தவர்கள் (Turnout) |
49,341 | 81.31% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
48,629 | 100.00% |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
90 | - |
செல்லாத வாக்குகள் (Rejected Ballots) |
632 | - |
பெரும்பான்மை (Majority) |
10,959 | 22.54% |
வெற்றி பெற்ற கட்சி | பெரிக்காத்தான் நேசனல் | |
Source: Results of Parliamentary Constituencies of Kedah |
பொதுத் தேர்தல் 2022 வேட்பாளர் விவரங்கள்
[தொகு]வேட்பாளர் | கட்சி | வாக்குப்பதிவு | % | ∆% | |
---|---|---|---|---|---|
நூருல் அமீன் அமீத் (Nurul Amin Hamid) |
பெரிக்காத்தான் | 28,217 | 58.03% | +58.03 | |
மட்சிர் காலித் (Mahdzir Khalid) |
பாரிசான் | 17,258 | 35.49% | -6.60 ▼ | |
முவாசு அப்துல்லா (Muaz Abdullah) |
பாக்காத்தான் | 2,702 | 5.56% | -13.08 ▼ | |
ரசாலி லெபாய் சலே (Razali Lebai Salleh) |
உள்நாட்டு போராளிகள் கட்சி | 452 | 0.93% | +0.93 |
சட்டமன்ற உறுப்பினர்கள் (2022)
[தொகு]எண் | தொகுதி | உறுப்பினர் | கூட்டணி (கட்சி) |
---|---|---|---|
N7 | கோலா நெராங் | முனீர் @ முகமது யூசுப் சக்காரியா (Munir @ Mohamad Yusoff Zakaria) |
பெரிக்காத்தான் (பாஸ்) |
N8 | பெடு | ராட்சி அமீன் (Mohd Radzi Md Amin) |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kedah National Seat Kedah - Malaysia's 15th General Election - China Press". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 30 May 2023.
- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 2018-04-16. p. 2. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.