உள்ளடக்கத்துக்குச் செல்

சுங்கை பட்டாணி மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுங்கை பட்டாணி (P015)
மலேசிய மக்களவைத் தொகுதி
கெடா
Sungai Petani (P015)
Federal Constituency in Kedah
சுங்கை பட்டாணி மக்களவைத் தொகுதி
மாவட்டம்கோலா மூடா மாவட்டம்; கெடா
வாக்காளர் தொகுதிசுங்கை பட்டாணி தொகுதி
முக்கிய நகரங்கள்சுங்கை பட்டாணி
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1958
நீக்கப்பட்ட காலம்1959
கட்சிபெரிக்காத்தான் நேசனல்
மக்களவை உறுப்பினர்முகமது தௌபிக் சொகாரி
(Mohammed Taufiq Johari)
வாக்காளர்கள் எண்ணிக்கை168,847
தொகுதி பரப்பளவு261 ச.கி.மீ
இறுதி தேர்தல்பொதுத் தேர்தல் 2022




2022-இல் சுங்கை பட்டாணி தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்

  மலாயர் (61.7%)
  சீனர் (25.8%)
  இதர இனத்தவர் (0.3%)

சுங்கை பட்டாணி மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Sungai Petani; ஆங்கிலம்: Sungai Petani Federal Constituency; சீனம்: 双溪大年联邦选区) என்பது மலேசியா, கெடா மாநிலத்தில், கோலா மூடா மாவட்டத்தில் (Kuala Muda District) உள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P015) ஆகும்.

சுங்கை பட்டாணி தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 1959-ஆம் ஆண்டில் இருந்து மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. 31 அக்டோபர் 2022-இல் வெளியிடப்பட்ட மத்திய அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), சுங்கை பட்டாணி தொகுதி 50 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது.[1]

பொது

[தொகு]

சுங்கை பட்டாணி நகரம்

[தொகு]

சுங்கை பட்டாணி' (Sungai Petani); கெடா, கோலா மூடா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். கெடா மாநிலத்தில் மிகப் பெரிய நகரமாகக் கருதப்படும் சுங்கை பட்டாணி நகரம், மாநிலத்தின் தலைநகரமான அலோர் ஸ்டார் (Alor Setar) மாநகரத்தில் இருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ளது. ஜோர்ஜ் டவுன் நகரில் இருந்து 33 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

சுங்கை பட்டாணியில் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய சின்னங்களில் முக்கியமானது சுங்கை பட்டாணி காவல் நிலையம் ஆகும். இது 1916-ஆம் ஆண்டில் அத்தாப்பு குடிசையாகக் கட்டப் பட்டது.

அப்போது பத்து காவல் துறை அதிகாரிகள் அந்த நிலையத்தில் பணிபுரிந்தனர். வெறும் அத்தாப்பு கூரைகள், பலகைகளால் ஆனது. அதில் பத்து சீக்கிய, மலாய்க்கார காவல் துறை அதிகாரிகள் பணிபுரிந்தனர்.

சுங்கை பட்டாணி மணிக்கூண்டு

[தொகு]

1950-ஆம் ஆண்டுகளில் சுங்கை பட்டாணி வாழ் மக்களுக்குப் பொழுது போக்குவதற்கு சரியான பூங்காக்கள் அல்லது போக்கிடங்கள் எதுவும் இல்லாமல் இருந்தது. அதனால் அவர்களில் சிலர், மாலை வேளைகளில் ஆங்காங் சாங்காய் வங்கிக்கு முன்னால் கூடி பொழுதுகளைக் கழிப்பார்கள். ஆங்காங் சாங்காய் வங்கி 1921-ஆம் ஆண்டு கட்டப் பட்டது.

அதற்கு முன்னரே சுங்கை பட்டாணி கூடலகம் (Sungai Petani Club) 1913-இல் கட்டப் பட்டு விட்டது. இந்த மன்றத்தில் பிரித்தானியர்கள், அரசு இலாகாகளின் தலைவர்கள், தோட்ட நிர்வாகிகள் உறுப்பினர்களாக இருந்தனர்.

சுங்கை பட்டாணி நாடாளுமன்றத் தொகுதி

[தொகு]
சுங்கை பட்டாணி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள்
நாடாளுமன்றம்ஆண்டுகள்உறுப்பினர்கட்சி
சுங்கை பட்டாணி தொகுதி சுங்கை மூடா தொகுதியில் இருந்து புதிதாக உருவாக்கப்பட்டு, சுங்கை பட்டாணி தொகுதி என மறுபெயரிடப்பட்டது
சுங்கை பட்டாணி
மலாயா கூட்டரசு நாடாளுமன்றம்
1-ஆவது1959–1963அப்துல் சமாட் ஒசுமான்
(Abdul Samad Osman)
கூட்டணி (அம்னோ)
மலேசிய நாடாளுமன்றம்
1-ஆவது1963–1964அப்துல் சமாட் ஒசுமான்
(Abdul Samad Osman)
கூட்டணி (அம்னோ)
2-ஆவது1964–1969முகமது சாகிர் இசுமாயில்
(Mohamed Zahir Ismail)
1969–1971நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
3-ஆவது1971–1973அசாரி முகமட் தைப்
(Azahari Md. Taib)
கூட்டணி (அம்னோ)
1973–1974பாரிசான் (அம்னோ)
4-ஆவது1974–1978வான் சைனாப் எம்.ஏ.பக்கார்
(Wan Zainab M. A. Bakar)
5-ஆவது1978–1982
6-ஆவது]1982–1986
சுங்கை பட்டாணி
7-ஆவது1986–1990அப்துல் மனாப் அகமத்
(Abdul Manaf Ahmad)
பாரிசான் (அம்னோ)
8-ஆவது1990–1995செ இப்ராகிம் முசுதபா
(Che Ibrahim Mustafa)
9-ஆவது1995–1999
10-ஆவது1999–2004மகாசிர் முகமது கிர்
(Mahadzir Mohd Khir)
11-ஆவது2004–2008
12-ஆவது2008–2013சொகாரி அப்துல்
(Johari Abdul)
மக்கள் நீதிக்கட்சி (பிகேஆர்)
13-ஆவது2008–2013
14-ஆவது2018–2022பாக்காத்தான் (பிகேஆர்)
15-ஆவது2022–தற்போதுமுகமது தௌபிக் சொகாரி
(Mohammed Taufiq Johari)

சுங்கை பட்டாணி தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொதுவாக்குகள்%
பதிவு பெற்ற வாக்காளர்கள்168,847100.00%
வாக்களித்தவர்கள்131,44777.85%
செல்லுபடி வாக்குகள்130,004-
செல்லாத வாக்குகள்1,443-

சுங்கை பட்டாணி வேட்பாளர் விவரங்கள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள் (%)
முகமது தௌபிக் சொகாரி
(Mohammed Taufiq Johari)
பாக்காத்தான் 50,580 38.91%
ராபர்ட் லிங் குய் ஈ
(Robert Ling Kui Ee)
பெரிக்காத்தான் 49,465 38.05%
சகானிம் முகமது யூசோப்
(Shahanim Mohamad Yusoff)
பாரிசான் 27,391 21.07%
மர்சுகி யாகயா
(Marzuki Yahya)
உள்நாட்டு போராளிகள் கட்சி 2,342 1.80%
டான் சௌ காங்
(Tan Chow Kang)
மலேசிய மக்கள் கட்சி 226 0.17%

மேற்கோள்கள்

[தொகு]
  • "Keputusan Pilihan Raya Suruhanjaya Pilihan Raya". Election Commission of Malaysia. Retrieved 2018-08-12.
  • "15th General Elaction Malaysia".
  1. ↑ "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. Retrieved 13 ஏப்ரல் 2023.

மேலும் காண்க

[தொகு]