இராமநாதபுரம் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Fixed typo அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit |
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit |
||
வரிசை 109: | வரிசை 109: | ||
* [[பரமக்குடி]] |
* [[பரமக்குடி]] |
||
* [[இராமேஸ்வரம்]] |
* [[இராமேஸ்வரம்]] |
||
* [[கீழக்கரை |
* [[கீழக்கரை]] |
||
=== பேரூராட்சிகள் === |
=== பேரூராட்சிகள் === |
19:56, 18 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்
இராமநாதபுரம் மாவட்டம் Ramanathapuram district முகவை மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
பாம்பன் பாலத்தில் இருந்து இராமேசுவரம் தீவின் தோற்றம் | |
தமிழ்நாட்டில் அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
பெரிய நகரம் | இராமநாதபுரம் |
தலைமையகம் | இராமநாதபுரம் |
வட்டங்கள் | கடலாடி கமுதி கீழக்கரை முதுகுளத்தூர் பரமக்குடி போகலூர் இராமநாதபுரம் இராமேசுவரம் இராஜசிங்கமங்கலம் திருவாடானை |
அரசு | |
• ஆட்சியர் | வீரராகவராவ்,[1] இ.ஆ.ப |
• காவல்துறைக் கண்காணிப்பாளர் | மணிவண்ணன் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 13,53,445 |
மொழிகள் | |
• அதிகாரபூர்வம் | தமிழ் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
குறியீடு | 623xxx |
தொலைபேசிக் குறியீடு | 04567 |
வாகனப் பதிவு | TN-65[2] |
அமைவிடம்: | 9°16′N 77°26′E / 9.267°N 77.433°E |
இணையதளம் | ramanathapuram |
இராமநாதபுரம் மாவட்டம் (Ramanathapuram district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைநகரம் இராமநாதபுரம் ஆகும். இது தென் தமிழகத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை மாவட்டம் ஆகும். 4,123 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள மாவட்டத்தின் கிழக்கே பாக் நீரிணையும், வடக்கில் சிவகங்கை மாவட்டமும், வடகிழக்கில் புதுக்கோட்டை மாவட்டமும், தெற்கில் மன்னார் வளைகுடாவும், மேற்கில் மதுரை மாவட்டமும் தென்மேற்கில் தூத்துக்குடி மாவட்டமும் அமைந்துள்ளன. இந்து மக்களால் புனிதத்தலமாக கருதப்படும் ராமேஸ்வரம் இந்த மாவட்டத்தில்தான் அமைந்துள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
4,104 3,703 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இராமநாதபுரம் மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள்தொகை 1,353,445 ஆகும். அதில் ஆண்கள் 682,658 ஆகவும்; பெண்கள் 670,787 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி 13.96% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 983 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 330 நபர்கள் வீதம் உள்ளனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 80.72% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 140,644 ஆகவுள்ளனர்.[3]
இம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 77.39% ஆகவும், கிறித்தவர்கள் 6.73% ஆகவும், இசுலாமியர்கள் 15.37 % ஆகவும், மற்றவர்கள் 0.50% ஆகவும் உள்ளனர்.
வரலாறு
இராமநாதபுரம் மாவட்டமானது 1910 இல் திருநெல்வேலி மற்றும் மதுரை ஆகிய மாவட்டப் பகுதிகளில் இருந்து உருவாக்கப்பட்டது. அதன்பிறகு 1985 மார்ச் 15 இல் இந்த மாவட்டத்தில் இருந்து சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்ட்கள் உருவாக்கப்பட்டன.
மாவட்ட வருவாய் நிர்வாகம்
இராமநாதபுரம் மாவட்டத்தின், இராமநாதபுரம் வருவாய்க் கோட்டத்தில் 5 வருவாய் வட்டங்களும், பரமக்குடி வருவாய்க் கோட்டத்தில் 5 வட்டங்களும் உள்ளன. இந்த 10 வருவாய் வட்டங்களில் 38 உள்வட்டங்களும், 400 வருவாய் கிராமங்களும் உள்ளது.[4]
இராமநாதபுரம் கோட்டத்தின் வருவாய் வட்டங்கள்
பரமக்குடி கோட்டத்தின் வருவாய் வட்டங்கள்
உள்ளாட்சி நிர்வாகம்
இராமநாதபுரம் மாவட்டம் 6 நகராட்சிகளும், 12 பேரூராட்சிகளும் கொண்டது.[5]
நகராட்சிகள்
பேரூராட்சிகள்
- [[கடலாடி])
ஊரக வளர்ச்சி நிர்வாகம்
இம்மாவட்டம் ஒரு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையும், 11 ஊராட்சி ஒன்றியங்களும், 429 கிராம ஊராட்சிகளும் கொண்டது.[11]
ஊராட்சி ஒன்றியங்கள்
இராமநாதபுரம் மாவட்டத்தின் 11 ஊராட்சி ஒன்றியங்கள்.
- இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம்
- பரமக்குடி ஊராட்சி ஒன்றியம்
- கடலாடி ஊராட்சி ஒன்றியம்
- கமுதி ஊராட்சி ஒன்றியம்
- முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம்
- திருவாடானை ஊராட்சி ஒன்றியம்
- போகலூர் ஊராட்சி ஒன்றியம்
- மண்டபம் ஊராட்சி ஒன்றியம்
- நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியம்
- திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம்
- இராஜசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம்
அரசியல்
இம்மாவட்டம் 4 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு மக்களவைத் தொகுதியும் கொண்டது.[12]
இராமநாதபுரம் மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளும், உறுப்பினர்களும்
தொகுதி | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|
பரமக்குடி (தனி) | டாக்டர் சி. முத்தையா | அதிமுக |
திருவாடாணை | சே. கருணாஸ் | அதிமுக |
ராமநாதபுரம் | டாக்டர் எம். மணிகண்டன் | அதிமுக |
முதுகுளத்தூர் | எஸ். பாண்டியன் | காங்கிரசு |
தீவுகள்
மாநிலத்திலேயே அதிக அளவில் தீவுகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளன. அவற்றில் சில:
- பாம்பன் தீவு
- அப்பா தீவு
- குருசடை தீவு
- முயல் தீவு
- முளித் தீவு
- தலையாரித் தீவு
- புள்ளிவாசல் தீவு
- உப்புத்தண்ணித் தீவு
ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலங்கள்
ஆன்மிகத் தலங்கள்
- இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்
- உத்தரகோசமங்கை
- திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் கோயில்
- திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனுறை வன்மீகநாதர் கோயில்
- திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோயில்
- ஓரியூர்
சுற்றுலாத் தலங்கள்
மேற்கோள்கள்
- ↑ http://www.thehindu.com/news/national/tamil-nadu/new-collector-assumes-charge/article8142617.ece
- ↑ www.tn.gov.in
- ↑ Ramanathapuram District : Census 2011 data
- ↑ இராமநாதபுரம் மாவட்டத்தின் வருவாய் கோட்டங்களும், வருவாய் வட்டங்களும் மற்றும் வருவாய் கிராமங்களும்
- ↑ மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள்
- ↑ கமுதி பேரூராட்சி
- ↑ அபிராமம் பேரூராட்சி
- ↑ தொண்டி பேரூரட்சி
- ↑ மண்டபம் பேரூராட்சி
- ↑ இராஜசிங்கமங்கலம் பேரூராட்சி
- ↑ இராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி அமைப்புகள்
- ↑ இராமநாதபுரம் மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளும்; மக்களவைத் தொகுதியும்