உள்ளடக்கத்துக்குச் செல்

உப்புத்தண்ணித் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உப்புத்தண்ணித் தீவு
புவியியல்
பரப்பளவு0.243575 km2 (0.094045 sq mi)
நிர்வாகம்
இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்இராமநாதபுரம்
வட்டம்இராமேசுவரம்

உப்புத் தண்ணித் தீவு (Uppu Tanni Tivu) என்பது மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள ஒரு தீவு ஆகும்.[1] இங்கு கிடைக்கும் ஊற்றுநீர் உப்புக் கரிப்பதால் தீவுக்கு இப்பெயர் வந்தது.[2] இத்தீவு தமிழ்நாட்டின் கடற்கரையில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது தமிழ்நாட்டின் ஒரு பகுதியான இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டத்துக்கு உட்பட்டது.

விளக்கம்

[தொகு]

இத்தீவானது தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 50 கி.மீ தொலைவிலும், வேம்பார் கிமாரத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. மனிதர் யாரும் வாழாக இத்தீவானது மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்காவின் ஒரு பகுதியாகும். இது தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. துறையினரின் அனுமதி இன்றி இங்கு யாரும் செல்லக்கூடாது. இத்தீவின் ஆக்கிரமிப்பு இனமான சீமைக் கருவேலம் மரங்கள் உள்ளன. அவற்றை வனத்துறை அகற்றி அதற்கு பதிலாக உள்ளூர் தாவர இனமான பூவரசு போன்றவற்றை நடும் பணியில் ஈடுபட்டு வருகிறது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. P. S. Ramakrishnan (2002). Traditional ecological knowledge for managing biosphere reserves in South and Central Asia. Oxford & IBH Pub. Co. p. 478. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8120415442, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-204-1544-7.
  2. சோமலெ, இராமநாதபுரம் மாவட்டம், 1972, பக்கம் 299, 300
  3. Uppu Tanni Tivu / Upputhanni Island
"https://ta.wikipedia.org/w/index.php?title=உப்புத்தண்ணித்_தீவு&oldid=4270784" இலிருந்து மீள்விக்கப்பட்டது