மண்டபம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மண்டபம்
மண்டபம்
இருப்பிடம்: மண்டபம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 9°17′N 79°07′E / 9.28°N 79.12°E / 9.28; 79.12ஆள்கூற்று : 9°17′N 79°07′E / 9.28°N 79.12°E / 9.28; 79.12
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராமநாதபுரம்
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1]
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[2]
மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் இ. ஆ. ப. [3]
மக்கள் தொகை 15 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


9 மீற்றர்கள் (30 ft)

மண்டபம் (ஆங்கிலம்:Mandapam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இராமநாதபுரத்திலிருந்து 38 கி.மீ. தொலைவில் மண்டபம் உள்ளது. மண்டபத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் மண்டபம் முகாம் (Mandapam Camp) ரயில் நிலையம் உள்ளது.[4]. இந்தியாவில் பெரிய மண்டபம் கடல் வாழ் உயிரினங்கள் காட்சியகம் இங்கு அமைந்துள்ளது.

பொருளாதாரம்[தொகு]

மண்டபத்தில் 1961ஆம் ஆண்டில் இந்திய-நார்வே திட்டம் ஏற்படுத்தப்பட்டது. சிறந்த மீன் பிடிக்கும் படகுகள் கட்டப்பட்டு மீன் பிடிக்கும் தொழில் இங்கு நடைபெறுகிறது. மீன் உணவு உற்பத்தி நிலையம் ஒன்றும் இங்கு உள்ளது.

கடல்வாழ் மீன்களின் ஆய்வுக்கூடம் உள்ளது. இதனருகில் கடல் வாழ் உயிர்கள் நிலையமும் (Aquarium), காட்சிக்கூடமும் (Museum) உள்ளன. மண்டபத்திற்கு அருகில் குருசடை தீவு உள்ளது. இது கல்விச் சுற்றுலாவிற்கு ஏற்ற இடமாக உள்ளது.

மண்டபத்திற்கும் இராமேஸ்வரத் தீவிற்கும் இடையிலுள்ள கடல் பகுதியில் 3 கி.மீ. நீளமுள்ள பாம்பன் பாலம் உள்ளது. மண்டபத்தையும் இராமேஸ்வரத் தீவையும் இணைக்கும் சாலைப் போக்குவரவிற்கான பாலம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

மண்டபத்தில் ஒரு பேருந்து நிறுத்தம்(Bus Stop), ஒரு தொடக்க நிலை மருத்துவமனை(Primary Health Centre), ஒரு சந்தை (Market), 20க்கும் மேற்பட்ட பலசரக்கு கடைகள்(Grocery shops), 15திற்கும் மேற்பட்ட தேனீர் கடைகள் (Tea shops & Bakeries)உள்ளது.

இங்கு 10 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் உள்ளனர்.

மண்டபத்தில் ஒரு காவல் நிலையம் உள்ளது. பத்திற்க்கும் மேற்பட்ட காவலர்கள் பணிபுரிகின்றனர்.

இங்கு ஒரு இரயில் நிலையம் உள்ளது.

ஒரு பேரூராட்சி செயல்படுகிறது.

இராமநாதபுரத்திலிருந்து மண்டபம் 38 கி.மீ. தூரம் உள்ளது.

மண்டபத்திலிருந்து பாம்பன் 5 கி.மீ. தூரம் உள்ளது.

மண்டபத்தை சுற்றியுள்ள ஊர்கள்[தொகு]

கிழக்கு நோக்கிய திசை[தொகு]

 # பாம்பன்
 # அக்காள்மடம்
 # முஹம்ம்தியார் புரம்
 # தங்கச்சிமடம்
 # இராமேஸ்வரம்

மேற்கு நோக்கிய திசை[தொகு]

  #மண்டபம் முகாம்
  #மரைக்காயர் பட்டிணம்
  #வேதாளை
  #சுந்தரமுடையான் (சீனியப்பா தர்ஹா)
  #அரியமான்
  #பிரப்பன் வலசை
  #உச்சிப்புளி
  #பெருங்குளம்
  #இராமநாதபுரம்

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 9°17′N 79°07′E / 9.28°N 79.12°E / 9.28; 79.12 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 9 மீட்டர் (29 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,799 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[6] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மண்டபம் மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரிக் கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. மண்டபம் மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்[தொகு]

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 4. http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=222&pno=302
 5. "Mandapam". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.
 6. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்டபம்&oldid=1968473" இருந்து மீள்விக்கப்பட்டது