போகலூர்
போகலூர் பேரூராட்சி | |||||||
— பேரூராட்சி — | |||||||
அமைவிடம் | 9°24′19″N 78°42′14″E / 9.405371°N 78.703823°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | இராமநாதபுரம் | ||||||
வட்டம் | போகலூர் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | சிம்ரன்சித் சிங் கக்லோன், இ. ஆ. ப [3] | ||||||
பேரூராட்சி தலைவர் | பா.கலையரசி | ||||||
சட்டமன்றத் தொகுதி | பரமக்குடி | ||||||
சட்டமன்ற உறுப்பினர் |
எச். முருகேசன் (திமுக) | ||||||
மக்கள் தொகை | 9,221 (2011[update]) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
குறியீடுகள்
|
போகலூர் (Bogalur) தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தின் போகலூர் வட்டத்தில் உள்ள போகலூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த ஒரு பேரூராட்சி ஆகும்.
போகலூர்
[தொகு]போகலூர் பரமக்குடி சட்டமன்றத் தொகுதிக்கும் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 9221 ஆகும். இவர்களில் பெண்கள் 4475 பேரும் ஆண்கள் 4746 பேரும் உள்ளனர்.
புவியியல் அமைப்பு
[தொகு]இவ்வூரின் அமைவிடம் 9.38°N 78.83°E ஆகும். கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 2 மீட்டர் (6 அடி) உயரத்தில் இருக்கின்றது.
வரலாறு
[தொகு]தென்தமிழ்நாட்டின் பிரிக்கப்படாத பழைய இராமநாதபுரம் மாவட்டத்தின் பெரும்பகுதியை ஆண்டவர்கள் சேதுபதிகள். இவர்கள் கி.பி 1501 முதல் இந்தியா விடுதலை பெற்ற காலம் வரை இப்பகுதியின் ஆட்சியாளர்களாகத் திகழ்ந்துள்ளனர். வங்கக்கடற்கரையின் அதிபதியாய் முதலில் புகலூரையும் (போகலூர்) பின்பு இராமநாதபுரத்தையும் தங்கள் தலைநகரமாக கொண்டு ஆட்சி நடத்தியள்ளனர்.
போகலூரை சேதுபதி மன்னர்கள் கி.பி.1501 முதல் கி.பி.1710 வரை சமார் 210 வருடங்கள் தலைநகராக கொண்டு ஆட்சிபுரிந்துள்ளனர்.
சிற்றூர்கள்
[தொகு]இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்:
- யாதவர்தெரு
- முஸ்லிம் தெரு
- சத்திரக்குடி
- நரியநேந்தால்
- அண்ணா நகர்
- விவேகானந்தபுரம்
- தென்றல் நகர்
- புலவர் தெரு
- அம்பேத்கர் நகர்
மருத்துவமனைகள்
[தொகு]- அரசு ஆரம்ப சுகாதார நிலையம், போகலூர்.
- அரசு சித்த மருத்துவமையம், போகலூர்.
- அரசு கால்நடை மருந்தகம், போகலூர்.
கல்வி நிலையங்கள்
[தொகு]- நூருல்லா முஸ்லிம் தொடக்கப் பள்ளி, போகலூர்
- மாவட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளி, மஞ்சூர், போகலூர்.
- ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, போகலூர்.
- ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சத்திரக்குடி.
- அரசு மேல்நிலைப்பள்ளி, சத்திரக்குடி, போகலூர்.
- பாஸ் மெட்ரிகுலேஷன் துவக்கப்பள்ளி,
- வாசன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி,
- மீனாட்சி மெட்ரிகுலேஷன்,
- மாடல் மெட்ரிகுலேஷன்
அரசு அலுவலகங்கள்
[தொகு]- ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.
- வருவாய் ஆய்வாளர் அலுவலகம்
- கிராம நிர்வாக அலுவலர்
- ஊராட்சி மன்ற அலுவலகங்கள்.
- தொடக்க வேளாண் கூட்டுரவு கடன் சங்கம்.
- தபால் நிலையம்.
- காவல் நிலையம்.
- இரயில் நிலையம்
வங்கிகள்
[தொகு]- பாரத ஸ்டேட் பேங்க்
- பாண்டியன் கிராம பேங்க்
- இராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு வங்கி.
திருத்தலங்கள்
[தொகு]- விநாயகர் திருக்கோயில், போகலூர்.
- பாலதண்டாயுதபானி திருக்கோயில், போகலூர்.
- ஈஸ்வரன் திருக்கோயில், போகலூர்.
- மங்களேஸ்வரி திருக்கோயில், போகலூர்.
- கண்ணபிரான் திருக்கோயில், போகலூர்.
- அம்மன் திருக்கோயில், போகலூர்.
- ஐயப்பன் திருக்கோயில், போகலூர்.
- கருப்பண்ணசுவாமி திருக்கோயில், போகலூர்.
- அய்யனார் திருக்கோயில், போகலூர்.
- முருகப்பெருமான் திருக்கோயில், சத்திரக்குடி.
- பள்ளிவாசல்,சத்திரக்குடி & போகலூர்.
சுற்றுலா தலங்கள்
[தொகு]- திருஉத்திரகோசமங்கை - 15 கி.மீ.
- நயினார்கோவில் - 15 கி.மீ.
- திருப்புல்லாணி - 25 கி.மீ.
- சேதுகரை - 30 கி.மீ.
- தேவிபட்டினம் - 30 கி.மீ.
- வாலிநோக்கம் - 38 கி.மீ.
- பாம்பன் பாலம் - 63 கி.மீ.
- இராமேசுவரம் - 75 கி.மீ.
- தனுஷ்கோடி - 88 கி.மீ.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.