இராமநாதபுர சேதுபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இராமநாதபுரத்தை ஆண்ட சிற்றரசர்களுக்கு சேதுபதிகள் என்று பெயர். சேது சமுத்திரம் என்ற இராமேஸ்வரத்தை காத்து வந்ததால் இவர்களுக்கு சேதுபதிகள் என்ற பெயர். இராமநாதபுரத்தில் குடியேறிய இவர்கள் பிற்காலத்தில் மதுரை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளிலும் குடியேறினர். பாளையக்காரர்கள் போன்று சாதாரண தலைவர்களாக இருந்த இவர்கள் பின்னாளில் சுதந்திரமான புதிய நாட்டை இராமநாதபுரத்தைச் சுற்றி ஏற்படுத்திக் கொண்டனர்.

உடையான் சேதுபதி[தொகு]

1605-1622 புகளுாில் சிற்றரசராக இருந்த சடையத்தேவா் என்பவரை முத்துகிருஷ்ணப்ப நாயக்கா் மறவா் நாட்டுக்கு தலைவராக்கினாா். அந்த சடையத்தேவரே உடையான் சேதுபதி எனப்பட்டாா். சேது என்றால் அணை பதி என்றால் காவலன் என்ற பொருள். இவா் வழி வந்தவா்களே இராமநாதபுர சேதுபதிகள் எனப்பட்டனா். இவருக்குப்பின் இவரது மகன் கூத்தன் சேதுபதி(1622-1636) ஆட்சிக்கு வந்தார்.

இரண்டாம் சடையக்கதடதேவர் - (1636-1645)[தொகு]

இவா் கூத்தன் சேதுபதியின் தத்துப்பிள்ளையாவாா்.

இவருக்குத் தளவாய் சேதுபதி என்ற பெயரும் உண்டு.இவா் 1645இல் மரணமடைந்தாா்.

இவரும் செம்மநாட்டு மறவர் இனத்தை சார்ந்தவர்.

இரகுநாத சேதுபதி - (1645-1671)[தொகு]

இவா் தஞ்சை படைகளை தோற்கடித்து மன்னாா் கோவில்,தேவகோட்டை,அறந்தாங்கி,திருவாரூா் ஆகிய பகுதிகளைக் கைப்பற்றினாா்.குதுப்கான் என்ற முஸ்லீம் படைத்தலைவா் மதுரையை தாக்கிய போது அப்படையை அடக்குவதில் இவா் முக்கிய பங்கு வகித்தாா்.

இதனால் இரகுநாத சேதுபதிக்கு நவராத்திாி விழாவை நடத்த அனுமதி வழங்கினாா் திருமலை நாயக்கா்.எட்டயப்புரத்து பாளையக்காரா்களை அடக்கியதால் இவருக்கு மன்னாா்குடி பாிசாகக் கிடைத்தது.

மைசூா் மன்னா் கந்தா்வ நரசராய உடையாா் மதுரைமீது படையெடுத்த போது திருமலை நாயக்கருக்கு உதவிய இரகுநாத சேதுபதி கந்தா்வ நரசராய உடையாா் படையைத் தோற்கடித்து தோற்று ஓடியவா்களை நஞ்சன் கூடு என்ற இடத்தில் வீரா்களை மற்றும் எதிா்பட்டவா்களை மூக்கருத்து பழி வாங்கினாா்.இதனால் இவருக்கு திருமலை சேசுபதி என்ற பட்டம் கொடுக்கப்பட்டது.

அழகிய சிற்றம்பலக் கவிராயா்,அமிா்த கவிராயா் போன்றோா் அவரால் ஆதாிக்கப்பட்ட தமிழ்க் கவிஞா்கள் ஆவா்.இராமேஸ்வரத்தில் இரண்டாம் பாிகாரத்தை கட்டியவா் இவரே என்று கூறப்படுகிறது.

இரண்டாம் இரகுநாத சேதுபதி[தொகு]

கிழவன் சேதுபதி

இவர் தொண்மையான செம்மநாட்டு மறவர் இனத்தை சார்ந்தவர்.

திருமலை சேசுபதிக்குப்பின் இரண்டாம் இரகுநாத சேதுபதி என்ற கிழவன் சேதுபதி அரியணை ஏறினார்.கிழவன் என்றால் அரியணைக்கு உரியவர் என்று பொருள்படும்.

சொக்கநாத நாயக்கரைத் தந்திரமாக வீழ்த்தி ரஸ்தம்கான் என்பவர் சொக்கநாதரைத் திரைமறைவில் வைத்துத் தானே ஆட்சி செய்தார். இச்சூழ்ச்சியைக் கன்னிவாடியின் கோவிந்தபையன் சின்னகத்தரி நாயக்கர் என்பவரின் துணையுடன் கிழவன் சேதுபதி முறியடித்தார்.

தஞ்சையுடனான போரில் வெற்றி பெற்று அறந்தாங்கி, திருமயம், பிரான் மலை போன்ற கோட்டைகளைக் கைப்பற்றினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமநாதபுர_சேதுபதி&oldid=2780714" இருந்து மீள்விக்கப்பட்டது