ஏ. இலட்சுமணசுவாமி முதலியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
A. Lakshmanaswami Mudaliar .jpg

மருத்துவர் ஆற்காடு இலட்சுமணசுவாமி முதலியார் B.A., M.D.,D.Sc., F.R.C.O.G., F.A.C.S. (18871974) சிறந்த கல்வியாளர். இவர் எழுதிய மகப்பேறு மருத்துவப் புத்தகம் இன்றளவும் தமிழ்நாட்டு மருத்துவ மாணவர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆற்காடு இராமசாமி முதலியாரும் இவரும் இரட்டையர்கள். இவரே மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் நீண்டகாலம் துணைவேந்தராகவும் (27 ஆண்டுகள்) மெட்ராஸ் மருத்துவக்கல்லூரியில் முதல்வராகவும் பணியாற்றியவர்.

உலக சுகாதார மையத்தின் செயற்குழுத் தலைவராக இவர் 1949 மற்றும் 1950 ஆம் ஆண்டுகளில் செயல்பட்டார். எட்டாவது உலக சுகாதாரக் கூடுகையின் துணைத் தலைவராக 1955 ஆம் ஆண்டிலும் 14 ஆவது உலக சுகாதாரக் கூடுகையின் தலைவராக 1955 ஆம் ஆண்டிலும் செயற்பட்டார்.

கிராமப்புற மருத்துவ சேவை வரலாற்றில் 1959 ஆம் ஆண்டில் முதலியார் தலைமையிலான கமிட்டி அளித்த பரிந்துரைகள் குறிப்பிடத்தக்கவை. [1]

இந்திய அரசு இவருக்கு, 1963 ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.[2]

பாடநூல்[தொகு]

  • Clinical Obstetrics முதல் பதிப்பு 1938; மேனன் அவர்களால் பின்னர் மறுதிருத்தம் செய்யப்பட்டது 10th edition, ISBN 81-250-2870-6

மேற்கோள்கள்[தொகு]

  • S. Muthiah, Achievements in double The Hindu, Oct 13, 2003 accessed at[1] August 3, 2006
  • The Second Decade, 50 years of WHO in SE Asia, accessed at[2]August 3, 2006
  • Dr. Vedagiri Shanmugasundaram, Life and Times of the Great Twins: Dr. Sir. A. Ramasamy and Dr. Sir. A. Lakshmanasamy, The Modern Rationalist, November 2004, accessed at[3] August 3, 2006
  • Bio details from honorary degree at Hong Kong University[4]
  • Bio details from honorary doctorate of civil laws degree at Oxford University