தேசிய நெடுஞ்சாலை 2 (இந்தியா)
Appearance
தேசிய நெடுஞ்சாலை 2 (NH 2)அல்லது என்.எச்2 என்பது, இந்தியாவின் தில்லி நகரையும், மேற்கு வங்கத்தில் உள்ள கொல்கத்தா நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். 1465 கிலோமீட்டர்கள் நீளமான இச் சாலை ஆறு மாநிலங்களூடாகச் செல்கிறது. இதில் தில்லி 12கிமீ நீளப் பகுதியையும், அரியானா 74 கிமீ நீளப் பகுதியையும், உத்தரப் பிரதேசம் 752 கிமீ நீளப் பகுதியையும், பீகார் 202 கிமீ ஐயும், ஜார்க்கண்ட் 190 கிமீ, மேற்கு வங்காளம் 235 கிமீ நீளத்தையும் தம்முள் அடக்கியுள்ளன. [1]
இரண்டு மாநிலத் தலைநகரங்களூடாகச் செல்லும் இந்த நெடுஞ்சாலை இந்திய அரசின் தங்கநாற்கரச் சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Top 10 Best Flyovers in India. Walkthroughindia.com. Retrieved on 2013-12-06.