2024 இந்தியப் பொதுத் தேர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இந்தியப் பொதுத் தேர்தல், 2024 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
2024 இந்தியப் பொதுத் தேர்தல்

← 2019 19 ஏப்ரல் – 1 சூன் 2024 2029 →

மக்களவையின் அனைத்து 543 இடங்களுக்கும்
அதிகபட்சமாக 272 தொகுதிகள் தேவைப்படுகிறது
 

தலைவர் நரேந்திர மோதி மல்லிகார்ச்சுன் கர்கெ
கட்சி பா.ஜ.க காங்கிரசு
கூட்டணி தே.ச.கூ. இ.தே.வ.உ.கூ.
தலைவரான
ஆண்டு
2013 2022
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
வாரணாசி போட்டியிடவில்லை
முந்தைய
தேர்தல்
37.7%, 303 தொகுதிகள் 19.49%, 52 தொகுதிகள்
தற்போதுள்ள
தொகுதிகள்
295 51
தேவைப்படும்
தொகுதிகள்
221

தொகுதிகளின் வரைபடம். இந்த தேர்தலில் ஒவ்வொரு கட்சியின் மொத்த வாக்குப் பங்கின் விகிதாச்சாரத்தில் மொத்த இடங்கள் தீர்மானிக்கப்படுவதில்லை, மாறாக ஒவ்வொரு தொகுதியிலும் அந்த கட்சியின் வேட்பாளர் பெரும் வாக்குகளைக் கொண்டு வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.

நடப்பு பிரதமர்

நரேந்திர மோதி
பா.ஜ.க



2024 இந்தியாவின் பொதுத் தேர்தல் பதினெட்டாவது மக்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2024 ஏப்ரல் 19 முதல் 2024 சூன் 1 வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது.[1] ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள இத்தேர்தலின் முடிவுகள் 2024 சூன் 4 அன்று அறிவிக்கப்படும்.

ஏறத்தாழ 97 கோடி மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள இந்த தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப் பெரிய தேர்தல் நடப்பாகும். இந்தத் தேர்தலில் ஏறத்தாழ 10 இலட்சம் வாக்குச் சாவடிகளில் 5.5 இலட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஏறத்தாழ ஒன்றரை கோடி தேர்தல் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்கள் தேர்தல் நடத்தையை நிர்வகிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் இந்தப் பொதுத் தேர்தலுடன் ஒரே நேரத்தில் நடத்தப்பட உள்ளது.

பின்னணி

பதினேழாவது மக்களவையின் பதவிக்காலம் 16 சூன் 2024 அன்று முடிவடைகிறது.[2] முந்தைய பொதுத் தேர்தல் 2019 ஏப்ரல்-மே மாதங்களில் நடத்தப்பட்டன. தேர்தலுக்குப் பிறகு, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, தொடர்ந்து இரண்டாவது முறையாக நரேந்திர மோதி தலைமையில் நடுவண் அரசை அமைத்தது.[3]

தேர்தல் முறை

இந்திய அரசியலமைப்பின் பிரிவு 83 இன் படி ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்களவைக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். அனைத்து 543 தொகுதிகளிலிருந்தும் மக்களவைக்கு ஒவ்வொரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஒவ்வொரு தொகுதியிலும் அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் அந்த குறிப்பிட்ட தொகுதியின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.[4] 2020 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அரசியலமைப்பின் 104வது திருத்தம் ஆங்கிலோ-இந்திய சமூகத்திற்கு மக்களவையில் ஒதுக்கப்பட்டிருந்த இரண்டு இடங்களை ரத்து செய்தது.[5]

இந்த தேர்தலில் 18 வயதுதுக்கு மேற்பட்ட இந்தியக் குடிமக்கள் வாக்களிக்க தகுதியானவர்கள். தகுதியான வாக்காளர்கள் குறிப்பிட்ட தொகுதியில் குடியிருத்தல் அல்லது வாக்களிக்கப் பதிவு செய்திருத்தல் வேண்டும். தேர்தல் நாளின் போது வாக்களிக்க இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை அல்லது செல்லுபடியாகும் மற்ற அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்று கட்டாயமாக இருக்க வேண்டும்.[6] குறிப்பிட்ட குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட சிலருக்கு மற்றும் சிறையிலிருப்பவர்களுக்கு வாக்களிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வேறு நாட்டின் குடியுரிமை வைத்திருக்கும் எவராலும் வாக்களிக்க இயலாது.[7] இந்த தேர்தலில் ஏறத்தாழ 96.8 கோடி மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.[8][9][10]

மார்ச் 2024 இல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பயன்பாட்டை தடை செய்யவும், காகித வாக்குச்சீட்டுகள் மற்றும் கையில் எண்ணும் முறைக்கு மாறவும் உத்தரவு பிறப்பிக்குமாறு காங்கிரசு கட்சி தாக்கல் செய்த மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.[11] இந்தத் தேர்தலில் ஏறத்தாழ 10 இலட்சம் வாக்குச் சாவடிகளில் 5.5 இலட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஏறத்தாழ ஒன்றரை கோடி தேர்தல் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்கள் தேர்தல் நடத்தையை நிர்வகிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.[12]

தேர்தல் அட்டவணை

2024 மக்களவை தேர்தல் அட்டவணை
தேர்தல் செயல்பாடு கட்டம்
I II III IV V VI VII
அறிவிக்கை நாள் 20 மார்ச் 28 மார்ச் 12 ஏப்ரல் 18 ஏப்ரல் 26 ஏப்ரல் 29 ஏப்ரல் 7 மே
வேட்பு மணுதாக்கல் கடைசி நாள் 27 மார்ச் 4 ஏப்ரல் 19 ஏப்ரல் 25 ஏப்ரல் 3 மே 6 மே 14 மே
வேட்புமணு சரிபார்த்தல் 28 மார்ச் 5 ஏப்ரல் 20 ஏப்ரல் 26 ஏப்ரல் 4 மே 7 மே 15 மே
மணுக்களைத் திரும்ப பெறக் கடைசி நாள் 30 மார்ச் 8 ஏப்ரல் 22 ஏப்ரல் 29 ஏப்ரல் 6 மே 9 மே 17 மே
தேர்தல் நாள் 19 ஏப்ரல் 26 ஏப்ரல் 7 மே 13 மே 20 மே 25 மே 1 சூன்
வாக்கு எண்ணிக்கை 4 சூன்
தொகுதிகளின் எண்ணிக்கை 101 12 87 12 95 96 49 57 57
கட்டம்-வாரியாக ஒவ்வொரு மாநிலங்களின் தேர்தல் தொகுதிகள்
மாநிலம்/ஒன்றியம் மொத்தத்

தொகுதிகள்

தேர்தல் தேதிகளும் தொகுதிகளின் எண்ணிக்கையும்
கட்டம் 1 கட்டம் 2 கட்டம் 3 கட்டம் 4 கட்டம் 5 கட்டம் 6 கட்டம் 7
19 ஏப்ரல் 26 ஏப்ரல் 07 மே 13 மே 20 மே 25 மே 1 சூன்
ஆந்திரப் பிரதேசம் 25 25
அருணாசலப் பிரதேசம் 2 2
அசாம் 14 5 5 4
பீகார் 40 4 5 5 5 5 8 8
சத்தீசுகர் 11 1 3 7
கோவா 2 2
குசராத்து 26 26
அரியானா 10 10
இமாச்சலப் பிரதேசம் 4 4
சார்க்கண்டு 14 4 3 4 3
கருநாடகம் 28 14 14
கேரளம் 20 20
மத்தியப் பிரதேசம் 29 6 6[a] 9[a] 8
மகாராட்டிரம் 48 5 8 11 11 13
மணிப்பூர் 2 1 12[b] 12[b]
மேகாலயா 2 2
மிசோரம் 1 1
நாகாலாந்து 1 1
ஒடிசா 21 4 5 6 6
பஞ்சாப் 13 13
இராசத்தான் 25 12 13
சிக்கிம் 1 1
தமிழ்நாடு 39 39
தெலங்காணா 17 17
திரிபுரா 2 1 1
உத்தரப் பிரதேசம் 80 8 8 10 13 14 14 13
உத்தராகண்டம் 5 5
மேற்கு வங்காளம் 42 3 3 4 8 7 8 9
அந்தமான் நிக்கோபார் தீவுகள் 1 1
சண்டிகர் 1 1
தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூ 2 2
தில்லி 7 7
சம்மு காசுமீர் 5 1 1 1 1 1
இலடாக்கு 1 1
இலட்சத்தீவுகள் 1 1
புதுச்சேரி 1 1
தொகுதிகள் 543 101 12 87 12 95 96 49 57 57
கட்ட முடிவில் மொத்தத் தொகுதிகள் 101 12 189 285 380 429 486 543
கட்ட முடிவில் முடிவான மொத்த தொகுதிகள் % 18.69 34.80 52.48 69.98 79.01 89.50 100
  1. 1.0 1.1 பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரின் மரணம் காரணமாக மத்தியப் பிரதேசத்தில் உள்ள பெதுல் தொகுதியில் தேர்தல் 26 ஏப்ரல் 2024 (கட்டம் 2) இருந்து 7 மே 2024 ஆக (கட்டம் 3) மாற்றப்பட்டது.[13]
  2. 2.0 2.1 மணிப்பூரில் உள்ள வெளி மணிப்பூர் தொகுதியில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது.[14]

கட்சிகள் மற்றும் கூட்டணிகள்

தேசிய அளவிலான

      தேசிய ஜனநாயகக் கூட்டணி

      இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி

  கூட்டணிக் கட்சிகளுக்கிடையேயான போட்டி

பிற கட்சிகள்/கூட்டணிகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "2024 இந்தியாவின் பொதுத் தேர்தல்". இந்திய தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 1 April 2024.
  2. "Terms of the Houses". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 7 March 2022.{{cite web}}: CS1 maint: url-status (link)
  3. "Narendra Modi sworn in as Prime Minister for second time". Tribuneindia News Service. 30 May 2019. https://www.tribuneindia.com/news/archive/nation/narendra-modi-sworn-in-as-prime-minister-for-second-time-780564. 
  4. "The Constitution of India Update" (PDF). Government of India. பார்க்கப்பட்ட நாள் 4 February 2021.
  5. "புதிய சட்ட திருத்த மசோதா: முடிவுக்கு வரும் ஆங்கிலோ இந்தியன் எம்.பி.க்கள் கோட்டா!" (in ta). https://tamil.samayam.com/latest-news/india-news/bill-proposes-extension-of-sc-st-quota-and-not-the-anglo-indian-community/articleshow/72441861.cms. 
  6. "Lok Sabha Election 2019 Phase 3 voting: How to vote without voter ID card". Business Today. 23 April 2019. Archived from the original on 24 May 2019.
  7. "General Voters". Systematic Voters' Education and Electoral Participation. Archived from the original on 4 January 2019. பார்க்கப்பட்ட நாள் 4 January 2019.
  8. "India elections 2024: Vote to be held in seven stages". BBC. 16 March 2024. https://www.bbc.com/news/world-asia-india-68573277. 
  9. "Date set for largest democratic election in human history". CNN. 16 March 2024. https://www.cnn.com/2024/03/16/india/india-election-date-intl/index.html. 
  10. "India's 2024 General Election: What to Know". The New York Times. 16 March 2024. https://www.nytimes.com/2024/03/16/world/asia/india-2024-election.html. 
  11. "Can the vote be rigged? Ahead of India election, old debate gets new life". Al Jazeera. 29 March 2024. https://www.aljazeera.com/news/2024/3/29/soul-of-the-king-can-indias-coming-elections-be-rigged. 
  12. Jacinto, Leela (13 April 2024). "India's mammoth elections: Nearly a billion voters, 44 polling days". France 24. https://www.france24.com/en/asia-pacific/20240413-india-s-mammoth-elections-nearly-a-billion-voters-44-polling-days. 
  13. "After BSP candidate death, polls in Madhya Pradesh's Betul to be held on May 7". 11 April 2024. https://timesofindia.indiatimes.com/india/after-bsp-candidate-death-polls-in-madhya-pradeshs-betul-to-be-held-on-may-7/articleshow/109205907.cms. 
  14. "Violence-Hit Outer Manipur Lok Sabha Seat To Vote In 2 Phases". ABP news. 18 April 2024. https://news.abplive.com/elections/outer-manipur-lok-sabha-seat-violence-vote-in-two-phases-first-phase-check-dates-1680979.