இந்திய மதச்சார்பற்ற முன்னணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய மதச்சார்பற்ற முன்னணி
சுருக்கக்குறிISF
தலைவர்நெளசாத் சித்திக்
நிறுவனர்அப்பாசு சித்திக்
தொடக்கம்21 சனவரி 2021
இ.தே.ஆ நிலைஅங்கீகாரம் பெறவில்லை
கூட்டணிசன்ஞ்சுக்தா மோர்ச்சா (2021)
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(மேற்கு வங்காள சட்டமன்றம்)
1 / 294
இந்தியா அரசியல்

இந்திய மதச்சார்பற்ற முன்னணி (Indian Secular Front) என்பது மேற்கு வங்க அரசியல் கட்சியாகும். இது மேற்கு வங்காள அரசியல்வாதி அப்பாஸ் சித்திக்யால் ஹூக்ளி மாவட்டத்தில் தோற்றுவிக்கப்பட்டது.[1]

வரலாறு[தொகு]

இந்த கட்சி 2021 மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலுக்கு[2] முன்னர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு[3] எதிராக இடது முன்னணி மற்றும் இந்திய தேசிய காங்கிரசு[4] தலைமையிலான சஞ்சுக்தா மோர்ச்சா[4] அல்லது மஹாஜோத் கட்சி கூட்டணியில் இணைந்து செயல்பட்டது. இக்கட்சி 2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் 38 இடங்களில் போட்டியிட்டு 1 இடத்தில் வெற்றி பெற்றது.[5] பீகாரைச் சார்ந்த ராஷ்டிரிய மதச்சார்பற்ற மஜ்லிஸ் கட்சியின் சின்னத்தில் இக்கட்சி இத்தேர்தலில் போட்டியிட்டது. 2021 தேர்தலுக்குப் பின்னர், மேற்கு வங்க மாநில காங்கிரசு தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்திரி, இந்திய மதச்சார்பற்ற முன்னணியுடனான கூட்டணியை முறிந்ததாக அறிவித்தார்.[6]

தேர்தல் செயல்பாடு[தொகு]

இந்திய மதச்சார்பற்ற முன்னணி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இந்திய தேசிய காங்கிரசுடன் சஞ்சுக்தா மோர்ச்சா என்ற கூட்டணியில் கூட்டணியில் இணைந்து 2021 மேற்கு வங்கத் தேர்தலைச் சந்தித்தது.

மாநில சட்டப் பேரவைத் தேர்தல்[தொகு]

மேற்கு வங்காளம் சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வாக்கு விகிதம்
2021
1.35%
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்
ஆண்டு கட்சித் தலைவர் போட்டியிட்ட இடங்கள் வெற்றிப் பெற்ற இடங்கள் மாற்றம் வாக்கு விகிதம் முடிவு
2021 அப்பாசு சித்திக்[7] 32[8] 1 1 1.35% சிறுபான்மை

மேற்கோள்கள்[தொகு]

  1. News, NDTV (Jan 21, 2021). "Want To Be Kingmaker": Muslim Preacher Announces Party For Bengal Polls". {{cite web}}: |last= has generic name (help)
  2. Wire.in, The (28 Feb 2021). "Bengal: As Left and Congress Ally With Muslim Cleric's Party, Will BJP Be the Winner?".{{cite web}}: CS1 maint: url-status (link)
  3. "West Bengal: In Left-Congress Brigade Ground Rally, ISF Emerged as the Biggest Mobiliser". The Wire. பார்க்கப்பட்ட நாள் 2021-03-02.
  4. 4.0 4.1 India, Outlook (February 28, 2021). "With Brigade Rally, Left-Congress-ISF’s ‘Sanyukta Morcha’ Kicks Of Bengal Poll Campaign". Outlook.India. https://www.outlookindia.com/photos/photoessay/with-brigade-rally-left-congress-isfs-sanyukta-morcha-kicks-of-bengal-poll-campaign/2628. 
  5. "30-seat deal with Left: ISF cleric Abbas Siddiqui". www.telegraphindia.com. பார்க்கப்பட்ட நாள் 2021-03-02.
  6. "Bengal Congress chief Adhir Chowdhury does not want ISF as an ally in future - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-17.
  7. "ISF to fight polls on borrowed symbol". Millennium Post. 18 March 2021. பார்க்கப்பட்ட நாள் 29 March 2021.
  8. "West Bengal General Legislative Election 2021". Election Commission of India. 21 June 2021. பார்க்கப்பட்ட நாள் 8 January 2022.