உள்ளடக்கத்துக்குச் செல்

கோண்ந்வானா கணதந்திர கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோண்ந்வானா கணதந்திர கட்சி
சுருக்கக்குறிGGP
நிறுவனர்கீரா சிங் மார்கம்
தொடக்கம்13 சனவரி 1991 (33 ஆண்டுகள் முன்னர்) (1991-01-13)
தலைமையகம்திவார்தா கிராமம், தேக், காத்கோரா, கோர்பா மாவட்டம், சத்தீசுகர்
கொள்கைகோண்டு மக்கள், சிறுபான்மையினர் நலம்
நிறங்கள்     ஊதா
இ.தே.ஆ நிலைபதிவு பெற்ற அங்கீகாரம் பெறாத கட்சி[1]
தேசியக் கூட்டுநர்கீரா சிங் மார்கம்
தேர்தல் சின்னம்
இந்தியா அரசியல்

கோண்ந்வானா கணதந்திர கட்சி (Gondwana Gantantra Party) என்பது கீரா சிங் மார்க்கம் என்பவரால் நிறுவப்பட்ட இந்தியாவில் உள்ள ஒரு மாநிலக் கட்சியாகும்.[2][3] இதனுடைய முதன்மையாக நோக்கம் பழங்குடி சமூகம் மற்றும் அதன் அரசியல் மேம்பாடாகும்.[4][5][6]

வரலாறு

[தொகு]

கோண்ந்வானா கணதந்திர கட்சியானது 1991ஆம் ஆண்டு கோண்டு மக்களின் உரிமைகளுக்காக வாதிடவும், மத்திய இந்தியாவில் கோண்ட்வானா என்ற தனி இந்திய மாநிலத்தை நிறுவவும் உருவாக்கப்பட்டது.

தேர்தல்கள்

[தொகு]

உத்தரப்பிரதேசத்தில் 2002-ல் மாநிலச் சட்டப் பேரவைதேர்தலில் கோண்ட்வானா கணதந்திர கட்சி 8 வேட்பாளர்களை நிறுத்தியது. இவர்கள் மொத்தமாக 11,262 வாக்குகளைப் பெற்றனர்.

மத்தியப் பிரதேசத்தின் மாநிலச் சட்டப் பேரவைத் தேர்தலில்[7] 2003ஆம் ஆண்டில் 61 வேட்பாளர்களை நிறுத்தியது. இவர்கள் 5,12,102 வாக்குகளைப் பெற்றனர். மூவர் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சத்தீசுகர் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் 2003ஆம் ஆண்டில் 41 பேர் போட்டியிட்டனர். ஆனால் யாரும் தேர்ந்தெடுக்கப்படாத போதிலும் இக்கட்சி மொத்தத்தில் 1,56,916 வாக்குகளைப் பெற்றது.

2004 இந்தியப் பொதுத் தேர்தலில் மத்தியப் பிரதேசம், சத்தீசுகர், பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராட்டிராவில் போட்டியிட்டது.[8][9][10]

சமீபத்திய வளர்ச்சிகள்

[தொகு]

2018 மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் கோண்ந்வானா கணதந்திரக் கட்சி சமாஜ்வாதி கட்சியுடன் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை அமைத்தது.[11]

மேற்கோள்

[தொகு]
  1. "List of Political Parties and Election Symbols main Notification Dated 13.04.2018" (PDF). India: Election Commission of India. 2018. பார்க்கப்பட்ட நாள் 24 July 2018.
  2. "गोंगपा प्रमुख हीरा सिंह मरकाम ने कहा अगर गठबंधन हुआ तो कांग्रेस से ही". Dainik Bhaskar (in இந்தி). 2018-08-14. பார்க்கப்பட்ட நாள் 2020-08-09.
  3. "Hira Singh Markam Gondwana Congress Party Candidate 2018 विधानसभा चुनाव परिणाम Pali-tanakhar". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2020-08-09.
  4. "मध्यप्रदेश: कांग्रेस से गठबंधन की अटकलों के बीच गोंगपा की 90 सीटों पर चुनाव लड़ने की घोषणा, बसपा का रुख साफ नहीं". Dainik Bhaskar (in இந்தி). 2018-09-06. பார்க்கப்பட்ட நாள் 2020-08-09.
  5. "Gondwana Gantantra Party Hindi News, Gondwana Gantantra Party Samachar, Gondwana Gantantra Party ख़बर, Breaking News on Patrika". Patrika News (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2020-08-09.
  6. "Will contest Chhattisgarh, MP polls with Samajwadi Party; tie-up with Congress unlikely: Gondwana party chief". hindustantimes.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-09.
  7. "Gondwana Gantantra Party: Latest News & Videos, Photos about Gondwana Gantantra Party | The Economic Times". The Economic Times. பார்க்கப்பட்ட நாள் 2020-08-09.
  8. "छत्तीसगढ़ में गोंडवाना गणतंत्र पार्टी ने कांग्रेस को दिया बड़ा झटका". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2020-08-09.
  9. "Gondwana gantantra party ggp | Latest News on Gondwana-gantantra-party-ggp | Breaking Stories and Opinion Articles". Firstpost. பார்க்கப்பட்ட நாள் 2020-08-09.
  10. "गोंडवाना गणतंत्र पार्टी सभी 11 सीट पर उतारेगी प्रत्याशी". Nai Dunia (in இந்தி). 2019-03-19. பார்க்கப்பட்ட நாள் 2020-08-09.
  11. "SP, Gondwana Gantantra Party Join Hands in MP to Put Congress-led Mahagatbandhan in Further Trouble". https://www.news18.com/news/politics/sp-gondwana-gantantra-party-join-hands-in-mp-to-put-congress-led-mahagatbandhan-in-further-trouble-1893489.html. 

வெளி இணைப்புகள்

[தொகு]

முகநூலில் கோண்ந்வானா கணதந்திர கட்சி