ஜோரம் மக்கள் இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோரம் மக்கள் இயக்கம்
சுருக்கக்குறிZPM
தலைவர்லால்துகோமா
தலைவர்லல்லியான்சாவ்தா
தொடக்கம்2017 (பதிவு ஆண்டு 2019)
தலைமையகம்அய்சோல், மிசோரம்
இளைஞர் அமைப்புதலாய்
பெண்கள் அமைப்புசோனு
நிறங்கள்மஞ்சள்
இ.தே.ஆ நிலைபதிவு செய்யப்பட்ட கட்சி
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
0 / 543
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
0 / 245
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(மிசோரம் சட்டமன்றம்)
6 / 40
இந்தியா அரசியல்

ஜோரம் மக்கள் இயக்கம் (Zoram People's Movement) வடகிழக்கு இந்தியாவில் உள்ள மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மிசோ தேசிய முன்னணி அல்லாத 7 அரசியல் கட்சிகளின் கூட்டணி ஆகும். இக்கூட்டணியில் ஜோரம் தேசியவாத கட்சி, ஜோரம் அதிகாரப் பரவலாக்கக் கட்சி, ஜோரம் மறுமலர்ச்சி முன்னணி, மிசோரம் மக்கள் கட்சி, மிசோரம் மக்கள் மாநாடு கட்சி போன்ற எழு மாநிலக் கட்சிகள் இருந்தது. இக்கட்சிகள் ஒன்றிணைந்து ஜோரம் மக்கள் இயக்கம் எனும் பெயரில் இயங்கியது. 2018 மிசோரம் சட்டமன்றத் தேர்தலில் ஜோரம் மக்கள் இயக்கம் 8 தொகுதிகளை வென்றது.[1] 2019-ஆம் ஆண்டில் மிசோரம் மக்கள் மாநாடு கட்சி இந்த இயக்கத்திலிருந்து விலகியது.[2] எனவே ஜோரம் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியானது.

2020ஆம் ஆண்டில் பல காரணங்களால் சில கட்சிகள் இவ்வியக்கத்திலிருந்து விலகியது. ஜோரம் தேசியவாத கட்சி சீரமைக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோரம்_மக்கள்_இயக்கம்&oldid=3757562" இருந்து மீள்விக்கப்பட்டது