உள்ளடக்கத்துக்குச் செல்

சத்தீசுகர் ஜனதா காங்கிரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்தீசுகர் ஜனதா காங்கிரசு
சுருக்கக்குறிJCC
தலைவர்அமித் ஜோகி
நிறுவனர்அஜித் ஜோகி
பொதுச் செயலாளர்மகேசு தேவாங்கன் சந்தோசு குப்தா
தொடக்கம்23 சூன் 2016 (7 ஆண்டுகள் முன்னர்) (2016-06-23)
பிரிவுஇந்திய தேசிய காங்கிரசு
தலைமையகம்ராய்பூர், சத்தீசுகர்- 492001.
நிறங்கள்இளஞ்சிவப்பு  
இ.தே.ஆ நிலைமாநிலக் கட்சி
கூட்டணிஇந்தியப் பொதுவுடைமைக் கட்சி + பகுஜன் சமாஜ் கட்சி + ஜகாச (2018-19)
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(சத்தீசுகர் சட்டமன்றம்)
2 / 90
இந்தியா அரசியல்

ஜனதா காங்கிரசு சத்தீஸ்கர் (Janta Congress Chhattisgarh)[1] (அல்லது சத்தீசுகர் ஜனதா காங்கிரசு[2]) என்பது இந்திய மாநிலமான சத்தீசுகரில் உள்ள ஒரு அரசியல் கட்சியாகும். கட்சி விரோத நடவடிக்கைகள் மற்றும் அந்தகர் இடைத்தேர்தல் பிரச்சனைகளால் இந்தியத் தேசிய காங்கிரசிலிருந்து ஜோகி மற்றும் அவரது மகன் அமித் ஆகியோர் நீக்கப்பட்ட , முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியால் இக்கட்சி நிறுவப்பட்டது. அமித் ஜோகி ஆறு ஆண்டுகளுக்குக் காங்கிரசிலிருந்து வெளியேற்றப்பட்டார்.[3][4][5]

கபீர்தாம் மாவட்டத்தின் தாதாபூர் கிராமத்தில் கட்சியைத் தொடங்கிய அஜித் ஜோகி, சத்தீசுகர் முதல்வர் ரமன் சிங்கிற்கு நேரடியாகச் சவால் விடுத்தார்.[2][6]

சத்தீசுகர் சட்டசபை தேர்தல் 2018[தொகு]

2018ஆம் ஆண்டு நடைபெற்ற சத்தீசுகர் சட்டப் பேரவைத் தேர்தலில் ஜனதா காங்கிரசு சத்தீசுகரும்பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து போட்டியிட முடிவு செய்தன. இதன்படி ஜகாச 55 இடங்களிலும், பஜக 35 இடங்களிலும் போட்டியிட்டன. இந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அஜித் ஜோகியை அறிவித்தது. பின்னர் இந்த கூட்டணிக்கு இந்தியப் பொதுவுடைமைக் கட்சியும் ஆதரவு அளித்தது. இக்கூட்டணி மாநிலத்தின் இரு முக்கிய கட்சிகளான பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்தியத் தேசிய காங்கிரசு ஆகியவற்றின் கொள்கைகளைக் கடுமையாகக் கண்டித்து சத்தீசுகர் மக்களுக்கு ஒரு மூன்றாவது முன்னணி வடிவத்தில் ஒரு புதிய தளத்தை வழங்கியது. பத்திர காகிதத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அஜித் ஜோகி, "வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் சிறைக்குச் செல்லவும் தயார்" என்று கூறினார். இருப்பினும் ஜகாச 5 இடங்களையும், இதன் கூட்டணிக் கட்சியான பஜக 2 இடங்களையும் மட்டுமே வெல்ல முடிந்தது.

மேற்கோள்கள்[தொகு]