"உருசியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (நாட்டுப்பண்)
சி
}}
 
'''உருசியா''' (''Russia'') அல்லது '''இரசியா''' என்பது வடக்கு [[யூரேசியா]]வில் அமைந்துள்ள உலகிலேயே நிலப்பரப்பில் யாவற்றினும் மிகப்பெரிய நாடுநாடாகும்.<ref name=britannica>{{cite web|url=http://www.britannica.com/EBchecked/topic/513251/Russia|title=Russia|publisher=Encyclopædia Britannica|accessdate=31 January 2008}}</ref> இந்நாட்டின் முறைப்படியான பெயர் '''உருசியக் கூட்டமைப்பு''' என்பதாகும். தமிழில் இரசியா, இரச்சியா என்றும், ருஷ்யா என்னும் பெயர்களாலும் குறிக்கப்படுவது உண்டு.
உருசிய மொழியில் இது Росси́йская Федера́ция (''Rossiyskaya Federatsiya'' அல்லது ''ரசீஸ்க்கய ஃபெதராத்சியா'') அல்லது சுருக்கமாக '''உருசியா''' (உருசிய மொழியில்: Росси́я, ஆங்கில ஒலிபெயர்ப்பு: ''Rossiya'' அல்லது ''Rossija'') என அழைக்கப்படுகிறது. [[ஆசியா]], [[ஐரோப்பா]] ஆகிய கண்டங்களின் பெரு நிலப்பரப்பில் மிகவிரியும் ஒரு பெரும் நாடாக விளங்கும் இந்நாட்டின் மொத்த நிலப்பரப்பு 17,075,200 சதுரக் கிலோமீட்டர். [[பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்|பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியலைப் பார்த்தால்]], உருசியாவின் பரப்பளவு அடுத்த பெரிய நாடான [[கனடா]]வின் நிலப்பரப்பைக் காட்டிலும் இது இரு மடங்கு அதிகமாகும். உருசியா, மக்கள்தொகை அடிப்படையில் உலகில் எட்டாவது இடம் வகிக்கிறது. ஏறத்தாழ 143-145 மில்லியன் மக்கள் (2002ன் கணக்கெடுப்பின் படி மக்கள்தொகை 145,513,037) இந்நாட்டில் வாழ்கிறார்கள். ஏறக்குறைய வட [[ஆசியா]] முழுவதையும் மற்றும் 40% [[ஐரோப்பா]] பகுதிகளையும் உள்ளடக்கியது. 11 விதமான கால வேறுபாடுகளை (Time zone) யும், பரந்த வேறுபட்ட நிலப்பரப்பையும் கொண்டது. உருசியா உலகிலேயே அதிகமான அளவு [[காடு|காட்டு]] ஒதுக்கங்களைக் (8,087,900 ச.கிமீ) கொண்டுள்ளதுடன், இங்குள்ள ஏரிகள் உலக நன்னீர் நிலைகளின் பரப்பளவில் நான்கில் ஒரு பாகமாகவும் உள்ளன.<ref name=loc>{{cite web|last=Library of Congress|title=Topography and drainage|url=http://countrystudies.us/russia/23.htm|accessdate=26 December 2007}}</ref> உலகின் மிகக் கூடிய கனிம வளங்களும் ஆற்றல் வளங்களும் உருசியாவிலேயே உள்ளதுடன்<ref>{{cite web|url=http://www.unesco.ru/en/?module=pages&action=view&id=1|title=Commission of the Russian Federation for UNESCO: Panorama of Russia|publisher=Unesco.ru|accessdate=29 October 2010}}</ref> உலகின் மிகப் பெரிய எண்ணெய், இயற்கை வாயு ஆகியவற்றை உற்பத்தி செய்யும் நாடாகவும் விளங்குகிறது.<ref name=IEA-Oil>[http://omrpublic.iea.org/omrarchive/18jan12sup.pdf International Energy Agency – Oil Market Report 18 January 2012]. Retrieved 20 February 2012.</ref><ref name=cia-gas>[https://www.cia.gov/library/publications/the-world-factbook/rankorder/2180rank.html Country Comparison :: Natural gas – production]. CIA World Factbook. Retrieved 17 February 2012.</ref> உருசியா, பின்வரும் நாடுகளுடன் தன் நில எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது (வடமேற்கிலிருந்து தென்கிழக்கு முகமாக): [[நார்வே]], [[பின்லாந்து]], [[எஸ்டோனியா]], [[லத்வியா]], [[லித்துவானியா]], [[போலந்து]], [[பெலாரஸ்]], [[உக்ரைன்]], [[ஜார்ஜியா]], [[அசர்பைஜான்]], [[கசகஸ்தான்]], [[சீன மக்கள் குடியரசு|சீனா]], [[மங்கோலியா]] மற்றும் [[வட கொரியா]].
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1701394" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி