பெரஸ்ட்ரோயிகா
Jump to navigation
Jump to search
உருசியச் சொல் | |
![]() Perestroika poster | |
எழுத்துப்பெயர்ப்பு | perestroika |
---|---|
தமிழ் மொழிபெயர்ப்பு | மறுவடிவமைப்பு |
ஆங்கில மொழிபெயர்ப்பு | restructuring, rebuilding |
பெரஸ்ட்ரோயிகா அல்லது மறுவடிவமைப்பு என்பது சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியில் 1980களில் கொண்டுவரப்பட்ட ஒரு அரசியல் இயக்கம். சோவியத் தலைவர் மிகேல் கார்பச்சேவ் இதனுடன் பெரிதும் தொடர்புடையவர். சோவியத்தின் அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கையை மறுவடிவமைப்பு செய்வதாய் இது அமைந்தது.
பெரஸ்ட்ரோயிகாவே சோவியத் கூட்டமைப்பு உடையக் காரணமாக சொல்லப்படுகிறது. அது மட்டுமின்றி பனிப்போர் முடிவு மற்றம் கிழக்கு ஐரோப்பாவில் 1989 ஆம் ஆண்டில் ஏற்பட்ட புரட்சிக்கும் இது காரணமாக சொல்லப்படுகிறது.